Advertisement

ஊதிய உயர்வு ஏமாற்ம்: நாளை ஜாக்டோ-ஜியோ அவசர ஆலோசனை

சென்னை; தமிழக அரசு அறிவித்த ஊதிய உயர்வு குறித்து நாளை ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பு அவசர ஆலோசனை நடத்துகிறது.


தமிழக அரசு ஊழியர் சம்பளம், 10 முதல், 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்று, சம்பள உயர்வு வழங்க, தமிழக அமைச்சரவை கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்தது. இந்நிலையில் நாளை அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் பிற்பகல் 2 மணிக்கு அவசர ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  என்னது. லஞ்சம் வாங்ககூடாதா அது எங்க பிறப்புரிமையா அரசு வேற மது விலையை ஏற்றிவிட்டது லஞ்சம் வாங்காம நாங்க எப்படி குடிக்கிறது

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  அரசு பள்ளிகளில் மாணவர்களே இல்லை என்றால் கூட நல்ல சம்பளம் மட்டும் மாதம் தோறும் சரியாக வந்துவிடுகிறது. ஆரம்ப பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தில் கால் பங்கு கூட கிடைப்பதில்லை, பொறியியல் கல்லூரி தனியார் ஆசிரியர்களுக்கு. எம் ஈ, எம் டெக், பிஎச்டி கூட முடித்திருக்கிறார்கள். தனியார் கல்லூரிகளில் எந்த கல்லூரிகளிலும் அரசு கல்லூரி ஆசிரியர் வாங்கும் சம்பளத்தில் பாதி அளவிற்கு கூட எந்த ஆசிரியருக்கும் கிடைப்பதில்லை. பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு எட்டாயிரம் முதல் பதினாறாயிரம் வரை தான் பெரும்பாலான கல்லூரிகளில் தருகிறார்கள். இன்றோ கொங்கு மண்டலத்தின் ஏறத்தாழ அனைத்து தனியார் கல்லூரிகளிலும் என்று சொல்லலாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை சம்பளம். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊதிய உயர்வு அதுவும் ஆயிரம் முதல் மூவாயிரம் வரை தான் என்று கூட்டணி அமைத்து கொண்டு முதலாளிகள் தருவதாக சொல்கிறார்கள். வேதனை அல்லவா? அரசு கல்லூரி மாண்வர்களை விட தனியார் கல்லூரி மாணவர்கள் பல்கலை தேர்வில் முதலிடம் பெற்று பதக்கம் பெறுகிறார்கள் என்பதும் நிதர்சனம். தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் நிலைமை இன்னும் மோசம். அதிக பட்ச சம்பளமாக பத்தாயிரம் தான் தருகிறார்களாம். தனியார் கல்லூரி ஆசிரியர்கள் எல்லோரும் அடுத்த ஒருவரிடத்தில் எப்படியாவது ஒரு ஆறுமாதம் தாக்கு பிடிக்கும் அளவிற்கு பணத்தை மிச்சப்ப படுத்தி கொண்டு கல்லூரி திறந்த இரண்டாவது மாதத்தில் இருந்து அனைவரும் கல்லூரிக்கு செல்லமாட்டோம் அரசு ஊழியர்களுக்கு ஈடாக தங்களுக்கு ஊதியம் தந்தால் தான் பாடம் எடுப்போம் என்று சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்யலாம் அல்லவா?. அப்படி செய்தால் அவர்கள் போதிக்கும் மாணவர்கள் நிச்சயம் அவர்களுக்கு ஆதரவாக இருப்பர். சமுதாய ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகமாக இருந்தால் புரட்சி தான் வரும் என்று வரலாறு சொல்கிறது. நோக்கம் மக்களை போராட செய்ய சொல்வதாக இருக்கவே கூடாது. ஆனால் பாருங்கள் சட்டத்திற்கு புறம்பானது என்று நீதிமன்றம் தெரிவித்தாலும், அவர்களின் ஒற்றுமையான வலுவான அமைப்புகளால் அரசை பணியவைத்து விடுகிறார்கள். அதிலிருந்து அரசு மறைமுகமாக சொல்வதென்றால் போராடினால் தான் காரியம் சாதிக்கமுடியும் என்று சொல்லாமல் சொல்கிறதா? அரசிற்கு அதன் ஊழியர்கள் மட்டுமே தான் குறிக்கோளா? சாதாரண குடிமக்கள் பற்றி கவலை இல்லையா? தனியார் கல்லூரிகளால் எவ்வளவு தரமுடியுமா அவ்வளவு தந்து விட்டு போகட்டும். அதை வரை குறை படுத்தி விடவேண்டியது தான். அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கான வித்தியாசத்தை அரசு ஏற்கட்டும். தனியார் கல்லூரி ஆசிரியருக்கு அவர்கள் நிர்வாகம் பத்தாயிரம் தருவதாக இருந்தால் அதே வேலைக்கு அரசு ஊழியர்கள் எழுபதாயிரம் பெறுகிறார்கள் என்றால், அரசு அறுபதாயிரத்தை தனியார் ஊழியருக்கு தரவேண்டும். மத்திய மாநில அரசுகள் இணைந்து அந்த தொகையை தரவேண்டும். அது தான் நியாயம்.

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  ஆமையா எவ்ளோ உயர்வானாலும் பத்தவெப்பத்தாது பிகாஸ் 2/3 குடிக்கு அடிமை குடும்பத்துக்கு எவ்ளோ தாரானுக என்று சிந்திக்கவும் அன்று குடி இல்லீங்களே எங்கள் சம்பளமே நானூறு ரூவாதானய்யா ஜாயிண்ட் குடும்பம் ஒருவரின் வருவாயில் 8உறுப்பினரும் கூட ஒண்டுக்குடித்தனமலே வாழ்ந்தோம் தேவைகள் இருந்தாலும் ஒன்னும் செய்யவே முடியாது 1975 வரை இதே தான் நிலைமை பிள்ளைகளைப்படிக்கவைச்சோம் உடன்பிறந்த சகோதரிக்கு திருமணம் என்று எவ்ளோ சிலவுகளை சமாளிச்சோம் ஆனால் இன்று பியூன் கூட நெறைய சம்பளம் வாங்கிண்டுருக்காரு பாதியை கூட வீட்டுக்குத்தராமல் குடிச்சே அளிக்குறாங்களே அரசே டாஸ்மாக் என்று சாராயக்கடை நடத்துதே கண்ராவி எங்கே சொல்லி ஒப்பாரி வைப்பது , அன்று இவ்ளோ கம்பெனிகள் இல்லீங்க சர்வம் கம்பியூட்டர் மாயம் என்று இல்லீங்க MNC யால் பணம் கொட்டுது என்பதும் உண்மை அரசூலே யம் சம்பளம் நிறையவே தரங்களே ஆனால் அப்படியும் போர்லேபோர்லே என்று ஒப்பாரி தான்

 • Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ

  உங்க தீர்மானத்தோடு எங்க வேண்டுகோளையும் கொஞ்சம் கவனீங்க. அரசு ஊழியர்கள் யாரும், எதற்காகவும் லஞ்சம் வாங்க கூடாது. அரசியல் வியாதிகள் சொல்லக்கேட்டு டெண்டர் ஒதுக்குதல், தடுமாற்ற வேலைகளை அப்ரூவ் செய்து பணம் வழங்குதல், குற்றவாளிகளை விடுவித்து , குற்றம் செய்யாதவரைத் தண்டிப்பது போன்ற ஈனச் செயல்களை செய்யக்கூடாது என்றும் தீர்மானம் சேருங்கள். நன்றி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement