Advertisement

தீபாவளிக்கு வரும் 15 முதல் 17 ம் தேதி வரை 11,645 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து அக்.,15 முதல் 17-ம் தேதி வரையில் 11,645 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: தீபாவளியை முன்னிட்டு சென்னை கோயம் பேடு பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை மதுரை , சேலம் ,கோவை,எர்ணாகுளம், பெங்களூரு செல்லும் பஸ்கள் புறப்படும். அண்ணாநகர்மேற்கு பணிமனையில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் புறப்படும் . பூவிருந்தவல்லிபஸ் நிலையத்தில் இருந்து வேலூர் ஆற்காடு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படும். தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக செல்லும் பஸ்கள் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை பணிமனையில் இருந்து இ.சி.ஆர் வழியாக கடலூர் , சிதம்பரம் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படும். ஆம்னி பஸ்கள் நசரத்பேட்டையில் இருந்து ஊரப்பாக்கம் வழியாக தங்களின் ஊர்களுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • rajarajan - bangalore,இந்தியா

    11,645 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் இதனை நாட்களாக எங்கே இருந்தது. பொய்யை திரும்ப திரும்ப இந்த அரசு வெட்கமே இல்லாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறது. சுதந்திர தின விடுமுறையின்போதும் இதேபோன்று 11200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கூறினார்கள். ஏற்கனவே அதே ரூட்டில் ஓடிக்கொண்டிருந்த பஸ்களில் "சிறப்பு பேருந்து" என்ற ஸ்டிக்கரை ஒட்டி டிக்கட் விலையை கூட்டி மக்களிடமிருந்து கொள்ளையடித்ததுதான் நடந்தது. இப்போதும் அதுவே தொடரும். இத்தனை பஸ்களையும் அனைத்து மாவட்டங்களுக்கும் நிரந்தரமாக பிரித்து அனுப்பினால் விழாக்களுக்கு சிறப்பு பேருந்து விடவேண்டிய அவசியமே இருக்காது. ரோடு முழுவதும் பஸ்களாகத்தான் இருக்கும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement