Advertisement

டெங்குவை கட்டுப்படுத்த நடந்த யாகம்: அமைச்சருக்கு முதல்வர் யோசனை

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகி இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி அதிகரித்துள்ளது.


குறிப்பாக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, டெங்கு பிரச்னை பெரும் பிரச்னையாக விசுவரூபம் எடுத்துள்ளது. ஒரு நாளில் பதினைந்து மணி நேரத்தை டெங்குவை கட்டுப்படுத்தும் விவகாரத்திலேயே தான் செலவிடுவதாக கூறும், விஜயபாஸ்கர், எல்லா நிலைகளிலும் பொது சுகாதாரத் துறையை முடுக்கி விட்ட பின்னும், டெங்குவை கட்டுப்படுத்த முடியவில்லை; வேதனையாக இருக்கிறது என்று புலம்பும் நிலைக்கு, டெங்குவின் வீரியம் தமிழகத்தில் இருக்கிறது.


டெங்குவை, பொதுச் சுகாதாரத் துறை மட்டுமே கட்டுப்படுத்தி விட முடியாது. உள்ளாட்சித் துறையும் இணைந்து முழு வேகத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்தால் மட்டுமே, டெங்குவை உற்பத்தி செய்யும் கொசுவை கட்டுப்படுத்தி, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முடியும். ஆனால், உள்ளாட்சித் துறையும், லோக்கல் மாவட்ட நிர்வாகங்களும், டெங்குவை கட்டுப்படுத்தும் விஷயத்தில், பெரும் ஆர்வம் காட்டி செயல்படாமல் இருப்பதால், டெங்குவை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியாததோடு, பாதிப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


ரகசிய யாகங்கள்

இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இது குறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஏதோ தெய்வக் குற்றம் இருப்பதால்தான், டெங்கு நம்மை நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால், இறைவனை நினைத்து, யாகம்; பூஜை செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதையடுத்து, தமிழகத்தின் பல பகுதிகளிலும், டெங்குவை கட்டுப்படுத்த, ரகசிய யாகங்கள் நடந்து முடிந்திருக்கிறது. இதையடுத்து, விரைவில் டெங்கு கட்டுக்குள் கொண்டு வரும் என, தமிழக சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.


தீபாவளிக்கு பின் கட்டுப்படும்

இதற்கிடையில், தீபாவளி நெருங்குவதால், வெடி வெடித்து, அதிலிருந்து கிளம்பும் நச்சு அலுமினியத் துகள்கள், டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவை அழிக்கும் வல்லமை உடையவை. அதனால், தீபாவளி வந்து சென்றதும், டெங்கு கட்டுக்குள் வந்து விடும் என்றும், சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். எப்படியாவது டெங்குவை கட்டுக்குள் கொண்டு வந்தால் போதும் என்ற நினைப்பில், அமைச்சர் விஜயபாஸ்கர் நாலா பக்கமும் அல்லாடிக் கொண்டிருக்கிறார் என்கின்றனர், அவரது ஆதரவாளர்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (39)

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  கொசுவை கொல்வதற்கு யாகமா இது என்ன புதுசா இருக்கு

 • ArunagiriSundharamurthy -

  யாகம் செய்து டெங்குவை கட்டுபடுத்த முதல்வர் யோசனை பெரியார் வாரிசுகள் அவருக்கு பரிகாரம் தேடுகிறார்கள்

 • Anton Pham - Houston,யூ.எஸ்.ஏ

  கொசுவுக்கு டாஸ்மாக் சரக்கு தெளித்துவிட்டால் எல்லாம் சாக போகுது. இதுக்கு எதுக்குடா யாகம் ?

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  உலக நன்மைக்கோ, ஆரோகியத்துக்கோ யாகம் செய்வது தவறில்லை..ஆனால் அதை செய்ய சங்கர மடம் போன்ற அமைப்புகள் இருக்கின்றன..அவர்கள் செய்யட்டும், அரசு உதவட்டும் தவறில்லை..ஆனால் ஒரு அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய சுகாதார ஏற்பாடுகளை செய்யாமல் பரிகாரம் போல யாகத்தை நினைப்பது தவறு..

 • ShanmugasundaramRangasamy -

  யாகம் ஆவிக்கா டெங்கு கொசுவுக்கா

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  கேடுகெட்ட கொசுக்கள் யாகத்துக்கு பயப்படுமா என்று தெரியவில்லை, ஆனால் சிட்டுக்குருவிகளுக்கு பயப்படும். இயற்கை படைத்த சிட்டுக்குருவிகளை வளர்க்க உதவுங்கள், அவை டெங்குவை உருவாக்கும் கொசுக்களை அழித்துவிடும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இறைவனை நினைத்து, யாகம் பூஜை செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார்... இறைவன் வேறு எங்கும் இல்லை..உங்களது நேர்மையான நடவைக்கையிலேயே இருக்கிறான்...கை, மனம் சுத்தத்தில் இருக்கிறான்...

 • அப்பாவி -

  இங்கே இவரு யாகம், ஹோமம்னு போறார்...அங்கே நம்ம செல்லு டெங்குவால் உயிரிழப்பு ஏதுமில்லைன்னு சொல்றாரு... யாகம், ஹோமமெல்லாம் நல்லவங்க செஞ்சா பலன் தரும்...இவிங்க செஞ்சா வீண் செலவுதான்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இது போன்ற மந்திரிகள் எதாவது கோவிலில் பூஜாரியாக வேலைக்கு சேரலாம்...

 • Sundar - MELBOURNE ,ஆஸ்திரேலியா

  நம்ப வருங்கால முதல்வர் ரஜினி (அவிங்க அப்படித்தானே சொல்லிக்கிட்டு திரியிறானுங்க) அழைத்து கொசிவிடம் பேச சொல்லுங்க எல்லாம் சரியாகிப்புடும்....இதெல்லாம் பழனிச்சாமியின் அடுத்த back up plan வச்சு இருக்கலாம் யாருக்கு தெரியும்....இவிங்களை முதல் அமைச்சரா போட்ட அந்த பெரிய கொசு பெங்களூரு போய்டுச்சு....

 • Sundar - MELBOURNE ,ஆஸ்திரேலியா

  திரு பழனிச்சாமி அவர்களே உங்கள் அமைச்சர்களையும் தொண்டர்களையும் அழைத்து தமிழகம் முழுவதும் யாகம் நடத்த சொல்லுங்க யாகத்திலிருந்து வரும் புகையில் கொசு ஒழிந்துவிடும் நம்ப தெர்மோகோல் அமைச்சரை மறந்திடாம கூப்பிட்டுருங்க..,

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  சென்னையில் டெங்குவை ஒழிக்க முதலில் கூவம், பக்கிங்காம் கால்வாய், அடையாறு எல்லாம் தூர்வாரி சுத்தம் செய்யுங்கள் ஒரு சொட்டு சாக்கடை கழிவும் இந்த ஆறு கால்வாய்களில் கலக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். டெங்கு மலேரியா பரப்பும் கொசுக்களை ஒழிக்கலாம். தினம் தோறும் கொசு மருந்துகள் தெளித்து , நகரத்தை சுத்தமாக வைத்திருக்க போதுமான நடவடிக்கை எடுங்கள்.யாகம் வளர்த்தால் அந்த யாக புகையின் அளவே சிறிதளவு கொசுக்கள் மடியலாம்.

 • Naduvar - Toronto,கனடா

  இப்போ தெரியுதுடா அந்தம்மா ஏன் உங்கஎல்லாரையும் கால்லகடக்கசொல்லுச்சுனு , அப்புடியே பாக்கிஸ்தான் நம்மகிட்ட வாலாட்டமா இருக்க ஒரு செய்வினை செஞ்சு உட்டுருங்க

 • Appu - Madurai,இந்தியா

  அசுவமேத யாகத்துக்கு அப்பறம் இவனுகளோட இந்த டெங்கு யாகம் வரலாற்றில் பொறிக்கப்பட்டு ஜென்மோ ஜென்மத்துக்கு தமிழக புகழ் ஒலகத்துல மறையாது...

 • Kalirajn -

  அடடா... செல்லூர் ராஜூ மட்டுமே புத்திசாலி என் நினைக்கையில்.... மந்திரிசபையே அப்படித்தான் இருக்கிறது... வாழ்க 23ம் புலிகேசி...

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  ஏதாே தெய்வக் குற்றம் அரசின் மீது உள்ளது என சாெல்லும் முதல்வர் முதலில் எல்லா ஊழல் மந்திரிகளை வீட்டுக்கு அனுப்புங்கள் பிறகு தெய்வ குற்றம் நீங்க யாகம் செய்து பாருங்கள். ஒரு வேளை பலன் கிடைக்கலாம்.

 • Nimalakumar Balasingam - Middelfart,டென்மார்க்

  இவங்களை தெரிவு செய்த மக்களை நினைத்தால் ஹா -ஹா -ஹா

 • Mohamed - Kayalpatnam,இந்தியா

  "தீபாவளி நெருங்குவதால், வெடி வெடித்து, அதிலிருந்து கிளம்பும் நச்சு அலுமினியத் துகள்கள், டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவை அழிக்கும் வல்லமை உடையவை. அதனால், தீபாவளி வந்து சென்றதும், டெங்கு கட்டுக்குள் வந்து விடும் என்றும், சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்". கொசு கடியில செத்துப்போகாம மிஞ்சியவங்களையெல்லாம் சாகடிக்க அடுத்த திட்டம் டொய். ஒருவேளை மக்கள் எல்லோரும் செத்துப்போய்ட்டா நிரந்தரமா ஆட்சியில் இருக்கலாம்டு திட்டம் போட்றாங்களோ😢😢😢

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  யாகம் செய்தால், கண்டிப்பாக டெங்கு ஒழிந்துவிடும் என்று முதல்வருக்கு தெரிந்துள்ளது. அமைச்சருக்கு தெரியவில்லையே டெங்குவிற்காக ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாயிரம் கோடி, யாகத்திற்கான செலவிற்கு பின், தமிழகத்திற்கு சேமிப்பு தான். அதனால், சிறந்த யோசனை கொடுத்த பழனிக்கு போனஸ் கொடுக்க வேண்டும்.

 • Paramuk - kumari,இந்தியா

  சபாஷ் சரியான முடிவு அப்படியே மோதியையும், ஜக்கியையும், பேடியையும், சேர்த்துக்கோங்க.... ஹா ஹா ஹா

 • Sankara Narayanan - Bangalore,இந்தியா

  அட மங்குணிகளா எவனாவது ஒரு புத்திசாலி உங்களில் இருக்கிறீர்களா . எல்லாருமே லூசு பயலுவுதானா தாங்க முடியலைடா சாமி. முதலில் நாளேடுகள் , செய்தித்தாள்கள், வார இதழ்கள் மற்றும் உங்களின் கீழ் இருக்கும் எதற்கும் உதவாத சல்லி காசுக்கு பிரயோசனம் இல்லாத டிவிக்களில் விளம்பரம் செய்யுங்கள். டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மங்குனி மக்களுக்கு ஏற்படுத்துங்கள். முக்கியமாக மக்களை வீடு மற்றும் தெருக்களை சுத்தமாக வைத்திருக்க சொல்லுங்கள். முக்கியமாக தெருவில், சாலைகளில் சிறுநீர் , கழிவுநீர் , வாந்தி , பேதி, எச்சில் துப்புவது ,குப்பையை காலி மனைகளில் வீசி எறிவது, இது போன்ற அசிங்கங்களை செய்யாமல் இருக்க வலியுறுத்துங்கள் . மீறி செய்தால் அபராதம் விதியுங்கள். எல்லா சாலைகளையும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுங்கள். முதலில் சாலைகளை குண்டு குழி இல்லாமல் தண்ணீர் தேங்காமல் ஒழுங்காக போட சொல்லுங்கள். மாதம் இருமுறை எல்லா தெருவிலும் கொசு மருந்து அடியுங்கள். பிளாஸ்டிக் பைகளை , கவர்களை அடியோடு ஒழித்து கட்டுங்கள். இதெல்லாம் செய்யாவிடில் நீங்கள் அனைவரும் சங்கத்தை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க தயார் ஆகுங்கள். பிறகு மக்கள் உங்களுக்கு மருந்து அடிப்பார்கள்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  இவங்களை கட்டுப்படுத்த என்ன யாகம் செய்யணும். யாராவது சாமி இருந்தா சொல்லுங்களேன்.. கோடி அசுவமேத யாகம் பண்ண புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும். நான் கியாரண்டி.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  எங்கேடா லூசுத்தனமா எவனுமே இன்னிக்கி உளறலியேன்னு பாத்தேன். இன்னிக்கி கோட்டா முடிஞ்சது.

 • Mohanraj -

  ஒருத்தர் தெர்மாகோல் இன்னொருத்தர் கொசு கொல்ல யாகம். உலகத்துக்கு நாகரிகம், மருத்துவம் சொல்லிக்கொடுத்த தமிழனுக்கு இதுக்கு மேல் வெட்கக்கேடு இருக்க முடியாது

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  கொசுவலையை போர்த்திக்கொண்டு நடமாட வேண்டும் என்று அவசர சட்டம் கொண்டு வரணும் ...

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  நரி விடும் கரடி

 • Nava Mayam - New Delhi,இந்தியா

  ரொம்ப கரெக்ட் ..அந்த யாக குண்டத்து நெருப்புக்குள் உங்கள் மந்திரிகள் எல்லோரையும் தூக்கி போட்டால் டெங்கும் ஒழியும் , தமிழகத்துக்கு பிடித்த பீடையும் ஒழியும்...

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  நிஜ பக்தி இல்லமால் பொய்யாக யாகம் பண்ணியதால் பலனை கோகுல இந்திரா இன்று அனுபவித்து விட்டார். விரைவில் பலசாமியும் அனுபவிப்பார். கடவுள் நம்பிக்கை வேண்டியதுதான். ஆனால் ஜெயா அடிமைகளுக்கு கற்று கொடுத்து இருப்பது மூட நம்பிக்கை. இப்படியும் ஒரு முட்டாள் நம் முதல்வரா ?

 • Mal - Madurai,இந்தியா

  My thoughts exactly... When there was no rain n many rites n rituals brought rain... When there are a lot of deaths, this is because God is angry.. So don't play in temple issues... And don't blindly degrade bjp... In Tamil nadu, though not even given a chance to rule in Tamil nadu, how can people blindly oppose bjp... Without reason.... When people can work out in making h.raja lose with many conspiracies, so can god trouble tamilnadu....and its people... With Dravidian parties, tamilnadu but will not prosper....

 • velan - california,யூ.எஸ்.ஏ

  நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப செயல் ... தமிழகம் மூட நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டது . பெரியார் கண்ட திராவிட நாடு இது. அறிவியல் பூர்வகமாக அணுகவும் . முயற்சி செய்யவும் தோற்றாலும் பரவாயில்லை. ஆயிரம் முறை முயன்றால்தான் ஒரு முறை வெற்றி கிடைக்க வாய்ப்புகள் . யாகமும் பூஜைகளும் கற்பனையில் அமெரிக்காவிற்கும் நமக்கும் உள்ள வேறுபாடு சோம்பேறித்தனம் . எத்தனை தடுப்பூசிகளை கண்டு பிடித்திருக்கிறோம் ?

 • kathir -

  superrrrrr🤣🤣🤣🤣🤣

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  " ........ இதற்கிடையில், தீபாவளி நெருங்குவதால், வெடி வெடித்து, அதிலிருந்து கிளம்பும் நச்சு அலுமினியத் துகள்கள், டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவை அழிக்கும் வல்லமை உடையவை. அதனால், தீபாவளி வந்து சென்றதும், டெங்கு கட்டுக்குள் வந்து விடும் என்றும், சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்".- இதற்க்காகவே, பட்டாசுகளை தவிர்த்து, நிறைய மத்தாப்பூ, புஸ்வானங்களை இலவசமாக வீட்டுக்கு வீடு கொடுக்கனும் தமிழக அரசு. சரியா?.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement