Advertisement

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் கார் திருட்டு

புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சொந்தமான வேகன் ஆர் கார் ( கார் எண்: டி.எல். 9 சி ஜி 9769 ) டில்லி தலைமை செயலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. இந்த கார் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. திருடு போன கார் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

முன்னதாக, இன்று( அக்.12) தலைமை செயலகத்துக்கு வந்த முதல்வர் கெஜ்ரிவால், தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் பணிகளை முடித்துக் கொண்டு அவர் வீடு செல்ல காரை எடுக்கச் சென்ற போது, அவரது காரை அங்கு காணவில்லை. அக்கம்பக்கங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பாதுகாப்பு நிறைந்த தலைமை செயலகத்தில் மர்ம நபர்கள் முதல்வரின் காரை திருடிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (53)

 • Shankar sundar - Madurai,இந்தியா

  யார் மேல் பழியை போடப் போகிறாரோ

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  ஒரு விளம்பரத்திற்கு அவரே திருட சொன்னாரோ ?

 • mukundan - chennai,இந்தியா

  காரின் உண்மையான முதலாய் எடுத்து சென்று இருப்பார். இவர் இந்த காரை கடனாக வாங்கி திருப்பி தரவில்லை என்று இவரது நண்பர் ஒரு முறை சொல்லி இருக்கிறாரே.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  டில்லி போலிஸ் மத்திய அரசின் கீழ் இயங்குகிறது. ஆனால் பிஜேபி பக்தர்கள் கேஜ்ரியை விமர்சிப்பார்கள். ஸ்டண்ட் என்பார்கள். அது காரே இல்லை கட்டவண்டி என்று கூட எழுதுவார்கள்

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  ஒரு முதல்வர் ஸெல்ப் ட்ரைவிங்கா..நம்ப முடியலையே...அநேகமா டிரைவர் இருந்திருப்பாரு..அவருக்கு ஒழுங்கா சம்பளம் கொடுத்திருக்க மாட்டாரு இவரு..அவன் வேலையை காட்டியிருப்பான்..

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா

  ஒற்றைப் படை... இரட்டைப் படையால் பாதிக்கப்பட்ட யாரோ செய்த சதியாக இருக்குமோ....???

 • கண்ணன் -

  பாருங்க மோடிய திட்டவும், கருத்து சொல்லவும் கூட ராமன்ங்குற பேர்ல வர வேண்டியிருக்கு இவனுங்களுக்கு வீடு கூட கொடுக்காத காரணம் இதுதான். சொந்த பேர்ல கூட வந்து கருத்து சொல்ல தயக்கம்.அம்புட்டும் பொய்யும் புரட்டும்

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  வெடி குண்டு கலாச்சாரம், வன்முறை, பயங்காரவாதம் இருக்கும் தேசிய தலைநகரில் வி ஐ பி களின் கார்களுக்கு நிச்சயம் பாதுகாப்பு இருக்கவேண்டும். அவர்களின் கார் பார்க்கிங்கில் கூட கேமிராவைத்தும் பாதுகாவலர்கள் வைத்தும் சோதனை இடுவது நலம் பயக்கும். கார் வெடிகுண்டுகள் தானே பயங்கரவாதிகள் பயன்படுத்தும் ஆயுதம்? பாதுகாப்பில் நாம் என்றுமே எதிலுமே அசட்டையாகத்தான் இருக்கிறோம்.

 • கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா

  திறந்தவெளியில் மலம் கழிக்க விரும்பாத ஒருவர் அவசரம் அவசரமாக நின்றிருந்த காரை எடுத்துக்கொண்டு கழிப்பறையை நோக்கி சென்றிருக்கலாம். எங்காவது கழிப்பறை முன்பு தேடிப்பார்த்தால் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

 • vinaikumar - Kansas city,யூ.எஸ்.ஏ

  மோடிக்கு கோட் பரிசாக வந்ததை எப்படி எல்லாம் கேவலமாக பேசினார்கள் எல்லோரும் ஆனால் கெஜ்ரிக்கு கார் பரிசாக வந்ததை எல்லோரும் மறந்து விட்டார்கள். ராமன் டோல் தப்பி போன்றவர்ளுக்கு பிஜேபி ய கேவலமா பேசினால் தான் அவங்களுக்கு ஜீரணம் ஆகும் னு நினைக்கிறேன்.

 • Shriram - Chennai,இந்தியா

  Eenappaya ..avane thiruda solliruppan ..dangaamaari

 • Nellai Ravi - Nellai,இந்தியா

  அமைச்சர் எல்லோரும் டொயோட்டா கேம்ரி ஓட்டுகிறார்கள், அரசு வாகனம். தான் மட்டும் பழைய வண்டியா? (வாக்குறுதி மீறி, கேள்வி கேட்டதால் மறுபடி வேகன் ஒட்டாவா ?) நல்ல ஏற்பாடு தான். இனி நல்ல காரில் வரலாம்.

 • Skew - Madurai,இந்தியா

  இப்பல்லாம் டெல்லி நியூஸ் எதுவும் நம்புற மாதிரியே வர்றதில்ல.

 • J.Isaac - bangalore,இந்தியா

  அடுத்து அவரையும் கடத்த முயற்சி நடக்கும்

 • Sriman - Chennai,இந்தியா

  என்னது வெறும் வேகன்.ஆர் கார்தானா, இங்க சாதாரண கவுன்சிலரே இன்னோவா, ஆடி கார் வைத்திருக்கும் போது, டில்லி முதல்வரா இருந்துக்கொண்டு வேகன்.ஆர். பொழைக்க தெரியாத மனிதர்.

 • DESA NASAN - DESA NASA PURAM

  திருட்டுக்கு காரணம் முட்டாள் மன்னனும் அவனது அடிமுட்டாள் முப்பது அமைச்சர்களும் தான் என்று மக்கள் கேட்பார்கள்

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  " திருடாதே பாப்பா திருடாதே, வறுமை நினைத்து பயந்துவிடாதே, திறமை இருக்கு கலங்கிவிடாதே, திருடாதே பாப்பா திருடாதே, திட்டம் போட்டு திருடுற கூட்டம், திருடிக்கொண்டே இருக்குது, அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம், தடுத்துக்கொண்டே இருக்குது, திருடராய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது, திருடாதே பாப்பா திருடாதே, .......". (திரு. MGR-இன், சினிமா படத்தின் பாடல், நினைவில் வந்தது).

 • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

  டில்லியோட காவல் துறை, பிஜேபி அரசோட கையில் தானே இருக்கிறது

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  திருடர்கள் பல விதம், அதில் ஒவ்வொரு திருடரும் ஒரு விதம். இதில் கார் திருடர்கள், தங்கள் கை வரிசையை, டெல்லி முதலமைச்சரிடம் காட்டி உள்ளனர் எனலாம். லஞ்சம் ஊழல் பண்றவங்களும், ஒரு வகையான திருடர்கள்தானே?.

 • Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) - KUALA LUMPUR,மலேஷியா

  பிஜேபி மக்கள் தான் இதை செய்திருப்பார்.. நல்லவர் இந்தியாவில் வாழ முடியாது.. திருட்டு கூட்டம்..

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  திருடன் கிட்டயே திருடியவன் கில்லாடிதான் ....

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  ஆகா, நியூஸில் வர என்ன என்ன வேலை எல்லாம் செய்ய வேண்டியிருக்கு?

 • aravind - chennai,இந்தியா

  தமிழ்நாட்டில் அமைச்சர்களின் கார்களோ அல்லது முதல்வர்களின் கார்களை இப்படி திருட முடியாது, ஏனென்றால் அவர்களுக்கு சொந்தமாக கார்கள் மட்டுமல்ல, சொந்தமாக விமானம் இருக்கும், அதை திருட வாய்ப்பில்லை....

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  காரோட நம்பர் ஒற்றைப்படையா? இரட்டைப்படையா 😁? ஏதோ மறுபடியும் ஜெட்லீமேல   பழிபோடாம இருந்தா சரி.

 • rajen.tnl - tirunelveli,இந்தியா

  கெஜ்ரிவாலின் கார் திருட்டு.. அவரே திருட சொல்லிருப்பார்.. ஒரு விளம்பரத்திற்கு நல்லா விசாரிங்க,

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஒரு முதல்வருக்கே இந்த நிலை என்றால்..பாமரனுக்கு எந்த நிலை...

 • Balaji - chennai,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  He is just creating something as news for publicity. useless fellow.

 • NRK Theesan - chennai,இந்தியா

  காரில் என்ன இருந்ததோ ? cctv கேமரா இருக்கத்த்தானே செய்யும் ?காரை கண்டுபிடித்தது விடுவார்கள் ஆனால் உள்ளே இருந்தது ?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஓசி விளம்பரம்

 • jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்

  டிஜிட்டல் இந்தியா...2020க்குள் வல்லரசாகிவிடும்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  அந்த பிரபல பிராதன கட்சியின் " டச் " தெரிகிறது.... இப்படியொரு ஆனந்தம் ...ஹ்ம் ..என்ன செய்ய ??

 • balakrishnan - coimbatore,இந்தியா

  கார் திருட்டுப்போய்விட்டது, திருடர்களின் திறமையை காட்டுகிறது, இதுக்காக நாம் மோடி அவர்களை குற்றம் சொல்ல வழி இல்லை, பழக்க தோஷத்தில் இதுவும் நாட்டின் பொருளாதார சீரழிவின் அறிகுறி என்று அனைவரும் பேசாமல் இருக்கவேண்டும்

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  டில்லி போலீசின் திறமைக்கு சான்று.

 • Appu - Madurai,இந்தியா

  இவரு வெள்ளந்தியா???இல்ல திருடன் மொரடனா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement