Advertisement

பூண்டிக்கு நீர் வரத்து

ஆந்திர அணை திறக்கப்பட்டு உள்ளதால், பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.ஆந்திராவில் உள்ள அம்மாபள்ளி அணை நிரம்பியதால், அதிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது, கொசஸ்தலையாற்றின் வழியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, பூண்டி ஏரிக்கு வரத் துவங்கி உள்ளது. நேற்று முன்தினம், வினாடிக்கு, 40 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று, 121 கன அடியாக அதிகரித்தது. தற்போது, பூண்டி ஏரியில், 0.15 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.சோழவரம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், நேற்று முன்தினம், 1.5 செ.மீ., மழை பதிவானது. இதனால், ஏரிக்கு வினாடிக்கு, 35 கன அடி நீர் வரத்து கிடைத்தது. இதே போல், புழல் ஏரிக்கு, வினாடிக்கு, 66 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு, 32 கன அடி மழைநீர் வரத்து கிடைத்தது. நான்கு ஏரிகளிலும் சேர்த்து, நீர் இருப்பு, 0.90 டி.எம்.சி.,யை எட்டியுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement