Advertisement

சிறுமி ஆருஷி கொலை வழக்கு; பெற்றோரை விடுவித்தது ஐகோர்ட்

அலகாபாத்: சிறுமி ஆருஷி கொலை வழக்கில் பெற்றோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அலகாபாத் ஐகோர்ட் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.

கொலை
கடந்த 2008ல், உ.பி., மாநிலம் நொய்டாவில், ஆருஷி தல்வார், என்ற 14 வயது சிறுமி மற்றும் வீட்டு வேலைக்காரர், ஹேம்ராஜ், 45, ஆகியோர், மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்களிடையே முறையற்ற உறவு இருப்பதாக சந்தேகித்து, ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வர், நுபுர் தல்வார் ஆகியோர் கூட்டாக சேர்ந்த இருவரையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு எழுந்தது.


ஒத்திவைப்பு
நாட்டை உலுக்கிய இந்த இரட்டை கொலை வழக்கினை சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதில் கொலையை திட்டமிட்டு செய்ததாக தந்தை ராஜேஷ் தல்வார், தாய் நுபுர் தல்வார் ஆகியோருக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் 2013ம் ஆண்டு, இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. இருவரும் காசியாபாத் நகரில் உள்ள தஸானா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தண்டனையை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் நடந்து வரும் அப்பீல் வழக்கின் விசாரணையில் அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு இன்று (அக்., 12) ஒத்திவைக்கப்பட்டது.

தீர்ப்பு
இன்று தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர் நிரபராதிகள் எனவும், அவர்கள் கொலை செய்யவில்லை எனக்கூறி, வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டனர். ஆதாரங்கள் இல்லாததால், வழக்கில் சந்தேகத்தின் பலனை இருவருக்கும் அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (44)

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  இந்தியாவில் பணம் படைத்தவர்கள் எத்தனை கொலை செய்தாலும் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். அட போங்கய்யா நீங்களும், உங்கள் நீதிகளும்.

 • Mal - Madurai,இந்தியா

  Good that the parents are let free... The loss of their only child itself is enough for them... Why torture them again.... And yes this is a lesson to all... It's not enough if people just give birth... Before parenting you can be anything but after a child is born the responsibility is yours... Money is not important being with the kid is important for a mother... This is what our ancestors did. . While they regarded ladies as equal to gods n worshipped them as godesses, they had them in kitchen to ensure a healthy family in every family... And to be a moral support to all in family... Be it oldies, hubby or kids.... Because God knew ladies are capable of giving everything , expecting nothing... And every shakthi in home made a great country....

 • Shanu - Mumbai,இந்தியா

  இதுவே தமிழ்நாடு போலீஸ் ஆக இருந்தால், யார் கொலை செய்தார்கள் என்று கண்டு பிடித்திருப்பார்கள். வடநாட்டுகாரங்கள் முட்டாள்கள். தென் இந்திய மக்களை போல் ஸ்மார்ட் கிடையாது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நீதிமன்றம் விடுவித்தாலும் அவர்கள் நடைபிணங்கள்தாம்... அந்த மகளின் நினைவே அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுவிடும்..

 • M Ragh - Kanchi,இந்தியா

  Appo. CBI.Court expenses ellam waste ah,..

 • ஸ்ரீதேவி - தூத்துக்குடி,இந்தியா

  இந்த கேஸில் ஏகப்பட்ட முரண். சம்பவ இடத்திற்கு, போலிஸுக்கு முன்பே மீடியாக்கள் உள்ளே வந்து தடயங்களை கலைத்து விட்டனர். அடுத்து மாடியில் இருந்த வேலையாள் பிணத்தை வீட்டை சரியாக சோதனை செய்யாமல், முதல் நாள் கண்டுபிடிக்காமல் அடுத்த நாள் கண்டுபிடித்த போலிஸின் அலட்சியம். மாடியில் ஒரு பிணம் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் போது, பெற்றோர்கள் மகள் அஸ்தியை கரைக்க கங்கை நதிக்கரைக்கு பயணம் மேற்கொள்ளுவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி. கேஸில் நேரடி சாட்சியமோ, தடயமோ இல்லாமல், சிபிஐ இந்த கேஸை 2011 ல் மூடி விட்டது. என் மகள் கேஸை மூடக் கூடாது, யார் கொன்றது என்ற உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்று மனு போட்டு, மீண்டும் கேஸை ஓப்பன் செய்தது இதே பெற்றோர்கள் தான். அதன் பின்பே சிபிஐ சந்தர்ப்ப சாட்சிகள் பெற்றோர்களையே குற்றவாளிகளாக காட்டுகிறது என்று கீழ் கோர்ட்டில் அவர்களை குற்றவாளிகளாக்கி விட்டார்கள். அதற்கு முன்பே மீடியாக்களும் அவர்களை குற்றவாளிகளாக்கி விட்டனர். இந்த கேஸ் முழுவதும் சிபிஐ மற்றும் போலிஸின் அலட்சியம் மற்றும் பொறுப்பின்மை தான் தெரிகிறது. உண்மை ஒன்று திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதோ என்பதே என் சந்தேகம். அதற்கு போலிஸும், சில மீடியாக்களும் உடந்தையாக இருக்கலாம். வெளிப்படையாக தெரிவதெல்லாம் உண்மையல்ல. Mistrust the Obvious

 • S.prakash - Tiruchi,இந்தியா

  ஆதாரங்கள் இல்லையா அல்லது சி.பி.ஐ. விசாரணை சரி இல்லையா அல்லது எந்த நீதிபதி சொன்னது தவறு அல்லது எந்த நீதிபதி சொன்னது சரி.

 • முராதீ - New Delhi,இந்தியா

  சமூக நடப்புப் பிரச்சினைகளைச் செவ்வனச் சித்தாிக்கும் இவ்வழக்கில் வாதப்பிரதிவாதங்கள் நீதிமன்றங்களின் உள்ளிலும் வெளியிலும் நிறைய நிரம்பி வந்திருக்கின்றன. வெறும் சந்தேகத்தின் போிலும், சூழ்நிலைச் சான்றின் அடிப்படையிலும் முடிவெடுப்பது சாியன்று என்று இன்று கூறியுள்ளது இலாஹாபாத் உயா்நீதிமன்றம். அன்றே சிபிஐ (CBI) சிறப்பு நீதிமன்றம் 'போதிய, தகுந்த ஆதாரம் அற்றதன் போில் வழக்குத் தொடராமல் மூடுவது உசிதம்' என்ற சிபிஐ (CBI) வழக்கறிஞாின் (prosecutor) பாிந்துரையைப் புறக்கணித்துச் 'சூழ்நிலை ஆதாரம் போதுமானது' என்று விசாரணை தொடரந்தது இதில் குறிப்பிடத் தக்கது. இன்றைய உயா்நீதிமன்றத் தீா்ப்பு வரவேற்கத் தக்கது.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  என்னெங்க தீர்ப்பு சொல்றீங்க....? வூட்ல இருந்தது நாலு பேரு. அதுல ரெண்டு பேரு அவுட்டு.... ஊட்டு கதவயும் யாரும் ஒடச்சி உள்ள பூர்ல.... காரு ட்ரைவர் அந்தெ பொண்ணோட ஆயி அப்பன கடேசியா ராத்திரி ஒம்போதர ஊட்டுக்குள்ள போயி கதவை தாப்பா போடறத பாத்ருக்கான்.... வேலைக்காரன்தான் கொலைய செஞ்சுருப்பானு ஆத்தாகாரி வேலைக்காரிகிட்ட காலயில சொல்றா... அதுக்குள்ள ஊட்டுக்குள்ள வெளியிலன்னு எல்லாத்தையும் சுத்தம்பண்ணி தொடச்சி வெச்சுர்ராங்க... மக்காநாலு வேலைக்காரன் பாடிய மாடி கதவ ஒடச்சி கண்டுபுடிக்கறாங்க.... கீழ்கோர்ட்டு ஜட்ஜு 26 தடயத்த மூலமா வெச்சு குத்தவாளின்னு தீர்ப்பு சொல்லிட்டாரு... இப்பம் என்னடான்னா ஆயி அப்பன் ரெண்டும் புடம் போட்ட தங்கம்னு சொல்றானுவ.... பணக்காரனுக்குன்னு தனீ நீதி இந்தியாவுல மட்டுந்தேன் இருக்கு....

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  கவுரவ கொலையாக இருக்கலாம்...ஆனால் ஆதாரம் இல்லை என்பது மிக பெரிய பிளஸ் பாயிண்ட்....ஆதாரத்தை அழித்ததற்கான ஆதாரமும் இல்லை...அந்த காலத்தில் அவ்வளவு CCTV இருந்திருக்க வாய்ப்பில்லை... ஆனாலும் அந்த சிறுமியின் மீது முழு பழியையும் இந்த பெற்றோர் சுமத்தி பலிகடா ஆக்கியிருக்கக்கூடாது... அந்த பெண் ஒருவேளை தவறு செய்திருந்திருநாதால், அந்த பெண்ணை தனியாக விட்டுவிட்டு, பலகாலம் , இவர்கள் பணத்துக்காக வேலையை மட்டுமே குறிக்கோளாக வைத்திருந்து , குழந்தையின் நலனை மறந்த, பெற்றோர் என்ற வகையில் கூட இவர்கள் தணடனைக்கு உரியவர்கள் தான்... இது மாடர்ன் எலைட் சொசைட்டி க்கு நல்ல ஒரு பாடம்... திருந்துங்கள்.....விடலை பிள்ளைகளை , நன்கு கவனியுங்கள்....

 • Nancy - London,யுனைடெட் கிங்டம்

  இந்தியாவில் எத்தனை குமாரசாமிகள் இருக்கிறார்கள்

 • B.Indira - thane,இந்தியா

  யார் தான் கொன்றார்கள் ?அந்த பெண்ணின் உடல் கைதேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரை போல் கூறு போட பட்டிருந்தது . ஏன் அது அப்பாவாக இருக்க முடியாது ? குழந்தைகளை கவனிக்காமல் பணத்தின் பின்னால் சுற்றினால் இப்படி தான். வெளியிலிருந்து யாரும் வர சாத்தியம் இல்லை. ரத்த கரையை கழுவிவிட்டது அம்மா .ஏன் மறைக்க வேண்டும்

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  எந்த ஒரு கேஸையும் சீக்கிரம் விசாரித்து தீர்ப்பு சொல்லும் நிலையில் இல்லை இந்த கோர்ட் என்பதே இதன் சாராம்சம். அதாவது இழுக்க இழுக்க இன்பம் இறுதிவரை. 4 .02 கோடி வழக்குகள் தேக்கம் கோர்ட்டுகளில்? ஏன்? வாய்தா, ஜாமீன் ஒரு சரியான திட்டம் இல்லை.

 • M Venkateswaran - Bharuch- Gujarat,இந்தியா

  பிறகு யார் தான் அவர்களை கொன்றது . அவர்களாகவே கத்தியால் குத்தி கொண்டு இறந்தார்களா?????

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ஆங்கில டிவி ஊடகங்களுக்கு டெல்லியில் எது நடந்தாலும்   அதுதான் பெரிய முக்கிய பரபரப்பு செய்தி. அதன் விளைவே இந்த கொலை பற்றிய கவரேஜ் எனக்கூட தோன்றியது. இத்தனைக்கும் ஆங்கில சானல்  நேயர்களில் மெஜாரிட்டி   தென்னிந்தியாவில்தான் என்பது ஒரு முரண் 

 • Nancy - London,யுனைடெட் கிங்டம்

  அப்போ கொன்னது யாரு

 • அப்பாவி -

  அப்போ சி.பி.ஐ யும் நம்ம தமிழக தொப்பை போலீசோட சேர்த்தி தானா? எல்லோரையும் ஸ்காட்லாண்ட் யார்டுக்கு அனுப்புங்க....

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  அப்போ ஆருஷி தல்வாரையும், ஹேமந்தையும் கொன்றது யார்? சி.பி.ஐ க்கு இதை பற்றி கவலை இல்லை. சரிதானே.?

 • vnatarajan - chennai,இந்தியா

  உண்மையில் என்ன நடந்தது என்பது கடவுளுக்குத்தான் தெரியும் சிபிஐ சரிவர விசாரித்து சாட்சியங்களை கொண்டுவரவில்லைபோல் தெரிகிறது. உண்மையிலேயே அந்த பெண்ணின் பெற்றோர்கள் குற்றவாளியென்று சிபிஐ நினைத்தால் அவர்கள் இன்னும் ஆதாரங்களை சேகரித்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யலாமே ஒரு குற்றமற்றவன் தண்டிக்கக்கூடாது . அதேபோல் ஒரு குற்றவாளி தப்பிக்கக்கூடாது

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  நாட்டில் இருந்த எத்தனையோ முக்கிய சம்பவங்களையும் அரசியல் பிரச்னைகளையும் மூடிமறைக்க UPA  அரசு சார்பு ஊடகங்கள் இந்தக்கொலையை பலமாதங்கள் தலைப்புச்செய்தியாக போட்டன.(அதே காலக்கட்டத்தில் வேறு கொலைகளோ விபத்துக்களோ இங்கு நடக்காமலா இருந்தன?). இப்போது வந்துள்ள தீர்ப்பு அதே ஊடகங்களுக்கு சிலநாள் தீனிபோடும்.பிறகு தேவைப்படும்போது இன்னொரு செக்ஸ் கொலை அல்லது விபத்து .ஊடக விசாரணை.ஊடக தீர்ப்பு. etc ., பரபாப்பு சென்சேஷன்களுக்கு மக்கள் என்றுமே அடிமை. சுயநல ஊடகங்களுக்கும் அதுவே தீனி 

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  கௌரவக் கொலை ..... மேலும் சொல்ல ஒன்றுமில்லை .....

 • Vasanth Saminathan - Trivandrum,இந்தியா

  இப்போதான் ஐகோர்ட்டுக்கே போயிருக்கா நான் இந்த கேஸ் முடிஞ்சே பலவருஷம் ஆச்சுன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்.

 • Appu - Madurai,இந்தியா

  குற்றம் செய்யாத,,தன்மானம் உள்ள பெற்றோர் என்றால் உண்மை குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க முயற்சிக்கவேண்டும்....வழக்கு பதிவு செய்ய வேண்டும்..ரெண்டும் இல்லேன்னா குறுக்கு வழில பெரிய அரசியல் வி ஐ பி மூலம் (ஏன் மிரட்டல் யோகியாக கூட இருக்கலாம் அல்லவே??) இதை ஒன்றுமில்லாது செய்ததாகவே கருத இயலும்...ஜனநாயகத்த குழி தோண்டி பொதச்சிட்ருக்கானுவ...

 • Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்

  2008 இல் ஆரம்பித்த வழக்கு 2017 இல் முடிவுபெறுகிறது. இருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆருஷியின் பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து பின் இப்போது நிரபராதி என்று தீர்ப்பு.அந்த பெற்றோர்களுக்கு எத்தனை மனஉளைச்சல் . பெண்ணை பறிகொடுத்த மனதுக்கு பழியையும் ஏற்கவேண்டியனிலை யாருக்கும் வரவேண்டாம். புலனாய்வு மற்றும் நீதி தோல்வியடைந்ததா? இந்த தீர்ப்புக்கு இத்தனை வருடம் வேண்டியிருந்ததா? இது சரிதானா? இந்த வழக்கிற்கு முதன் செலவானது எவ்வளவு? அதை யார் கணக்கில் எழுதுவது?கொலையான இருவரின் இதுவரை கண்டுபிடிக்கபடாத கொலையாளி யார் ?

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  இருவரையும் அன்பு மகளிடம் செல்லலாம்

 • Appu - Madurai,இந்தியா

  பெத்த மனசு பித்து பிள்ளை மனசு கல்லுன்னு சொல்லுவானுக...அத இந்த நிகழ்வுல என்னால நல்லா உணர இயலுது...

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///சிறுமி ஆருஷி கொலை வழக்கு பெற்றோரை விடுவித்தது ஐகோர்ட்///பாவம் சட்டம் ஒரு இருட்டறை, என்ன சொல்ல இவர்கள் இதுவரை அனுபவித்த வேதனைகள் எவ்வளவு, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு கூட சந்தேகத்தின் அடிப்படையிலேயே வழங்கியது, சந்தேகத்தின் பலனை இவர்களுக்கு தரவில்லை.இத்தனைக்கும் இவர்கள் தங்கள் பெண்ணை பறிகொடுத்தது மட்டுமல்லாமல், எல்லா நீதிமன்றங்களுக்கு அலைந்த அலைச்சல் சும்மா இல்லை, ஏதோ இவர்களால் முடிந்தது செய்தார்கள், சாமானியர்களுக்கு இது சாத்தியமா? ஆனால் நீதிவென்றதில் மகிழ்ச்சி.

 • Appu - Madurai,இந்தியா

  சி பி ஐ மிஸ்டேக்?சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக சி பி ஐ கோர்ட்டு கொடுத்த தண்டனையை நிரபராதிகள் என்று ஐகோர்ட்டு மாற்றி கொடுத்திருப்பது இந்திய சி பி ஐ யின் தன்மையை காட்டுகிறதா??இல்லை சி பி ஐ யின் தற்போதாய மதிப்பை காண்பிக்கிறதா?சரி அது ஒரு புறம் இருக்கட்டும்..நியாயத்தின் நினைவிடம் உண்மையின் பிறப்பிடம் தீங்கென்றால் அறியாத உ பி அலகாபாத்தில் உள்ள நீதி மன்றம் இப்படி தீர்ப்பு கொடுத்திருப்பதை சி பி ஐ எதிர்த்து டில்லி சுப்ரீம் கோர்ட்டை நாடுமா?இல்லை கிடப்பில் போடவேண்டிய சூழ்நிலையில் அமைதியாக இருக்குமா?உண்மைகள் சாகடிக்கப்படுவது நம் நாட்டிற்கு சாபக்கேடு...நீதிமன்றமே சிலரால் சில இடங்களில் ஆட்டுவிக்கப்படுவது போல உணர இயல்கிறது....இதே நீதி மன்றம் இவர்களை விடுவித்து மேற்கொண்டு சி பி ஐக்கு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கொண்டுவர உத்தரவிட்டிருந்தால் சிறிதாவது நீதிமன்றத்தின் தன்மையை உணர முயற்சிக்கலாம்..ஆனா இந்த தீர்ப்பு மொத்தமாக முடிவு செய்யப்பட்டு மொக்க பூட்டு போட்டு மூடு விழா செய்வது போல தரம் தாழ்ந்த ஒன்றாக உள்ளது...

 • Nancy - London,யுனைடெட் கிங்டம்

  இது நல்ல தீர்ப்பு, ஏன் தவறான தீர்ப்பு கொடுத்த முதல் நீதி அரசருக்கு என்ன தண்டனை , இது தான் இந்தியா ??

 • Nancy - London,யுனைடெட் கிங்டம்

  சரியான தீர்ப்பு ,

 • G Mahalingam - Delhi,இந்தியா

  பணம் 100ம் செய்யும். மேல் முறையீடு தேவை.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  மனசாட்சி இவர்களை கொள்ளட்டும் என்று நீதிபதிகள் விட்டு விட்டார்கள். சிறைக்குள் இருந்திருந்தாலாவது இவர்களின் உயிருக்கு பாதுகாப்பு எனலாம். வெளியில் இருந்தால் இவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு மிக மிக அதிகமான வாய்ப்புகள் தான் உள்ளது. ஆணவக் கொலை என்று இவர்களுக்கு நிச்சயம் தெரியும். நீங்கள் மீண்டும் சிறைக்கு செல்வது தான் உங்கள் உயிருக்கு உத்திரவாதம் அளிக்கும்.

 • tshajahan - Vellore,இந்தியா

  Expected judgement, because from the day 1 of this case and enquiry lot of confusion and also there is no direct evidence for the Talwar murder case. Finally where there is a money, there is a favour of results.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  சிறையில் இருந்தாலாவது தற்கொலை செய்து கொள்ளாமல் இருப்பார்கள்.. இன்னும் கொஞ்ச நாளில் இவர்கள் தற்கொலை செய்து கொள்வது உறுதி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement