Advertisement

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கருணை வேண்டாம்: ஐகோர்ட்

சென்னை: நீர்நிலைகளை காப்பாற்ற தேவைப்பாட்டால், கருணை காட்டாமல் மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.

ஆஜர்
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாத வழக்கில் நெல்லை, விழுப்புரம், கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, நாமக்கல், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், தூத்துக்கடி, தர்மபுரி, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்ட கலெக்டர்கள் சென்னை ஐகோர்ட்டில் ஆஜரானார்கள்.

உதவ தயார்
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: நீர்நிலைகளை காப்பாற்ற, தேவைப்பட்டால் கருணை காட்டாமல் நடவடிக்கை எடுக்கலாம். நீர்நிலைகள் முக்கிய ஆதாரம் என்பதால், அதனை பாதுகாக்க கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கமான பணிகளுக்கு இடையே இயற்கையை பாதுகாக்க நேரம் ஒதுக்க வேண்டும். பல்வேறு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நீர்நிலைகளை காக்க வேண்டும்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான உதவிகளை செய்ய நாங்கள் தயார். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் இடையூறு இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம். கீழ்நீதிமன்றங்கள் ஏதும் விசாரிக்கக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம் எனக்கூறினார்.

தொடர்ந்து அடுத்த முறை ஆஜராவதிலிருந்து கலெக்டர்களுக்கு விலக்கு அளித்து விசாரணையை நவம்பர் 17 க்கு ஒத்திவைத்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (29)

 • Advaiti - Chennai,இந்தியா

  வேறெந்த மாநிலங்களிலும் நீர் நிலைகள் தெய்வமாகப் போற்றப்பட்டு, பூஜிக்கப்படுகின்றன. அவைகளும் மக்களைக் குழந்தைகளைப் போலக் காக்கிறது. கருணை காட்டாமல் வேலை செய்தால் கலெக்டர் மேலும் கருணை காட்டப்பட மாட்டாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  முதலில் நீர்ப்பிடிப்பு பகுதிகளை சட்டபூர்வமாக விக்க அனுமதித்தவர்களை தண்டியுங்கள்...

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா

  பல நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கல்லூரிகளாகவும் வணிக வளாகங்களாகவும் மாற்றப்பட்டுவிட்டன.... கலெக்டர்கள் மற்றும் தாசில்தார் இதர அதிகாரிகளின் ஒத்துழைப்போடு...

 • Uyirinam - Frankfurt,ஜெர்மனி

  அப்புறம் நீங்களே அகற்றுவதற்கு stay தருவீங்களே எசமான் ..

 • Viswanathan - Hyderabad,இந்தியா

  நீர் நிலைகள் ஆக்ரமிப்பினால் தேசமே வறண்டு போய் விட்டது. எல்லா மாகாணங்கள் உயர் நீதி மன்றங்களும் அந்த, அந்த அரசங்களுக்கு நீர் நிலைகளை காப்பாற்ற சொல்லி உத்திரவிட வேண்டும்.

 • அப்பாவி -

  இவிங்க பாதுகாக்கக் கூடிய ஒரே நீர்நிலை கடல்தான். ஏரிகளை மீட்கவேண்டுமென்றால் நங்கநல்லூர் போன்ற பெருங்குடியிருப்புகள் கலியாக வேண்டும். எந்த ஜ்ட்ஜ் எந்த ஏரியில் வீடு கட்டியிருக்கிறாரோ?

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இது போன்ற உத்தரவுகள் ஏற்கனவே உள்ளன, ஆனால் என்ன பயன், எந்த ஆக்கிரமிப்பையும் யாரும் அகற்றவில்லை, கரண்ட் வசதியோடு, சௌகரியமாகவே இருக்கிறார்கள்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பல நீர்நிலைகள் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து ஒன்றுக்கு அப்பறம்தான் எம் எம் டி ஏ வழியாக பெருவாரியாக தனியார் கல்வி கூடங்கள்... ரியல் எஸ்டேட் உரிமையாளரிகளுக்கு வைக்கப்பட்டிருக்கிறது.. இது எம் எம் டி ஏ வின் பதிவேடுகளில் இதுவரை அவற்ற்றை அழிக்காமல் இருந்தால் தெரிந்து கொள்ளலாம்..அல்லது அந்த பகுதி பத்திர பதிவு அலுவலகத்தில் தெரிந்துகொள்ளலாம்... இதை நீதிமன்றம் மட்டும் நினைத்தால் நடக்காது... நடுவண் அரசும் மாநில அரசும் நீதிமன்றமும் கைகோர்த்தால்தான் நீர் பிடிப்பகுதிகள், அனைத்துவகை பொறம்போக்கு நிலங்களை மீட்டு எடுக்கமுடியும்.,.ஒரே ஒரு நபரின் தூண்டுகோலால தான் இந்தநீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள் அனைத்தும் துவம்சம் செய்யப்பட்டது...

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  வட நாட்டில் , ராஜஸ்தான், குருக்ஷேத்திரா, மற்றும் உ பி யில் மதுரா, போன்ற இடங்களில் நீர்நிலைகள் பாதுகாக்கப் படுகின்றன. தமிழ் நாட்டில்தான் ஆக்கிரமிப்புகள் அதிகம். அக்காலத்து தமிழ் மன்னர்கள் நீர்நிலைகளை உருவாக்கினார். நவீன திராவிடத் தமிழன் அவற்றை அழித்து பிளாட் போட்டு விற்கிறான்.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு அகற்றப்படவேண்டியது காலத்தின் கட்டாயம் அதிகாரிகளும் அரசுகளும் தடையாணை ஏதும் பிறப்பிக்காமல் நீதிமன்றம் துணை நிற்கும் இந்த விஷயத்தில் விரைந்து செயல்படவேண்டும்

 • VOICE - CHENNAI,இந்தியா

  நீர் நிலைகளை அக்கரமித்து முதன் முதலில் விற்ற நபரை கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். ஏறி குளத்தை முதன் முதலில் ஆக்ரமிப்பு செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்த நபர் 95 % ஏதேனும் ஒரு அரசியல்கட்சி சேர்ந்தவராக இருப்பார், வாங்கிய இளிச்சவாயன் சாதாரண மக்கள், இப்பொழுது தண்டனை யாருக்கு அரசியல்வாதிக இல்ல இளிச்சவாயன் மக்களின் வீடு இடிக்கப்படுமா ? அல்லது அரசியல்வாதியிடம் இருந்து பிடுங்கி மக்களுக்கு நிவாரணம் வழங்குமா நீதிமன்றம் ?

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  ஜம்பம் ...ஒன்னும் நடக்கப்போவதில்லை ...

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  பொதுவாக, நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாத வரை, வருங்கால நம் சந்ததியினருக்கான, குடி நீருக்கான உத்திரவாதத்தை, உறுதிபடுத்திடாமல், நாம் நம் பொறுப்பை கடமையை, செய்யாமலேயே செல்கிறோம் என, நிச்சயம் கூறலாம். எனவே, அப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகளை, அகற்றும் நிலையில் இருந்து, அரசு நிர்வாகங்கள் பின்வாங்க கூடாது என்பதுதான், எனது விருப்பமும் எனலாம்.

 • Appu - Madurai,இந்தியா

  ஏற்கனவே ஆட்டைய போட்டவிங்ககிட்ட இருந்து நீர்நிலைகளை புடுங்கினால் இதை வரவேற்கலாம்... இல்லாவிட்டால் வெறும்கண்துடைப்பாக மட்டுமே அமையும்... நீதி என்பது நடுவுநிலையாக இருக்கனும்...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அரசே காமராஜர் ஆட்சிக்காலத்தில் சென்னை வேளச்சேரி ஏரியைதூர்த்து தான்   வீட்டுவசதி வாரியத்தின் முதல் கட்டுமானத்தை துவக்கியது. பாவம் அவரையே ஏமாற்றிக் கையெழுத்து வாங்கினரே.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இதனை உடனடியாக நிறைவேற்றுவது தண்ணீர் பிரச்னைக்கு முடிவு. ஆனால் நிறைவேற்றவரும் அதிகாரிகளுக்கு ராணுவப்பாதுகாப்பு கூட  போதாது. சென்ற சென்னை வெள்ளத்துக்குப்பின் அடையாறு  ஆற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை கோர்ட் உத்தரவுப்படி அகற்றப்போன போது திமுக கம்யூனிட்கள் வெளியிலிருந்து ரவுடி  ஆட்களை வரவழைத்துப் போராடி அதனைத்தடுத்தனர். உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் ஆளும் கட்சிக்கு இது ஒரு சோதனை . ஏனெனில். ஆக்கிரமிப்பாளர்களின் வாக்குவங்கி மிகப்பெரிது.(பின் குறிப்பு. மதுரை கோர்ட் வளாகம் ஏரியாக இருந்ததை பார்த்துள்ளேன். அதனைப் பற்றி ஹைக்கோர்ட்டின் கருத்தென்ன  ?) வள்ளுவர் கோட்டமே ஏரியாகவும் பின்னர் குப்பைக் கிடங்காகவும் இருந்ததுதான்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  இடித்து தள்ளுங்கள் மதுரை மாட்டு தாவணி பஸ் நிலையத்தை. இடித்தது தள்ளுங்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையை.. இடித்து தள்ளுங்கள் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை... ஆயிரம் ஆயிரம் வீடுகள் அரசு அலுவலகங்கள், ஆட நீங்கள் ஆணையிடும் அந்த கலெக்டர் அலுவலகங்கள் அனைத்தும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டவைகளே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement