Advertisement

சசி மீண்டும் ‛உள்ளே'

சென்னை : 'பரோல்' முடிந்ததை தொடர்ந்து சசிகலா மீண்டும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

பரோல்



சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற சசிகலா, பிப்., மாதம், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில், அவரது கணவர், நடராஜனுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரை பார்ப்பதற்காக, சசிகலா அக்டோபர் 6 ம் தேதி, ஐந்து நாட்கள், 'பரோலில்' வந்தார்.

முடிந்தது



சென்னை, தி.நகரில் உள்ள, உறவினர் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கினார். அங்கிருந்து, தினமும் மருத்துவமனை சென்று, கணவரை பார்த்து வந்தார். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தன்னை சந்திக்க வருவர் என, சசிகலா எதிர்பார்த்தார்; ஆனால், யாரும் வரவில்லை. அவரது பரோல் விடுமுறை, இன்று(அக்.,12) முடிந்தது.
இன்று மாலை, 6:00 மணிக்குள் அவர், சிறைக்குள் செல்ல வேண்டும். இதனால் இன்று காலை 9 மணியளவில் தி.நகர் வீட்டில் இருந்து காரில் பெங்களூரு சிறைக்கு அவர் புறப்பட்டார். தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் பெங்களூரு சிறை சென்றடைந்தார். அவருடன் தினகரன், புகழேந்தி உடன் வந்தனர்.
இதன் பின்னர் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (9)

  • முக்கண் மைந்தன் - Chennai,இந்தியா

    சசிம்மா பாவம்..... தமிழ் சனங்களுக்கு தன்னோட வாழ்க்கய தியாகம் பன்றாங்க....

  • Bhaskaran - Chennai,இந்தியா

    கணவர் உடல்நிலை பற்றி கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் பணம் செலவழித்து உடல் உறுப்புகளை மாற்றசெய்து அவரை காப்பாற்றிய நவீன சாவித்திரி எங்க சின்னம்மா

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    வரலாம் , போகலாம் அடுத்தடுத்து வரும்போது மேலும் மவுசு குறையும் , ஜெயா டிவி மட்டுமே ஒளிபரப்பும் நிலை வரும்.

  • M Ragh - Kanchi,இந்தியா

    Appada , all minister, MLA kku diwali vandachu enjoy

  • Krishna Prasad - Chennai,இந்தியா

    ஒரு சிங்க குட்டியை கூண்டில் அடைத்து விட்டார்கள்

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

    ///அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தன்னை சந்திக்க வருவர் என, சசிகலா எதிர்பார்த்தார் ஆனால், யாரும் வரவில்லை. ///பொதுவாக எட்டு முதல் ஒன்பது அமைச்சர்கள் நேரடியாக சசியுடன் பேசியதாக செய்திகள் வந்துள்ளன,

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

    அப்பாடா என்று எடுப்பும், வெந்நீரும் ஹாயாக இருக்கலாம் என்று நினைக்கலாம், அடுத்த பரோல் விடுமுறை விடும் வரை.

    • Appu - Madurai,இந்தியா

      டிட் யூ மீன் மிச்சர் கடை அண்ட் பேக் டோர் ஐ டி ரைடு எடுபிடி?

    • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

      அடுத்த பரோல் விரைவில் வரும் போலிருக்கிறது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement