Advertisement

சூரிய சக்தி மாநாடு: டிச,.8-ல் பிரான்ஸ் அதிபர் இந்தியா வருகை

புதுடில்லி: டில்லியில் வரும் டிசம்பரில் நடக்க உள்ள சூரியமின்சக்தி கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன், ஐ.நா. பொதுச்செயலர் ஆன்டோனியோ கட்டரஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
அனைவருக்கும் மின்சாரம் கிடைக்கச் செய்ய வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் வரும் டிசம்பர் 8,9 ஆகிய தேதிகளில் சர்வதேச சூரிய மின்சக்தி மாநாடு டில்லியில்நடக்கிறது. சூரிய மின்சக்தியை ஆதரிக்கும் 100-க்கும் மேற்பட்ட நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இதில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர், ஐ.நா.பொதுச்செயலாளர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக பிரான்ஸ் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் வரும் டிசம்பர் 8-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். டில்லியில் நடக்க உள்ள சூரிய மின் சக்தி மாநாட்டில் பங்கேற்கிறார்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    ஒய் யூ கம் இந்தியா.. மே பிரான்ஸ் கம்ன்னா.. ஓகே.. அக்லி விசிட் ஐ கம். யூ நோ கம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement