Advertisement

பேருந்து மோதி பெண் பலி

தாம்பரம் : சாலையை கடந்து சென்ற பெண், அரசு பேருந்து மோதியதில்

பலியானார்.
காஞ்சிபுரம், பாலுசெட்டிசத்திரம் பகுதியை சேர்ந்தவர், தெய்வானை, 47; சென்னை, தாம்பரத்தில் தங்கி, கட்டட வேலைகள் செய்து வந்தார்.
இவர், நேற்று காலை, வேலைக்கு செல்வதற்காக, தாம்பரம் ரயில் நிலையம் எதிரில், ஜி.எஸ்.டி., சாலையை கடக்க
முயன்றார்.
அப்போது, திருச்சியில் இருந்து கோயம்பேட்டிற்கு சென்ற அரசு பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தெய்வானை மீது மோதியது. அதில் பலத்த காயமடைந்த அவர்,
சம்பவ இடத்திலேயே பலியானார்.
போக்குவரத்து புலனாய்வு போலீசார், சடலத்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய, அரசு பேருந்து ஓட்டுனரான, திருச்சி, துறையூரைச் சேர்ந்த, ராஜேந்திரன், 49, என்பவரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement