Advertisement

ரியல் எஸ்டேட் துறைக்கும் ஜி.எஸ்.டி.,; அமைச்சர் அருண் ஜெட்லி தகவல்

வாஷிங்டன்: ''மிக அதிகளவு வரி ஏய்ப்பு மற்றும் ரொக்கம் புழங்கும், ரியல் எஸ்டேட் துறையை, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையின் கீழ், கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது,'' என, மத்திய நிதிஅமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அமெரிக்கா சென்றுள்ள, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, ஹார்வர்டு பல்கலையில் நடந்த கருத்தரங்கில்
பேசியதாவது:

நாடு முழுவதும், ஒரே சீரான வரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி., ஜூலை, 1 முதல்
அமலுக்கு வந்துள்ளது. ரியல் எஸ்டேட் துறையை யும், ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வர வேண்டும் என, பல மாநிலங்கள் வலியுறுத்துகின்றன. அதே நேரத்தில், சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக, அசாம் மாநிலம், கவுகாத்தியில், நவ., 9ல் நடக்கும், ஜி.எஸ்.டி., கவுன்சிலின், அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். இது, வீடு வாங்குவோருக்கு, மிகப்பெரிய பலனை அளிக்கும். நிழல் பொருளாதாரத்தின் அளவை குறைக்கும். ரியல் எஸ்டேட் துறையில் தான், அதிகளவு வரி ஏய்ப்பு, ரொக்க பரிவர்த்தனை நடக்கிறது. அத்துறையை, ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வருவதால், பொருளாதாரத்துடன், ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சி அடையும்.

நாட்டில்மேற்கொள்ளப்படும், பொருளாதார சீர்திருத்தங்களின் அடிப்படையாக, செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் அமைந்துள்ளது.இது, 'டிஜிட்டல்' பரிவரித்தனை உட்பட, பல்வேறு நீண்ட கால பலன்களை அளிக்கும். வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், மக்களிடம் உள்ள பணத்தை பறிக்க வேண்டும் என்பது, அரசின் நோக்கமல்ல.

இத்தனை காலங்களாக, எவ்வளவு மதிப்புள்ள ரூபாய் இருந்தது; அது யாரிடம் உள்ளது என்பது தெரியாமல் இருந்தது. தற்போது, யார் யாரிடம், எவ்வளவு பணம் உள்ளது என்பது தெரிய வந்து உள்ளது.ஆனால், செல்லாத ரூபாய் நோட்டு திட்ட அறிவிப்பின், உண்மை நோக்கத்தை, யாருமே புரிந்து கொள்ள வில்லை. அதனால் தான், அது குறித்து விமர்சிக்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
 

வாசகர் கருத்து (16)

 • karthikeyan -

  இருக்குற வரியை வசூல் பண்ணு. மார்வாடி பசங்க வரியே கட்டறதில்லை.

 • Prabaharan - nagercoil,இந்தியா

  நல்லது தான். ஆனால் சிலை வைப்பதற்கு அரசு பணத்தில் இருந்து 2000 கோடி , 3000 என இவர்கள் இஷ்டம் போல் செலவு செய்கிறார்களே? இதற்கு எல்லாம் எந்த கட்டுப்படும் இல்லை?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  எஸ்டேட் வேண்டாம் விவசாயம் பண்ணணும்னு எழுதும் அறிவாளி ப்ளாட்பாரத்தில் வசிக்கிறாரா? மாநில அரசுகளின் வருவாயில் மத்திய அரசு கைவைப்பது புரியாமல் வெரிகுட் என்று பிஜேபி பக்தர்கள் கை தட்டுகிறார்கள்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  ஜி.எஸ்.டி யின் பலன் எதுவும் இன்னும் முழுமையாக தெரியவில்லை, இன்னும் பல தடைகளை தாண்ட வேண்டிய சூழல், பொதுவாக பலமுனை வரிவிதிப்பு பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது, இன்னும் எளிமைப்படுத்த வேண்டும், இரண்டே ஸ்லாப் அல்லது ஒரே ஸ்லாப் இருந்தால் நலம், ஒரேயடியாக மக்களை நசுக்கும் விதத்தில் இருப்பது, வெறுப்பை ஏற்படுத்துகிறது, உயர் பணமதிப்பு நீக்கம் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்த சூழலில், அரசுக்கு பல வழிகளில் நெருக்கடி அதிகரித்துள்ளது, இன்னும் சிறப்பாக செயல்படவேண்டிய நேரம்,

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ரியல் எஸ்டேட் துறைக்கும் ஜி.எஸ்.டி.... விவசாயத்தை பாதிக்கும் இந்த ரியல் எஸ்டேட் துறை இந்தியாவிற்கு தேவை இல்லை... ரியல் எஸ்டேட் முதலாளிகள் விவசாயத்தை அழித்தது போதும்... விவசாயத்தை வாழ வழி செய்யுங்கள்...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்த வேண்டும்... அதை செய்யாமல் GST க்குள் கொண்டுவந்தால் வரி ஏய்ப்புதான் அதிகம் இருக்கும்... கறுப்புப்பணம் உருவாக ரியல் எஸ்டேட் ஒரு முக்கியமான காரணி...

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  பாஜக காரர்களுடைய பினாமிகள் விற்கும் பெட்ரோல், டீசல் முதலியவற்றுக்கு ஜிஎஸ்டி விதிக்க முடியவில்லை. வரும் காலத்தில் தாய்ப்பாலுக்கு கூட ஜிஎஸ்டி விதிக்க வாய்ப்புண்டு.

 • Rajan - chennai,இந்தியா

  நாசமா போச்சு... நீங்களும் GST உம்...

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  ரியல் எஸ்டேட்டில் கருப்பு பணம் இன்றுவரை ஜொலிக்கிறது. பூனைக்கு மணி கட்ட ஜெட்லீ தயாரா?

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  யாரிடம் எவளவு பணம் உள்ளது என்று தெரிவதெற்கு ஏழைகளையும், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களையும் ஏன் பாடாய் படுத்தினீர்கள்? வருமான வரி துறை, அமலாக்க துரையெல்லாம் புடுங்குவதற்க இருக்கின்றன? கேட்பவன் கேனைப்பயலா ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement