Advertisement

ஆருஷி வழக்கு: தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. அப்பீல் செய்ய முடிவு


அலகாபாத்: ஆருஷி கொலை வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2008-ம் ஆண்டு உ.பி. மாநிலம் நொய்டாவில் ஆருஷிதல்வார் என்ற 14 வயது சிறுமி, வீட்டு வேலையாள் ஹேம்ராஜ் ஆகியோர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். நாட்டை அதிர வைத்த இந்த வழக்கில் பெற்றோர் ராஜேஷ்தல்வார் தம்பதியினருக்கு 2013-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் தல்வார் தம்பதியினர் தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.இதில் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். போதிய ஆதாரங்கள் சாட்சியங்கள் இல்லை எனதீர்ப்பில் கூறப்பட்டது.


இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. மேல் முறையீடு செய்ய உள்ளது. சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கையில், தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் மேல் முறையீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படும். தீர்ப்பு வெளியான 90நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்பதால் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம் .இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • Siva - Aruvankadu,இந்தியா

  ஏற்கனவே நீதி வழங்கிய நீதிபதி??????????₹₹

 • Raj - Chennai ,இந்தியா

  போதும்டா.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  சில நிகழ்வுகள் நமக்கு மனதிற்கு எதோ செய்கின்றன. ஏன் அப்பீல் செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. எந்த வகையிலும் பெற்றோர்கள் குற்றவாளிகள் என்று சான்றுகளோ நம்பத்தகுந்த சாட்சிகளோ கைரேகைகளோ எதுவும் இல்லை. கவுரவ கொலை செய்தார்கள் என்று கூறுகிறார்கள் சரியாக தெரிந்து கொள்ளாமலே. ஒரே ஒரு சந்தேகம் மட்டுமே மனதிற்குள் எழுகிறது. அந்த வேலைக்காரன் அவளை கொன்றுவிட்டு அது தெரிந்து விடும் என்ற பயத்தில் மறுநாளே தற்கொலை செய்து கொண்டானோ என்று. நமது உளவு அமைப்புகள் விசாரணை அமைப்புகள் நவீன படுத்தப் படவேண்டும் என்று தெரிகிறது. இது சம்பந்தமான பாடத்திட்டங்கள் எங்கும் இந்தியாவில் இல்லை. குற்றம்சார்ந்த அறிவியல் முதுநிலை படிப்பு மதராஸ் பல்கலையில் சொல்லித் தர படுகிறது அங்கும் துப்பறிவு சம்பந்தமான அறிவியல் பகுதி இல்லை என்று தெரிகிறது. சிறையில் இருந்த கால கட்டத்தில் (அந்த பெற்றோர்கள் தவறு செய்திருந்தால்) நிச்சயம் அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் இருக்கும். அவர்கள் தாங்கள் தவறு செய்யும் பட்சத்தில் மகளை இழந்து ஏன் வாழவேண்டும் என்று பின்னாளிலாவது நினைத்திருப்பார்கள். குறைந்த பட்சம் யாரவது ஒருவருக்காவது மனம் பாதித்து விடுமல்லவா? தவறு செய்திருக்க வாய்ப்பில்லை என்று தான் தெரிகிறது. உண்மை கண்டறியும் சோதனைகள் கூட அவர்களுக்கு இருவருக்குமே எதிராக இல்லை. சிறுமியோ பாலியல் பலாத்காரம் செய்ய படவில்லை என்றும் சொல்கிறார்கள். மனோ தத்துவ ரீதியாக கூட சந்தேகம் கொள்ள இடமில்லை. எதோ சில விசாரணை அதிகாரிகளுக்கு உள்மனம் குற்றம் சாட்ட பட்டவர்களுக்கு எதிராக இருந்திருக்கிறது என்று நம்ப இடமிருக்கிறது. பத்துவருடங்களாக நெஞ்சழுத்தம் மிக்கவர்களாக இருப்பார்களா அவர்கள்?. நம்ப இடமில்லை. கொடூர நெஞ்சழுத்தம் மிக்கவர்களாக இருந்தார்களென்றால் கண்டுபிடிக்கவே முடியாது தான். உண்மையிலேயே தவறிழைக்காதவர்களாக இருந்தால் நமது விசாரணை அமைப்புகள் சரி இல்லை அது முழுதும் மாறவேண்டும் என்று கோரவேண்டும். தற்போதைய எனது மன ஓட்டம் என்ன வென்றால். விடுதலை செய்தவர்களை விட்டு விடலாம். அவர்கள் அனுபவித்த தண்டனை போதும். மனசாட்சி இனி தண்டனை தரட்டும் தவறிழைத்திருந்தால். இறைவன் மீது நம்பிக்கை செலுத்தி அவன் விளையாட்டில் அவன் பார்த்து கொள்ளட்டும் என்று விட்டு விடவேண்டியது தான். அதே நேரம் அரசு செய்ய வேண்டிய கடமை உள்ளது. அவர்களை தொடர்ந்து கவனிக்கலாம். அவர்களின் பேச்சுக்கள் நடவடிக்கைகளை ரகசியமாக கண் கவனிக்கவேண்டும். விடுதலை அடைந்தவர்கள் உடனே சிலவற்றை தவறிழைத்தவர்கள் நிச்சயம் செய்வார்கள் அதை கண்காணிக்கவேண்டும். விசாரணை அமைப்புகள் அவர்களை நிரந்தர ஜாமினில் வந்தவர்களாக கருதி கொள்ளட்டும். ஆருஷியின் பெற்றோர்கள் பார்வையில் உண்மையில் தவறிழைக்காமல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் தங்கள் மகளை தாங்களே கொன்றுவிட்டதாக ஆயுள் தண்டனையோ மரண தண்டனையோ அனுபவிப்பது கொடுமையிலும் கொடுமை. ஆகையால் சமுதாயம் தங்களை தவறாக நினைப்பதை மாற்றவாவது நீதியின் தீர்ப்பை அவர்கள் பெற்றே தீரவேண்டிய நிலை. அதற்காக கூட நெடிய போராட்டம் செய்திருக்கலாம். பெண் சிறுமி என்ற கோணத்தில் ஆருஷி வழக்கு எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், சில தீர்ப்புகளை நினைத்து பார்ப்பது எதிர்காலத்தில் நாம் இன்னும் மிக உயர்ந்த பதவிக்கு செல்லும்போது அந்த பதவியில் இருந்து கொண்டு நல்ல முடிவுகளை எடுக்க மனதை பக்குவப படுத்தும் என்பதாலும் இது போன்ற வழக்குகளை படிக்கவேண்டியிருக்கிறது. இந்த வழக்கு சம்பந்தமான செய்திகளை படிக்கும் போது என் மனதில் எங்களை பிரிந்து வைகுண்டம் சென்ற தந்தை சொன்ன சில கதைகள் அதில் குறிப்பாக கண்ணகியின் முற்பிறப்பு கதையாக சொல்லப் படும் பழையனூர் நீலி கதையும் வேளாளர்களின் மீ உயர் நீதியும் மனதில் தோன்றுகிறது. இது போன்ற செய்திகளை ஒட்டி தினமலர் ஆசிரியரின் தலையங்கத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். பாரத மாதாவின் திருவிளையாடல் என்று மனம் சென்று விடட்டும்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  They are already punished for life. சி.பி.ஐ இதை அப்பீல் செய்து பணத்தை வீணடிக்கவேண்டாம். அவர்களுக்கு தண்டனை உயிருடன் இருப்பதே. பாவம். இந்த சோகம் யாருக்கும் வரக் கூடாது தான் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement