Advertisement

வீடு வாங்குவோர் இனி ஒரே வரி செலுத்தினால் போதும் : ஜெட்லி தகவல்

நியூயார்க் : அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில்,' இந்தியாவின் வரி சீர்திருத்தங்கள்' என்ற தலைப்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உரையாற்றினார்.

ஜிஎஸ்டி.,யின் கீழ் ரியல் எஸ்டேட் :

அப்போது அவர், இந்தியாவில் அதிக அளவில் வரி ஏய்ப்பு நடைபெறும் துறையாகவும், அதிக பணப்புழக்கம் நடக்கும் துறையாகவும் கருதப்படுவது ரியல் எஸ்டேட் துறை தான். அத்துறை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் மக்கள் அடையும் சிரமங்களை தவிர்க்க, ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்பட்டு, முறைப்படுத்தப்பட உள்ளது.

இனி ஒரே வரி தான் :
சில மாநிலங்கள் ரியல் எஸ்டேட்டை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என சில மாநிலங்களும், வேண்டாம் என சில மாநிலங்களும் கூறுகின்றன. ஒருமித்த கருத்து ஏற்படுவதற்காக நவம்பர் 9 ம் தேதி கவுகாத்தியில் நடக்க உள்ள அடுத்த ஜிஎஸ்டி கவுன்சிலின் ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதனால் வீடு வாங்குவோர் இனி ஒரு வரி மட்டும் செலுத்தினால் போதும்.

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை இந்தியாவை மாற்றுவதற்கான அடிப்படை சீர்திருத்தம் ஆகும். இதனால் அதிக அளவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடக்கும். இது குறுகிய கால சவாலாக இருந்தாலும் நீண்ட காலம் பயனளிக்கக் கூடிய திட்டமாகும். இவ்வாறு ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (57)

 • bhaskar - chennai,இந்தியா

  All employees paying income tax and gst around 38% apart from we have to pay bribe to govt people for any govt related activities finally we are getting 50% of earned which is not sufficient to run family even we are paying school fees around 60000/ for children for an year for one child so all middle class people are in wrost situation in the mean we have to pay bribe to politicians if any thing to be done. Now still politician are more money from public without paying any single tax paying to govt. Now where we are??????

 • Visu Iyer - chennai,இந்தியா

  நியூயார்க் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைய அடைய வேண்டுமா...? இலவச ஆலோசனைக்கு அணுகுங்கள்

 • Shanu - Mumbai,இந்தியா

  பணத்தை மக்களிடமிருந்து வசூலிப்பதில் இருந்தால், நாட்டின் வளர்ச்சிக்கு தேவையானதை எப்போ நினைப்பார்கள்??

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  இப்போது நடப்பது எல்லாம் நமது சாமான்ய (அதிகம் படித்தும் படிக்காமலும்) மக்களுக்கு புரிவதில்லை .புரிந்து கொள்ள பொருளாதரம் (economics) படித்த நல்லவர்களிடம் கேட்டால் தெரியும் . சுருக்கமாக சொல்கிறேன் தேங்காய் வேண்டும் என்றால் தென்னை மரம் ஏறித்தான் ஆக வேண்டும். ஏறி பார்த்தால் தெரியும் அதில் எத்தனை சிரமம் என்று . கீழே நின்னுட்டு நொள்ள சொல்லக் கூடாது .இதன் பலன் இப்போது புரியாது. நாளைய உலகம் நரேந்திர மோடி பெயர் சொல்லும்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  உடனடியாக தொந்தரவு தான் அதிகம், பலன் ரொம்ப தூரத்தில் இருக்கிறது, நிறைய சவால்களை சந்திக்கவேண்டியுள்ளது

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இது குறுகிய கால சவாலாக இருந்தாலும்... குறுகிய காலத்தில் இவ்வளவு பொருளாதார வீழ்ச்சி கூடாது...

 • Ram - Panavai,இந்தியா

  ஆமா எல்லோரும் பரதேசம் போனபின் பலன் கிடைக்கும்

 • Krishnaswamy Karuppuswamy Gounder - Chennai,இந்தியா

  Hariharan Iyer Nagpur. Sonna kathai Super

 • முக்கண் மைந்தன் - Chennai,இந்தியா

  போ... போ.... சோலி எதுனா இருந்தா பாரு... ...

  • yaaro - chennai,இந்தியா

   தம்புடு ..ஆட்சில இருக்கவன பாத்து போ போ ன்னு சொன்ன ..அவன் எதுக்கு போறான் ..நீ கிளம்பு ..காத்து வரட்டும்

 • rajan - kerala,இந்தியா

  இன்று வரை பத்திர பதிவு முத்திரை தாள் கட்டணம் அதை பதிவு செய்ய கிம்பளம் கொடுத்தோம் இப்போது நீங்கள் அந்த வீட்டு விலை மேல GST போடா போறீங்களா? அதற்கும் மேல விற்பவர் வருமான வரி செலுத்த வேண்டும். இப்படி தொடர் வரி தொடர்கதையாகும். இது எப்படி ஒன் பாயிண்ட் வரி விதிப்பாகும் என்பதை தெளிவு படுத்துங்களேன். எனவே தொழில் சார்ந்த முன்னேற்றம் கொடுக்கும் வரி முறையை கடைபிடிப்பது தான் தொழிலும் வளரும் அரசுக்கு வரியும் சார்ந்த வருமானமும் வரும்.

 • முக்கண் மைந்தன் - Chennai,இந்தியா

  போ... போ,.... வேற சோலி எதுனா இருந்தா பாரு... ...

 • மணி மாறன் - chennai,இந்தியா

  ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் தோல்வியில் முடிந்த ஒன்று.. அதன் ஒரே குறிக்கோள் பழைய காங்கிரஸ் ரூபாய் நோட்டை எல்லாம் ஒழித்து விட்டு புதியவை எல்லாமே பிஜேபி நோட்டு என்று மக்கள் சொல்ல வேண்டும்..

 • jysen - Madurai,இந்தியா

  Please don't give importance to this peddler in words whose only achievement is sing Indian economy to the bottom . Long live Captain Amrinder Singh who defeated this preter in Amritsar.Long live Kirti Azad who removed the façade of this fellow.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  புளுகு மூட்டை ...

 • Jayaraman Gopalakrishnan - Singapore City,சிங்கப்பூர்

  அருமை . வரி வருமானம் அதிகரிக்கும் போது, அதிக பள்ளிகளையும், சுகாதார மேம்பாட்டு திட்டங்களையும் கொண்டு வந்து தேசத்தை மேம்படுத்த வேண்டும்.

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   புல்லட் ட்ரைன் விட்டு பொருளாதாரத்தை டி ரெயில் பண்ணுவாங்க. தேவையில்லாம ஒற்றை டெண்டர் முறையில் ரெண்டு லட்சம் கோடிக்கு வெடிக்காத ராக்கெட் வாங்குவாங்க. காயலான் கடை பிளேனை வாங்குவாங்க.

  • Velai - Ahmadabad,இந்தியா

   புல்லட் ரயில் அரசு பணத்தில் இருந்து கட்டவில்லை. எவனோ கொடுக்கிறான், இன்றையில் இருந்து இருப்பது வருடம் கழித்து தவணை கட்ட ஆரம்பித்து முப்பது வருடங்களில் அதில் பயணிக்கும் பயணியிடம் இருந்து வசூல் செய்து கட்ட இருக்கிறார்கள். முதல் இருப்பது வருடம் இந்தியர்கள் அனுபவித்து விட்டு தான் திரும்ப பணம் கொடுக்க ஆரம்பிக்க போகிறோம். தவிர வட்டி நினைத்தும் பார்க்க முடியாத அளவு. புள்ளி பூஜ்யம் ஒரு சதவிகிதம். (0.01 சதவிகிதம்). நினைத்தது கூட பார்க்க முடியாது. சைனா காரன் வட்டியை கொஞ்சம் பாருங்கள். அதற்க்கு மேலேயும் வட்டி உண்டு. ஆக புல்லட் ரயிலை இனி நிந்தனை செய்வதை தவிர்த்து உருப்படியாக ஏதாவது பேசுங்கள். முடிந்தால் சென்னை பெங்களூரு, சென்னை - மும்பாய், சென்னை - டில்லி, சென்னை - கொல்காத்தா, சென்னை - அந்தமான் (), சென்னை - ஸ்ரீலங்கா என்று வாய்க்கு வந்தபடி கேளுங்கள். செய்வதோ கேட்பதோ பயனுள்ளதாக இருக்கட்டும். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை. நீங்கள் நல்லவராக இருந்து புல்லட் ரயிலுக்கு போராடி சென்னைக்கு வாங்கி கொடுங்கள்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  இவனுங்க எதற்கு எடுத்தாலும் வெளிநாடுகளுக்கே சென்று நம் நாட்டு கொள்கைகளை பேசுகிறானுங்க ? நம் நாட்டு மக்களுக்கு எந்த ஒரு செய்தியும் இங்கு இருந்து கொடுப்பது இல்லை, என்னவோ கூத்தாடி தனமாக இருக்கிறது வந்தேமாதரம்

  • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

   லயன் டாக்டர் சேகர் அவர்களே, அதிகமாக நடுநிலையாக கருத்து எழுதுகிறவர்களில் , தாங்களும் ஒருவர்... உங்களது இந்த கருத்தில் ஒவ்வொரு இந்தியனின் ஆதங்கமும் உள்ளது...வாழ்த்துக்கள்.... கடுமையான வார்த்தைகளை தாங்கள் இதுவரை உபயோகித்ததில்லை, கருத்துக்களில்.... தாங்களே கடுமையான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டிய விதத்தில் பாஜக அரசு உங்களையும் தள்ளியுள்ளது... இந்திய பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்காத ஒரே பிரதமர் , நமது பிரதமராகத்தான் இருக்கக்கூடும்...

 • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

  ஒரே வரி என்று சொல்லிட்டு 8% இருக்கும் பத்திர பதிவு கட்டணததை 28 % மாக ஆக்குவார்கள் பிறகு தமிழக அரசு தனியாக 10 % வரி விதித்தது கொள்ளலாம் என்பார்கள். மக்களை சுரண்டி பிழைக்கும் அரசு

  • A.L.BINDHUMADHAVAN - chennai,இந்தியா

   சரியாக சொன்னீர்கள். மக்களை சுரண்டி மற்றும் ஏமாற்றி கட்சியையும் அவர்களையம் வளப்படுத்தி கொள்கிறார்கள்

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  ஒரு நாட்டின் பொருளாதாரத்தை எப்படி நடத்தக் கூடாது என்ற தலைப்பில் இந்த பேச்சு நடத்தப்பட்டதா?

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கும், டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடவடிக்கைக்கும் என்ன சம்பந்தம் என்று சொல்வாரா? மதிப்பிழப்பு செய்யப்பட பணத்துக்கு ஈடாக நோட்டை அடித்து 99% வந்திடிச்சினும் சொல்லியாச்சு. அப்புறம் என்ன டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும்ன்னு ஒரு புளுகு? .

  • Velai - Ahmadabad,இந்தியா

   ஜெய் ஹிந்த் புரம் இப்போதெல்லாம் செய்தி தாள் படிப்பதில்லை போலும். கண்ணை மூடிக்கொண்டு இருக்காமல் கண்ணை திறந்து செய்தி தாள்களை படியுங்கள். போலி நிறுவனங்கள், ஒரே பெயரில் பான் கார்ட், வரி காட்டாமல் ஏய்ப்பவர்கள், செத்து போனவர்களின் கணக்குகளில் திருட்டு பணத்தை போட்டு எடுத்தவர்கள் என்று மிகப்பெரிய செய்திகளும் உள்ளன.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  பதிவு செய்ய ஸ்டாம்ப் டூட்டி மற்றும் ரெஜிஸ்ட்ரேஷன் 8% அதுவே முழி பிதுங்கும் போது, இப்போ புது கட்டிடங்களுக்கு ஜி.எஸ்.டி 12% கட்டணுமாம். பில்டர்கள் தாளிக்க ஆரம்பித்து விட்டார்கள். கட்டுமான பொருட்கள் அனைத்தும் ஜி.எஸ்.டி வரி வலையில் தானே உள்ளது. அதற்கும் வரி, அதற்கு மேலே வீட்டு விலையின் மேல் மேலும் 12% வரி. ஆக மொத்தம் 20% வரியாக சாவடிக்கிறது நமது அரசாங்கம். கடனுக்கு வாங்கி சேவை வரி, திருப்பி காட்டும் போது வரி. சாவும் போது ஒடம்பெல்லா வரி வரியா வரிக்குதிரை மாதிரி ஆயிடும்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  வீடுகட்டவன்றி  வெறுமனே முதலீட்டுக்கான மனைகளை வாங்கிப் போடுவதைத்தடை செய்தால் ஏழைகளும் வாங்குமளவுக்கு மனைவிலைகள் குறையுமே . அதுபோல விவசாய நிலங்களின் பதிவிலும் வங்கிக் காசோலை அல்லது வரைவோலை  கட்டாயம் என்றால்தான் அதில் நடமாடும் கறுப்புப்பணம் கட்டுப்படுத்தப்படும்.

  • balakrishnan - coimbatore,இந்தியா

   இந்தியாவில் அணைத்து நிலங்களும் அரசுக்கு மட்டுமே சொந்தம் என்று ஒரு உத்தரவு போட்டுவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை,

 • அப்பாவி -

  அரசு செலவில் ஹார்வர்டு பயணம்... அங்கே போய் இந்திய மக்களுக்கு ஆப்பு.... ராகுலும் இத்தையே பண்றார்... ஜெட்லியும் இதையே... உள்ளூரில் இவிங்க பப்பு வேகலியோ?

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  பதிவு அலுவலகத்துக்குப் போகாமலேயே ஆன்லைனில் ஈ முத்ரா மூலம் பதிவுக்கட்டணம் கட்டி நேரடியாக ரிஜிஸ்தர்   செய்து பத்திரத்தை டிஜி லாக்கரில் வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்த வேண்டும். அப்போதுதான் பதிவுத்துறை அதிகாரிகளின் கொட்டமடங்கும். போலிபத்திரங்களும்   ஒழியும்.

  • balakrishnan - coimbatore,இந்தியா

   ஆன்லைன் மூலம் பதிவு செய்வதில் எவ்வளவு சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது என்பதை நேரிடையாக சென்று பார்த்தால் தான் புரியும், மேலும் அரசாங்க வழிகாட்டி மதிப்பு க்கும் சந்தை விலைக்கும் உள்ள வித்தியாசம் இருக்கும் வரை கருப்பு ஒழியாது

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  " வரிய வேணும்னா ஒரே வரியாக்கலாம்.. ஆனால் ரிஜிஸ்டர் ஆபிசில் வளைத்து வளைத்து வாங்குகிறார்கள் அதை எப்படி நிறுத்துவது. நேராக கை நீட்டினால் மாட்டிக்கொள்வோம் என்று இதற்கு ஏஜென்ட் எல்லாம் வைத்திருக்கிறார்கள், கஷ்டம்..". - இக்கருத்தில் உள்ள விசயம், பத்திரபதிவு அலுவலர்களால் செய்யப்படுகிறதா? அல்லது இல்லையா?. இதற்கு, மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் ஜேட்லி அவர்கள், மிக சரியான நடவடிக்கையை எடுப்பாரா?. எடுத்தால், இந்திய பொதுமக்கள் அனைவரும், மத்திய நிதி அமைச்சருக்கு, பாராட்டுக்களை வாரி வாரி வழங்குவார்கள் தானே?.

 • vnatarajan - chennai,இந்தியா

  அமெரிக்காவில் உள்ளது போல் இந்தியாவிலும் ரியல் எஸ்டேட் தொழிலையும் ஓர் ஆர்கனைஸ்ட் செக்டராக கொண்டுவர வேண்டும். அதற்கு இன்னும் கடினமான சட்டங்கள் கொண்டுவரவேண்டும். சேபிபோல் ஒருநிறுவனம் அதை கண்காணிக்கவேண்டும்

 • velan - california,யூ.எஸ்.ஏ

  வரவேற்க வேண்டிய செய்தி . ஒரு முக்கியமான பிரச்சினையை மக்களுக்கு சொல்வது நல்லது . ஒருவர் அரசாங்க வழிகாட்டு மதிப்பை விட கீழ் வாங்கினால் , உதாரணமாக அரசாங்க மதிப்பு 3000/- ஆனால் வாங்கிய மதிப்பு 2000/- இவ்வாறு இருந்தால் இதற்கு இருக்கும் வித்தியாசம் 1000/- ரூபாயை மத்திய அரசு தனி நபர் வருமானமாக கணக்கில் கொண்டு அதற்கு அதிகபட்சம் அவர் அவர் வருமான ஸ்லாப் படி அதிக பட்சம் 300 ரூபாயை வருமான வரியாக செலுத்த வேண்டும். எனவே ஒரு வரி என்பது வரவேற்க வேண்டியது. இல்லை என்றால் வாங்கும் நபர் மத்திய , மாநில அரசுகளிடையே அல்லோலப்பட வேண்டும்.

 • Hariharan Iyer - Nagpur,இந்தியா

  இந்த டோல் தொப்பி மடையனுக்கு என்ன சொன்னாலும் புரியாது. முதுகெலும்பு இல்லாமல் பெயரை மாற்றி எழுதும் இவர்களால் மோடி எதிர்ப்பு ஒன்று மட்டும் தெரியும். எந்த ஒரு கார்பொரேட் கடனும் தள்ளுபடி செய்யப்பவில்லை என்று இந்தியாவில் சின்ன குழந்தைகளுக்கு கூட தெரியும் இந்த மடையனுக்கு தெரியவில்லை. பேங்க் தன்னால் வசூல் செய்ய முடியாத கடனை வராக்கடன் என்று சொல்லி அரசாங்கத்திடம் வசூல் செய்து தரும்படி சொல்லுவார்கள். அரசாங்கம் ED டெபார்ட்மென்டிடம் ஒப்படைத்து அவர்கள் கடனாளியின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விடவுவது மற்றும் கைது செய்வது என்று action எடுப்பார்கள். இது தான் முறை. இதை எத்தனை தடவை சொன்னாலும் இந்த மரமண்டையர்களுக்கு புரியவில்லை. பிஜேபி சர்க்கார் வந்து பிறகு ஒரு கடனும் தள்ளுபடி செய்யப்படவில்லை. காஷ்மீரில் தீவிரவாதிகளை தினசரி 3 , 4 என்று சுட்டுத்தள்ளுகிறார்கள் என்ற கோபம். 3 தலாக் சொல்லி 5 பேரை திருமணம் செய்து 25 குழந்தைகளை பெற்று தள்ளி அவர்கள் சமுதாயத்தை இனிமேல் வளர்க்க முடியாது என்ற கோபம் எனக்கு புரிகிறது.

  • Dol Tappi Maa - NRI,இந்தியா

   பொய் பேசுவது பிஜேபி யினர் வழக்கம் . சென்ற மாதம் இந்தியன் எஸ்பிரஸில் வந்தது . சென்ற வருடத்தை விட NPA writeoff 41 % அதிகரித்து உள்ளது . சென்ற வருடம் பிஜேபி சொம்பு sbi தலைவர் 63 wilful defaulters கடன் தள்ளுபடி செய்து உள்ளார். ஜாதி மத வெறி உள்ளவர்கள் சும்மா வளர்ச்சி தேச பக்தி என்று பொய் பேசுவது ரொம்ப நாளைக்கு ஓடாது .

  • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

   Mr. ஹரிஹரன் ஐயர், உங்கள் அரசியல் நோக்கத்தை, ஏழை மக்களுக்கு என்ன செய்தீர்கள், விவசாயிகளுக்கு என்ன செய்தீர்கள் என்று எல்லாம் மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். இன்னமும் தலாக், 5 பேரை திருமணம் செய்கிறான், குழந்தை பெற்று தள்ளுகிறான் என்று குறி எல்லாம் அரசியல் பண்ண முடியாது புதிதாக ஏதாவது யோசியுங்கள்.

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   அப்படி அம்பானி, அதானி சொத்து எதையும் ஏலத்துக்கு விட சொன்னதா செய்தி இல்லையே அய்யரே. முதல் ஐந்து பெரும் கடனாளிகளில் இவங்க பேரு இருக்கு. கடன் திருப்பி தராதவர்கள் பட்டியலிலும் இவங்க பேரு தான் முதலிடம். ஆனா சொத்து ஒன்னும் ஏலத்துக்கு வரல்லியே.

  • Dol Tappi Maa - NRI,இந்தியா

   coalgate scam அதிக பலன் பெற்ற நிறுவனம் அதானி . இது எல்லா பபேரிலும் வந்தது .

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///வீடு வாங்குவோர் இனி ஒரே வரி செலுத்தினால் போதும் : ஜெட்லி தகவல்// வாங்குற சம்பளமே வருமானவரி கட்டிய பிறகுதான், ஆனால் அதன் பிறகும் கஷ்டப்பட்டு வாங்குற ஒரு வீட்டுக்கும் பல சதவீதம் வரி என்பது மிகவும் கொடுமை. அதனை மிக சுயமாக ஒற்றை இலக்கத்தில் இருந்தால் கூட பரவாயில்லை, பதிவு வரி, GST மற்றும் அங்கே பதிவாளர் வரி என்று சுத்தி சுத்தி வசூலிப்பது மிக கொடுமை.

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  ப்ளீஸ் ராஜினாமா செய்

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  இன்னமும் ரூபாய் நோட்டு மாற்று நடவடிக்கையாளா டிஜிட்டல் பரிமாற்றம் அதிகரிக்கும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார் .. பண புழக்கம் முன்னர் இருந்ததை விட இப்போது அதிகரித்து விட்டது .. சென்ற மாதத்தில் ஆர்பிஐ கொடுத்த ரிப்போர்ட்டில் தெளிவாக இருக்கு .. இன்னும் எவளோ நாளைக்கு இதே புளுகு ??

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  நல்ல செய்தி , உடனடியாக GST யில் கொண்டுவாருங்கள். ரியல் எஸ்டேட்காரர்கள் ,பதிவு துறை அதிகாரிகள் அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

  • Raman - kottambatti,இந்தியா

   நீ வைத்திருக்கிறது ஒரே வீடு அதுவும் உங்க அப்பன் கட்டியது.. பிறகு எதுக்கு மாதம் 3 வீடு வாங்குற மாதிரி கதை சொல்லுறே.. எதற்கெடுத்தாலும் கருத்தா ???

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   இன்னும் வீடே வாங்கள........

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   Raman - LOL

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///அதிக அளவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடக்கும்//கிழிச்சிது, அதுதான் மொத்தமா ஊத்திக்கிட்டே ஐந்தே டிஜிட்டல் பண பரிவத்தனை. அரசுக்கு செலுத்த வேண்டிய எந்த சேவையாக இருந்தாலும், அதற்கும் ஒரு அடிஷனல் பணம் செலுத்த வேண்டும், அது ரயில்வே ஆகா இருந்தாலும் சரி, மின்கட்டணமாக இருந்தாலும் சரி, இன்சூரன்ஸ் ஆகா இருந்தாலும், சரி. ஏதுவாக இருந்தாலும் சரி, மேலும் இந்த இன்சூரன்ஸ் கட்டணத்திலேயே சில பொலிசிகளுக்கு online payment கிடையாது அவற்றிக்கு நேரடியாக அலுவலகதைத்தாய் நாடி சென்று பணம் செலுத்த வேண்டும், அந்த லட்சணத்தில் இருக்கிறது இந்த அரசு துறை நிறுவனங்கள், ஆனால் இவர் வெளிநாட்டில் சென்றும் கூப்பாடு போடுவது டிஜிட்டல் payment என்று. இது, இந்த ஜெட்லீ waste material .

  • Velai - Ahmadabad,இந்தியா

   உங்களுடைய கருத்தில் இருந்து நான் அறிந்து கொள்ளுவது 1 . நாங்கள் மாற விரும்ப வில்லை. 2) எங்களை மாற்ற முடியாது. 3) எங்களை மாறும் படி சொல்லாதீர்கள். 4) எங்களை மாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். 6) நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம். 7) ஆனால் மாற்றம் வேண்டும் என்று கூப்பாடு போடுவோம். 9) மாற்றம் ஒரே நாளில் வரும் என்று நினைப்பவர்கள் நாங்கள். 10) நாங்கள் ஒத்துழைப்பு தரமாட்டோம் ஆனால் எல்லா மாற்றங்களும் நடைபெற வேண்டும். 11) அது உங்களால் சாத்திய பட வேண்டும். 12) கட்சிகளும் அரசில் உள்ளவர்கள் பல லட்சம் கோடி ஊழல் செய்யட்டும் ஆனால் எனக்கு எந்த கவலையும் இல்லை. சொல்லிக்கொண்டே போகலாம்.

  • NRK Theesan - chennai,இந்தியா

   அரசுக்கு வரி செலுத்தணும்னா கசக்குது லாப சதவிகிதம் பார்க்காம மக்களிடம் கொள்ளையடிக்க வேண்டியது .ஏழைமக்கள் அறியாமையை பயன்படுத்த நினைப்பவர்கள் இந்த கஷ்டம் .

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

   /// Velai - Ahmadabad,இந்தியா -உங்களுடைய கருத்தில் இருந்து நான் அறிந்து கொள்ளுவது 1 . நாங்கள் மாற விரும்ப வில்லை///நீங்கள் கேனத்தன தனமாக நீங்கள் அறிந்துகொண்டால் நான் பொறுப்பல்ல, என்னுடைய 90 % பணபரிவர்த்தனைகள் இந்த (in total ) டிஜிட்டல் ஏன், இந்த மோசடி அரசு இதை கொண்டுவருவதற்கு முன்பே, சிறு கடைகளிலும் கூட கார்டு ஒப்புக்கொண்டால் அது எவ்வளவு சிறு தொகையாக இருந்தாலும் நான் கார்ட் மட்டுமே உபயோகித்து வருகிறேன். ஆனால் நான் சொல்ல வருவது, இந்த டிஜிட்டலுக்கு அரசு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதோ , அதே அளவுக்கு அதை ஊக்குவிக்க கட்டணத்தை தள்ளுபடி அல்லது சலுகைகள் தரப்படுதல் வேண்டும், அப்போதுதான் அது வெற்றி பெறும் என்பதே. கேனையே நீங்கள் இவ்விஷயத்தில் எப்படி, எப்போதும் போல அடுத்தவர்களுக்கு மட்டுமே உபதேசம் தானே, தானை தலைவர் மோசடி போல.

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   எங்களுக்கு (5), (8) நம்பர் பிடிக்காது.. இதை விட்டுட்டே Velai .. LOL..

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  வீடு வாங்கும்போது 8 % சதவிகிதம் stampduty வரி கட்டுகிறோம். இது தவிர சேவை வரி என்று அப்பார்ட்மெண்ட் வாங்கும் போது தனியாக வாங்குகிறார்கள் . இப்படி வரி மேல் வரி வாங்கி மக்களுக்கு ஒன்றும் திரும்பி வருவதில்லை . எல்லாம் ஊழல் களுக்கும் ,சிலைகளுக்கும் ,bullet train ,கார்பொரேட் கடன் பின்பு வரா கடன் தள்ளுபடி என்ற நவீன ஊழல், போன்றவற்றிற்கு நம் பணம் செல்கிறது .

 • karthikeyan -

  ஐட்டீ லீய நம்பினா . மூணே வரிதான். நாமம்

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  வரிய வேணும்னா ஒரே வரியாக்கலாம்.. ஆனால் ரிஜிஸ்டர் ஆபிசில் வளைத்து வளைத்து வாங்குகிறார்கள் அதை எப்படி நிறுத்துவது. நேராக கை நீட்டினால் மாட்டிக்கொள்வோம் என்று இதற்கு ஏஜென்ட் எல்லாம் வைத்திருக்கிறார்கள், கஷ்டம்..

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  ஒரே வரி செலுத்துவது ஓகே. ஆனால் அதை ஒரேயடியாக ஏற்றி விடாதீர்கள்.. இதெல்லாம் மாநில அரசின் வருமானமாச்சே விடுவார்களா..

  • sundaram - Kuwait,குவைத்

   அதானே, மாநிலங்களுக்கு எந்த வரியும் போய்விடாமல் எல்லா வருமானமும் மத்திய அரசுக்கே வருகிற மாதிரி வச்சாத்தானே மாநில அரசுகள் கையில தட்டு எடுத்துக்கிட்டு பிச்சை கேட்க வருவார்கள்.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   சுந்தரம் அவர்களே .... நீங்களுமா ? சட்டத்தின் துணையுடன் மத்திய அரசின் இது போன்ற முடிவுகளுக்கு கடிவாளம் போட முடியுமே ????

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement