Advertisement

காவி நிறத்துக்கு மாறும் உ.பி.,

லக்னோ :உ.பி., மாநிலம், படிப்படியாக, காவி நிறத்துக்கு மாறி வருகிறது. லக்னோவில் நேற்று நடந்த விழாவில், காவி நிறமுடைய அரசு பஸ்களை, முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. எப்போதும் காவி உடை அணியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இருக்கையில், காவி நிறத்திலான துண்டுகள் வைக்கப்பட்டன.

அதன்பின், துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு, அரசு சார்பில் வழங்கப்படும் புத்தகப் பைகள், காவி நிறத்தில் வழங்கப்பட்டன. சமீபத்தில் நடந்த பல்வேறு அரசு விழாக்களுக்கான மேடைகளும், காவி நிறத்தில் அமைக்கப்பட்டு இருந்தன. அரசு வழங்கும் சான்றிதழ், விழா தொடர்பான அழைப்பிதழும், காவி நிறத்தில் அச்சிடப்பட்டன.

அரசின், முக்கிய அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் அடங்கியடைரிகளும், காவி நிறத்தில் இருந்தன. தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அடையாள அட்டைக்கான கயிறும், காவி நிறத்தில் இருந்தது.

இந்நிலையில், மாநில போக்குவரத்து கழகம் சார்பில், கிராம பகுதிகளுக்கு, 50 புதிய பஸ்கள் அறிமுகம் செய்யும் விழா, லக்னோவில் நேற்று நடந்தது. இதில், விழா மேடை மட்டுமல்ல, பஸ்களும் காவி நிறத்தில் இருந்தன. பஸ்களை அழகுபடுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த பலுான்களும், மாலைகளும், காவி நிறத்தில் இருந்தன.

உ.பி., மக்களுக்கு இது ஒன்றும்புதிதல்ல. மாயாவதியின், பகுஜன் சமாஜ் ஆட்சியின் போது, இவையெல்லாம் நீல நிறத்தில் இருந்தன. அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சியின் போது, சிவப்பு ,பச்சை நிறங்களில் இருந்தன. தற்போது, இவை அனைத்தும்காவி நிறத்துக்கு மாறி வருகின்றன.இது குறித்து, மாநில அமைச்சர், ஸ்ரீகாந்த் சர்மா கூறியதாவது:

எங்களுக்கு அனைத்து நிறங்களும் பிடிக்கும். காவி நிறம், தியாகத்தையும், வீரத்தையும் குறிக்கிறது. நம் தேசியக் கொடியிலும், காவி நிறம் உள்ளது.காவி நிறத்தை தான் பயன் படுத்த வேண்டும் என, அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. பஸ் முதல், புத்தகப் பை வரை, காவி நிறத்தில் அமைந்தது எதேச்சையானது; இது திட்டமிட்டதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து (79)

 • Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா

  உத்திரபிரதேசம் தன்னுடைய பாரம்பரிய இந்திய கலாச்சாரத்திற்க்கு மாறி வருகிறது

 • கு.சந்திரசேகரன் -

  சிறுபான்மையினருக்கு பயப்பட வேண்டிய நிலை இந்தியாவில் மட்டுமே நடக்கும்

 • கு.சந்திரசேகரன் -

  சிறுபான்மையினருக்கு பயப்பட வேண்டிய நிலை இந்தியாவில் மட்டுமே நடக்கும்

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  தமிழகத்தில் பச்சை நிறமும், மஞ்சள் நிறமும் மாற்றி மாற்றி வருவது போல உத்திர பிரதேசத்தில் பச்சை மற்ற கலர்கள், இப்போது காவி நிறத்தில் மாறி வருகிறது. இந்திய தேசிய கொடியின் கலரை உடைய காங்கிரஸ் அதை காங்கிரஸ் கலர் என்றே கூறுகிறார்கள். இன்றும் வீட்டு விசேஷங்களில் கல்யாண பந்தல் போடும் கடை காரர் காங்கிரஸ் கலரை தான் போடுகிறார். ஆக கலர் ஒன்றும் பெரிய விழயமில்லை. காவி மட்டும் தான் விஷயம். காவி மட்டுமே வேண்டாம். பச்சைக்கு எப்போது மே ஜே. இல்லையென்றால் அவர்கள் ஒட்டு கிடைக்காது என்கிற பயம்.

 • sundaram - Kuwait,குவைத்

  நம்மூர்ல ஒருத்தரு முதலமைச்சரான இருந்தப்போ எல்லாமே மஞ்சள் நிறத்துல இருந்திச்சு. விழா மேடைகள் பொன்னாடைகள் சால்வைகள் தோரணங்கள் ஏழைகளுக்கு ஒரு ரூபாய் அரிசி வழங்கிய பை இப்படி இன்னும் பலப்பல.

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  முட்டாள்கள் மட்டுமே உலகம் தங்களுடையது என்று நம்பினால் யாருக்கும் பயனில்லை .. தனது தியாக வாழ்வில் சந்நியாசியாக வாழும் சாமிக்கு உலக ஆசை இருப்பது நியாயமில்லை .. போலி சாமியார்களுக்கு விதிவிலக்கு .. சங்கரமடத்தில் நம்நாட்டில் எத்தனையோ ஜீவிகள் உலக ஆசையற்று காவி போர்த்தி இருப்பதில் நியாயம் இருக்கிறது .. இந்த சாமி நல்ல போட்டுத்தாக்கி வளர்ந்து அரியணை ஏறியதில் மனநல பாதிப்பு இருப்பது சகஜமே .. கொஞ்ச காலம் வாழும் மனிதன் தனது நிலையை உணராமல் இருப்பது பரிதாபத்திற்குரியது தான் .

 • David Thomas - Tirunelveli,இந்தியா

  காவியம் படைக்கிறார்கள்.

 • mukundan - chennai,இந்தியா

  நிறத்தை பார்த்து இவர் செய்த விஷயங்களை மறைக்கிறீரே மக்களே. நிறத்தில் வேண்டும் என்றால் காவி இருக்கட்டும், மக்களுக்கு நல்லது நடந்தால் நன்மை தானே.

 • தாண்டவக்கோன் - Belgaum,இந்தியா

  யதா பிரதமர், ததா முதல்வர். மக்களுக்கு மட்டும் இவர்களிடமிருந்து விமோட்சனமில்லை.

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  காவியின் அருமை கயவர்களுக்குத் தெரியாது. நாடு முழுவதும் காவி படர வேண்டும், இதுவே நம் நாட்டுக்கு நல்லது..

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  கொல்கத்தாவில் வெள்ளையும் நீலமும் மம்தாவால் உத்தரபிரதேசத்தில் காவி நிறம். பச்சை நிறம் ஓல்டு ஹைதராபாத்தில்???

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  எந்த கலரையாச்சும் அடிச்சு தொலைங்க.. மக்களால் தேர்ந்தெடுத்து கஷ்டப்பட்டு ஜெயிச்சா உங்களுக்கு வருத்தம் தெரிச்சிருக்கும் EVM ஆல ஜெயிச்சவங்ககிட்ட என்னத்த சொல்ல

 • joshua - doha,கத்தார்

  Let all children become swamiji(sanyasi), and make all india sanyasi country. fools and mads are ruling what we can do?

 • vignesh - karaikudi,இந்தியா

  நல்ல விஷயம்... வாழ்த்துக்கள்... தொடரட்டும்...

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  பெயிண்ட் அடித்தது பிரச்சனை இல்லை .. ஏதோ காவி நிறம் நல்லதா கெட்டதா என்ற போக்கில் விவாதம் போகிறது .. படு மோசமான நிலையில் இருக்கும் அந்த மாநிலத்தில் எதுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்று தான் பிரச்சனை .. கலவியின் தரம் படு மோசம் யுபியில் .. ஆப்பிரிக்கா நாடுகளுக்கு நிகரில் கல்வியும் மருத்துவமும் இருக்கிறது .. ஆனால் பெயிண்ட் அடித்து கொண்டு இருக்கிறார்கள் .. இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்விக்கும் , மருத்துவத்துக்கும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது .. சரி நாம பெயிண்ட் அடிப்போம் என்று இறங்கிவிட்டார்கள் .. தெரிந்ததை செய்கிறார்கள் ..

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  போலிகள் எந்த வேஷம் போட்டாலென்ன. கலரா சோறு போடப்போகிறது. ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும். நாத்திகவாதிகளுக்கு இயற்கை மேலிருக்கும் நம்பிக்கை கூட இந்த போலிகளுக்கு இயற்கை மீதும் கிடையாது இறையின் மீதும் கிடையாது. அன்பே இல்லாதவர்களுக்கு பக்தி எங்கிருந்து வரும்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  மக்களின் நலனை கொஞ்சமும் கண்டு கொள்ளாத மாபாவிகளின் ஆட்சியில் இப்படித்தான் நடக்கும்..

 • அறிவுடை நம்பி - chennai,இந்தியா

  இந்தாளு ஆக்ஸிஜன் மேட்டர் தவிர மற்ற எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி மக்களை திசை திருப்புகிறார்.. உபி மக்கள் இவரை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்..

 • அறிவுடை நம்பி - chennai,இந்தியா

  பஸ் டயர் வண்ணத்தையும் காவியாக மாற்ற வேண்டியதுதானே... பாவிகளின் வண்ணமே காவிதான்... பல உதாரணங்கள் உண்டு...

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  எந்த நிறத்துக்கும் மாறட்டும் ..

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  ஜெ ஆட்சிக்கு வந்ததும் பச்சை, கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் மஞ்சள் , இதெல்லாம் அதிகாரிகள் ஆளுபவரை காக்கை பிடிக்க செய்யும் மாயாஜாலங்கள். உண்மையில் இவர்கள் யாரும் அம்மாதிரிவர்ணங்கள் அனைத்து விஷயங்களிலும் வேண்டும் என்று பிடிவாதமோ, கட்டளையோ பிறப்பிக்கவில்லை. இம்மாதிரி அதிகாரிகளின் ஜால்றா சத்தத்தால் ஆளுபவர்களின் பெயர் கெடுவது மட்டுமே உண்மை.

 • Chitra - Chennai,இந்தியா

  காவி நம் நாட்டின் பெருமையான அடையாளம். அதை குறியீடாகக் கொள்வது இங்குள்ள பெரும்பான்மை மக்களுக்கு மிகவும் பெருமை. காவி என்ற வார்த்தையை ஏதோ இந்துக்களுக்கு எதிரான வசவு போல நினைத்து இங்கு பயன்படுத்தி வரும் பச்சைகளும் வெள்ளைகளும் உண்மையிலேயே இந்த தளத்தில் ஒரு மிக வலுவான Hindu consolidation and unity ஏற்படத்தான் உதவுகிறார்கள். ஒவ்வொரு முறையும் காவி என்ற சொல்லை இங்குள்ள மைனாரிட்டிகள் சொல்லும் போதும் தெரியும் பயமும் பதற்றமும்...ஆஹா happy...

 • Vamanan Nair - சான் ஹோஸே , கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

  இங்க தமிழ் நாடே காவி நிறத்துக்கு மாறிட்டிருக்கு. உ பி மாறுவது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை.

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  தேசிய கொடியில் இந்த காவி இல்லை.. safron கலர் என்று படித்த ஞாபகம்... காவி என்று சத்தியமாக படிக்க வில்லை.. எங்கே இருந்து இந்த காவி இந்தியாவுக்கு வந்ததோ ?

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  பஸ் முதல், புத்தகப் பை வரை, காவி நிறத்தில் அமைந்தது எதேச்சையானது இது திட்டமிட்டதல்ல. இவ்வாறு அவர் கூறினார். - அது சரி..

 • Prabaharan - nagercoil,இந்தியா

  அடுத்தது தேசிய உடை காவி? மனதில் காவி (தியாகம்) இல்லையே. உடையில் மட்டும் தான். வெளிவேஷம்?

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  தமிழக அரசு நிகழ்சிகளும் பச்சை நிறத்திலிருந்து காவிக்கு மாறிக்கொண்டிருக்கின்றன.. நாங்க எல்லாம் காவிக்கு மாறிட்டோ,, நீங்க எப்ப மாறப்போறீங்க? இல்லை, இல்ல .. ஏமாறப் போறீங்க இல்லே, எப்ப.. மாற.. போறீங்க?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  எந்த சின்னத்தில் அமுக்கினாலும் அவங்களுக்கு விழும், அதனால் பொறுக்கவேண்டாம் போல.

 • Mal - Madurai,இந்தியா

  Yogi has done a lot of good things... For his people... Kanyakumari crosses ellam pesa thaguthiyae illa...

 • ArunagiriSundharamurthy -

  அவர்கள் யாரும் காவி கலருக்கு மாற சொல்ல வில்லை எல்லா மாநிலத்திலும் இருக்கும் அடி வருடிகள் அதிகாரிகளின் லீலைகள்

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இதனால் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று நம்புகிறார் என்று புரியவில்லை, ஒரு நல்ல ஆட்சியாளர்களுக்கு இதில் எல்லாம் எந்த பெருமையும் இல்லை, தரமான நிர்வாகம் அதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள், கடந்த ஆட்சிகள் ஒரு விதத்தில் இம்சை என்றால் இப்போதைய ஆட்சியினால் வேறு மாதிரியான இம்சை, மக்களுக்கு கிடைத்தது என்னவோ ஒன்றும் இல்லை

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஜெ க்கு பச்சை என்றால் யோகிக்கு காவி....

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  போங்கப்பா , குத்தம் சொல்ல வந்துட்டானுங்க இதைப்போய் பெருசா எடுத்துக்கிட்டு. நல்ல விஷயத்துக்கு, தியாகத்தின் அடையாளமான நிறத்தை வைக்கிறாங்க. இங்கு மாதிரி நாட்டை கெடுத்தவர்களின் தனி நபர் துதி, இல்லையே. தெரு ,சந்து , பொந்து கக்கூசுக்கு கூட பெரியார், அண்ணா, எம்ஜியார், கலைஞர், ன்னு சொல்லி நாறடிக்கலையா அப்புறம் எதுக்கெடுத்தாலும் அம்மா புராணம்னு பாடி காதை புளிக்க வைக்கலையா?

 • ushadevan -

  ஆட்சியின் செயல்பாடு வண்ணத்தில் இல்லை.முன்னேற்றமான எண்ணத்தில் தான் உள்ளது.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ஆந்திராவில் Rajasekhara ரெட்டி திருமலையில் சர்ச் கட்ட முயற்சி செய்து பார்க்க வில்லையா பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

 • krishnan - Chennai,இந்தியா

  சிவப்பு என்றால் வீரம். காவி என்றால் அழுக்கு.

 • குண்டலகேசி - chennai,இந்தியா

  //Raman - kottambatti, இந்தியா// இந்த கொட்டாம்பட்டி கோட்டிக்காரனுக்கு ரொம்பதான் கவலை...

 • Raman - kottambatti,இந்தியா

  அப்போ அடுத்த பிரதமர் நம்ம சாமியார் தானா? பிறகு மஸ்தானின் கதி? மறுபடியும் டீ ஆத்த போகவேண்டியதுதானா ???

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  நல்ல விஷயம். இப்பொழுது வருவார்கள் பாருங்கள்.. மேல் ஜாதி சதி, காவி என்று கூறிக்கொண்டு.. ஆனால் அவர்கள் யார் என்று மறந்துவிட்டு பேசுகிறார்கள். ஐந்து லட்சம் ஷியா மற்றும் யாஜிகிடி சிறுபான்மையினரை கொலை செய்த பிரிவிவை சார்ந்தவர்களும், ஐந்து லட்சம் சிறுபான்மை கிறிஸ்தவர்களை கொன்ற பெரும்பான்மை பிரிவை சேர்ந்தவர்களும், ஏழை தாழ்த்தப்பட்டவர்களை வைத்து தங்கள் வீட்டு கழிவுநீர் தொட்டியை/சாக்கடையை சுத்தம் செய்துவிட்டு கையில் ஜாதி சான்றிதழ் வைத்துக்கொண்டு அடுத்தவர்களை குற்றம் சொல்பவர்களும் தான்..

 • Anandan - chennai,இந்தியா

  மக்கள் நலத்தில் கவனம் வைக்காத முட்டாள் முதலமைச்சர்.

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  What you expect from extremists rule?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  காவிதான் இந்த நாட்டின் வண்ணம்... இந்தியக்கொடியில் கூட காவி இருக்கக்கூடாது என்று ஆரம்பிப்பார்கள் போல் இருக்கிறது.. செக்குலரிஸம் என்று பெயரில் அதை மறைக்க 70 ஆண்டுகளாக முயன்று அதில் முழுவதுமாக ஓட்டுப்பொறுக்கிகள் வெற்றி பெறவில்லை...

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  இதெல்லாம் பெரிய விஷயமாப்பா முன்னொரு காலத்தில் தமிழ் நாட்டில் தினமும் "உளியின் ஓசை" எல்லோரும் பார்க்கவில்லையா? இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்

 • கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா

  பஸ் முதல், புத்தகப் பை வரை, காவி நிறத்தில் அமைந்தது எதேச்சையானது இது திட்டமிட்டதல்ல. இவ்வாறு அவர் கூறினார். சரிதான். சிவப்பு நிறத்தில் பெயிண்ட் அடித்திருப்பார்கள். அது காவி நிறமாக மாறி விட்டது. அப்புறம் காவி நிறமும் வெளுத்து வெள்ளையாகி விடும்.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  ஒரு காலத்தில் குத்தாட்டம் போட்டு திரிந்தவர் காவி உடையை போட்டு தன்னை சாமியாராக (போலி?) காட்டிக் கொள்பவர் எல்லாம் முதல்வர் ஆனால் இதுதான் கதி. இந்திய மக்கள் "நாம் ஏன் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைந்தோமோ?" என்று கவலைப்பட வைத்த பெருமை பாஜக வையே சாரும்.

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  உ.பி. மக்கள் என்னவோ எதிர்பார்த்து நல்லா வாங்கி கட்டிக்கிட்டாங்க. இப்போ இந்த மாநிலத்துக்கு ஒரு மறு தேர்தல் வச்சா கூட 'படுகுழி' பாஜககாரனுங்க கூண்டோட 'கைலாசம்' போயிடுவானுங்க.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  அதிமுக போஸ்டர்களும் பச்சை நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாறிவிட்டன. பழனி செய்ததை தான், யோகி செய்கிறார். மோடிக்கு எந்த நிறம் பிடிக்குமோ, அது தான் பழனியின் நிறமும். காவி நிற துண்டை, சீக்கிரம் பழனி அணிவார்.

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  சாமியாரிடம் முட்டாள்தனமான முடிவுகளை ஓட்டுப்போட்ட மக்கள் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்., மதத்தின் மீது உணர்வு இருக்கட்டும் வெறி கூடாது.,

 • Appu - Madurai,இந்தியா

  காவினு பதிஞ்சா நெறய சொம்பணுக காண்டாவுராணுவ..இப்ப யோகியே காவி நெறத்துக்கு மாநிலத்தை மாத்திட்டு இருக்காரு..இதுக்கு என்ன சொல்லப்போறானுவ காவி அடிமைக?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement