Advertisement

'டவுட்' தனபாலு

காங்., துணைத் தலைவர் ராகுல்: 2014 லோக்சபா தேர்தலில் அடைந்த படுதோல்வி, பல்வேறு பாடங்களை கற்க உதவியது. இதற்காக, பா.ஜ.,விற்கு நன்றி சொல்வேன்.



டவுட் தனபாலு: நல்லது, கெட்டது ஆராயாமல், என்ன செய்யுறோம்னு தெரியாமல், பத்தாண்டு காலம் ஆட்சியைத் தள்ளிட்டோம்னு சொல்ல வர்றீங்களா... எப்படியோ, உங்களை நீங்க அறியவே, பா.ஜ., தான் உதவி இருக்கு... உங்க பலவீனத்தைப் பார்த்தால், 'எங்களை வெற்றிப் பாதை நோக்கி, பா.ஜ., வழிநடத்தணும்'னு கூட கேட்பீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!



தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்: மத்திய அமைச்சர்கள், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் ஆதரவுக்காக, தமிழகம் வந்தனர். ஆனால், டெங்கு பாதிக்கப்பட்ட இந்தச் சூழலில், ஒருவர் கூட வரவில்லை.



டவுட் தனபாலு: ஒருவேளை, நாளைக்கே மத்திய அமைச்சர்கள் வந்து, தமிழகத்தில் ஆய்வு நடத்தி, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, எதுவும் கருத்து சொன்னால், 'தன்னிச்சையாகச் செயல்படும் அளவுக்கு தமிழக அரசு இல்லை... மத்திய, பா.ஜ.,வுக்கு கட்டுப்பட்டு கிடக்கு... தமிழக ஆட்சியாளர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி, மத்திய, பா.ஜ., அரசு ஆதிக்கம் செலுத்தி வருது'ன்னு, விமர்சிக்க மாட்டீங்க என்பது என்ன உத்தரவாதம் என்ற, 'டவுட்' எழுதே...!



தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்: தமிழகத்தில் மது விலக்கு குறித்த கோரிக்கை வலுத்துவரும் நிலையில், மதுபான விலை உயர்வு ஏன் அறிவிக்கப்பட்டுள்ளது?



டவுட் தனபாலு: இத்தனை நாளும், மக்களுக்காக குரல் கொடுத்து வந்தீங்க... இப்போ, 'குடி'மகன்களுக்காக குரல் கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்களா... விலையைக் கூட்டுவதே, பயன்பாட்டை குறைக்கத்தானே... மது விலையை குறைத்த மாதிரி நீங்க பதறுவது ஏன்கறது தான், பொதுமக்களின், 'டவுட்'டாக இருக்கு...!-------

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement