Advertisement

சிறை வாழ்க்கை கொடுமையானது; நடராஜன் சொல்படி நடக்க வற்புறுத்தல்

சென்னை: ' நல்லதோ, கெட்டதோ, நடராஜன் குடும்பத்திலேயே பெரிய மனிதர். நான் இல்லாத சூழலில், அவரிடம் ஆலோசனை கேட்டு செயல்படுவதில் எந்தத் தவறும் இல்லை' என, , தினகரனை, சசிகலா கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.தினகரனுடன் சந்திப்புசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, ஐந்து நாட்களுக்கு முன், கணவர் நடராஜன் உடல்நிலையை காரணம் காட்டி, பரோலில் வெளி வந்தார். சென்னையில், தனது அண்ணி மகள் கிருஷ்ணப் ப்ரியாவின் தி.நகர் வீட்டில் தங்கியிருந்து, சென்னை குளோபல் மருத்துவமனைக்குச் சென்று நடராஜனை சந்தித்து திரும்பினார் .

ஒரு நாளில் ஒரு முறையாவது, குளோபல் மருத்துமனைக்கு செல்வது என்று முடிவெடுத்து, அதன்படி செய்த சசிகலா, மற்ற நேரங்களில், கட்சிக்காரர்களை ரகசியமாக சந்தித்தார். மற்றபடி, அவரை சந்தித்தவர்கள் எல்லோருமே உறவுக்காரர்கள்தான். ஆனால்,தினகரனை அழைத்து, பல முறை பேசியிருக்கிறார். கடைசியாக, நேற்று 11ம் தேதி, தினகரனை சந்தித்த சசிகலா, ரொம்பவும் உணர்ச்சிவயப்பட்டு பேசியிருக்கிறார்.


வேறு வழியில்லை'சிறை வாழ்க்கை கொடுமையானதுதான். அதுவும் ஒரு பெண்ணுக்கு, சிறை வாழ்க்கை மிகப் பெரிய தண்டனை தான். 2 ஜி வழக்கில் கைதாகி, டில்லி, திஹார் சிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, கிட்டதட்ட ஆறு மாத காலம் வரை சிறையில் இருந்தார். அந்த சூழ்நிலையை, அவர் ஒரு தைரியமிக்க பெண்ணாக எதிர்கொண்டார். அதே நிலைமை, தற்போது, எனக்கும், இளவரசிக்கும் ஏற்பட்டிருப்பட்டிருப்பது வருத்தத்துக்குரியது; வேறு வழியில்லை.

இன்றோடு பரோல் முடிகிறது. மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும். அதை நினைத்தாலே, நெஞ்சு பகீர் என்கிறது. இப்படிப்பட்ட சூழலில், சிறையில் இருந்து நான் ஆலோசனை கொடுத்து கட்சியை நடத்து என்றால், உன்னால் முடியவில்லை. ஆனால், கட்சி தான் எனக்கு முக்கியம். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளில் சரியான முடிவெடுக்கும், ஆலோசனை சொல்லும் நபர் ஒருவர் என்றால், அது என் கணவர் நடராஜனே. அதனால், அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பியதும், எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம்' என்று, உருக்கமாக சொல்லி இருக்கிறார்.ஆனால், தினகரன் தரப்பில், அதை ஏற்று செயல்பட தயாரில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (43)

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  சிறை வாழ்க்கை கொடுமையானது. இப்போதான் புரிகிறதா. கோடிகளில் கொடுத்து சுகமான சிறை வாழ்க்கையிலேயே இவ்வளவு கொடுமை. அப்போ ஜெ வுடன் ஜெயிலில் இருந்தபோது இந்த கரிசனம் இல்லையே. எம் ஜி ஆர் ஆரம்பித்து ஜெயலலிதாவால் கட்டி காத்த அ தி மு க உங்களிடம் வந்து மறைந்துவிடக்கூடாது. அரசியல்வாதிகளுக்கும் மந்திரிகளுக்கும் பாயும், அளவுக்கு மீறிய சொத்து குவிப்பு, இவர்கள் மீதும் பாயவேண்டும். இதற்கு ஒரே முன்னுதாரமாக இருக்கக்கூடிய தண்டனை சொத்து பறிப்பு குடும்பத்தாரிடமும் பேனாமிகளையும் சேர்த்து. இப்போது சிறையில் தண்டனை கிடைத்தாலும் தண்டனை முடிந்து திரும்பி வந்ததும் அந்த சொத்துக்களை வைத்து சுகமாகவே வாழ்கிறார்கள். இனி சொத்து சேர்க்கமுடியாவிட்டாலும் சேர்த்த சொத்தே நான்கைந்து தலைமுறைக்கு காணும். அப்படி பார்த்தால் இது ஒரு தண்டனையே இல்லை. தண்டனை என்பது மறுபடியும் செய்யமுடியாத தடுப்பு தண்டனை (டீடெரன்ட் பனிஷ்மென்ட் ) ஆக இருக்கவேண்டும். சிறைக்கு செல்லும்போது கூட புன்னகையோடு கை அசைத்து செல்லும் விதம் அறவே ஒழியவேண்டும்.

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  தப்பாக நடக்கும்போது இந்த ஞானோதயம் வராலேயே தாயீ. எவ்ளோ பேர்களின் சொத்துக்களை அராஜகமான வழியே போயி பிடுங்கினீங்க அப்போ சோகமா இருந்துச்சா அவா எல்லோருடைய சாபமும் உன்னை இத்தோட விடாது பாத்துண்ணே இரு

 • balasubramanian - coimbatore,இந்தியா

  திருந்துவது என்பதெல்லாம் முடியாதுங்க ,நான்கு வருடங்களில் வெளியே மறைமுக எதிரிகள் உருவாகி விடுவார்கள் .வெளியே வந்து பாறாங்கல் மனதோடு அவர்களை எல்லாம் சமாளிக்க வேண்டும் .கொஞ்சம் கஷ்டம்தான் .

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  ஆமாம் அதுவும் நடக்கும் ?இதுவும் கூட நடக்கும் ? பாக்கலாம்?

 • rajan - kerala,இந்தியா

  நல்லவேளை சின்னத்தாயி நம்ம டபுள் ஜீ யை முன்னுதாரணமான எடுத்தது நல்லதாய் போச்சு. அது வந்த கட்டுமரத்தில் கடைந்தெடுத்த கில்லி ஆச்சே துணிந்தவளுக்கு சிறை கூட பஞ்சு மெத்தை தானே. பாம்பின் கால் பாம்பறியுமே.

 • Shanu - Mumbai,இந்தியா

  4 வருஷம் சிறையில் இருப்பது பெரிய விஷயம் இல்லை. 2000 கோடி பணம் இருக்கு அது போதும். நாம் ஒரு கோடி பணத்தை பார்க்கவே கஷ்டம். இந்த 2000 கோடியை பிடுங்கி இருந்தால், அது தான் நிரந்தர தண்டனையாக இருந்திருக்கும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன கூடு விட்டு ஆவிதான் போனபின் கூடவே வருவதாரு.,..

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  ஆஹா நடராசனைதானே ரொம்பவே சரி இன்னம் அவிக பூரணகும் பேராலேயே சுவாசம்க்கே குலை இறுக்கமா நல்லா அட்வைஸ் தாயீ அந்த தினகரனுக்கு சுத்தம் அவன் செய்றாதெல்லாம் பிராடுதானே நீயும் பிராடு அதான் ரெண்டும் பிரெண்டாயிருக்கப்பலியா

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சிறை வாழ்க்கை கொடுமையானதுதான். அதுவும் ஒரு பெண்ணுக்கு, சிறை வாழ்க்கை மிகப் பெரிய தண்டனை தான்...இதையெல்லாம் குடும்பமா கூடி கும்மியடித்து மக்களின் பணததை கொள்ளையடித்த பொழுது தெரிந்து இருக்கவேண்டும்...எங்கே பார்ப்போம் நீங்கள் அநியாயமாக சேர்த்த பணம் நிம்மதியை தருகிறதா என்று ...

 • Malar - nsw,ஆஸ்திரேலியா

  என்னதான் ஒன்னும் பிரச்னை இல்லாதது போல் சிரிப்பது, பெயர் வைப்பதும் ஆரத்தி வாங்கிக்கொள்வதும் புடவையை மடிப்பாக செருகி கொண்டை போட்டு வலம் வந்தாலும் உண்மையில் வயத்தை கலக்கி க்கொண்டுதான் இருக்கிறது. அவளே சொல்லி விட்டாள் சிறை வழக்கை கொடுமைதான் என்று... கோடி கோடியாக பணம் கொட்டி கொடுத்தாலும் நல்ல மக்கள் யாரும் சிறைக்கு செல்வதை ஏற்க மாட்டார்கள் கனி மொழியை எதற்கு இழுக்க வேண்டும்? அவருக்கு இருக்கும் மரியாதை உனக்கு கிடையாது.

 • Jaya Ram - madurai,இந்தியா

  அன்று ஸ்டாலினை பார்த்து சிரித்தார் என்பதற்காக ஒபிஸ் அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்கினீர்களே இப்போ கனி மொழியினை பாராட்டி பேசிய உங்களை தற்காலிக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக்கியதில் தவறில்லையே, ஜெயா இருக்கும்போது நடராஜனை முழுமையாக எதிர்த்தார் ஆனால் அவரின் தலையீடு உங்களின் மூலமாக கொல்லைபுறவழியாக இருந்தது இப்போ நேரடியாக தலையிட சொல்கிறீர்கள் இன்னும் சசிகலாவின் பின்னால் தியாகத்தலைவி, அம்மாவுடன் 33 வருடம் இருந்தார் என்று கூறிக்கொண்டு அலைபவர்களே திருந்துங்கள் உங்கள் வீட்டில் நீங்கள் இருந்தால் தான் மகிழிச்சி இருக்கும், அவர்களை உங்களால ஆயிரக்கணக்கான கோடிகள் சம்பாரித்துவிட்டனர் நீங்கள் இன்னும் தெருகோடிகளில் தான் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொண்டு எதிர்காலத்தினையாவது எல்லோரும் இணைந்து சரி செய்ய பாருங்கள் ஏனெனில் அன்று இதே தினமலரில் நான் கூறினேன் இன்னும் சில ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகப்போகிறது என்று, இன்று ஆளுங்கட்சியிலும், எதிர்கட்சியிலும் அந்த நிலைமைதான் நிலவுகிறது வரக்கூடிய தேர்தலில் இந்நிலை நீடித்தால் யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் போய்விடும் நிலையற்ற சர்க்கார்களே அமையும், ( திமுக 50 -70 ,அதிமுக 50 - 80 , மற்ற கட்சிகள் 10 - 20 என்ற அளவில் பாமக, காங்கிரஸ்,பிஜேபி,வி காந்து போன்றவர்களும் மீதி உள்ள இடங்களை சீமான், வைகோ, வாசன், இரண்டு கம்யூனிஸ்ட்கள் மற்றும் சாதி,மத கட்சிகள் கைப்பற்றும் ) இதுதான் இன்னும் அடுத்த 10 - 15 ஆண்டுகளுக்கான நிலைமை எனவே மீதமுள்ள 4 ஆண்டுகால ஆட்சியினை நீங்கள் உங்களுக்கு அடித்துக்கொள்ளாமல் விட்டுக்கொடுத்து மக்களின் நலன் கருதி அவர்களின் எதிர்பார்ப்புகளை நல்லபடியாக நிறைவேற்றினால் அடுத்த முறை நீங்கள் தைரியமாக மக்களை எதிர் கொள்ளலாம் சொல்றதை சொல்லிப்புட்டேன்

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  தினகரன் மட்டுமே அதிமுகவை லைட்டா காப்பாற்ற முடியும்... தினகரன் இப்போதைக்கு தனி அணியாக பிரிந்து 20 MLA க்களை தானாகவே ராஜினாமா செய்ய வைக்க வேண்டும்...அப்புறம் அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால், நிச்சயம், திமுக ஜெயிக்கும்... தினகரன் 2 ஆம் இடத்துக்கு வரமுடியும்... EPS OPS ஐ மண்ணை கவ்வ வைக்கலாம்... அதிமுக தினகரன் கைக்கு வரும்...ஆட்சி, திமுக வசம் போனாலும் , அதிமுக தினகரன் கைக்கு வருவதே பெரிய வெற்றி தான்...பாஜகவுக்கு போக்குக்காட்ட இதனை விட சிறந்தவழி இல்லை...

 • அப்பாவி -

  பாவம்...அவருக்குத்தான் ஸ்பேர் பார்ட் வெச்சுக்கிட்டிருக்காங்களே...வண்டி ஓடுமா?

 • vnatarajan - chennai,இந்தியா

  என்னதான் சின்னம்மா கூனியாகவோ அல்லது சகுனியாகவோ சிறையிலிருந்து ஆடினாலும் மக்கள்/ தொண்டர்கள் இனிமேல் சசியின் குடும்பம் கட்சிக்குள் ஊடுருவ அனுமதிக்க மாட்டார்கள் இவர்கள் ஒதுங்கிநின்னால் அவர்களுக்கு நல்லது இல்லாவிட்டால் இவர்கள் குடும்பத்தையே சனி பிடித்து ஆட்டிவைக்கும்

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  " ஏதோ சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு, எதிரி அரசினால் செக்கிழுக்க வைக்கப்பட்ட சுதந்திரபோராட்ட வீராங்கனை போன்று தன்னையும் ஆறு மாத காலம் களி சாப்பிட கனியையும் குறிப்பிட்டு இருப்பது இவர் இன்னமும் திருந்தவில்லை என்றே தெரிகிறது ". - பொதுவாக, ஒருவர் தன் தவறை தப்பை உணர்ந்தவர், திருந்தி நல்லவராக வாழ்வதும் உண்டு, இந்த உலகிலே. ஆனால், அவைகளை உணர விரும்பாதவர், சப்பைகட்டு (ஜால்ஜாப்பு) கூறிவிட்டு செல்வார் எனலாம் தானே?.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஆனா நான் மட்டும் கணவன் சொல் கேட்க மாட்டேன்

 • kalyan - CHENNAI,இந்தியா

  கனியும் சசியும் சாராயக் கூட்டாளிகள் என்று ஊர் பேசுகிறதே அதனால்தான் சசியை அப்போலோவில் ராசாத்தி அம்மாள் சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறதே. பூனை பையை விட்டு வெளியே வருகிறது

 • மோகன் -

  ஊரை அடிச்சு தன் வாய்லயும் குடும்பத்து வாய்லயும் போட்டு மாட்டிக்கிட்டா ஜெயில்ல போடாம வடபழனி கோயில்லயா போடுவாங்க.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  வினை விதைத்தால் வினையை அறுக்கத்தான் வேண்டும், ஆனால் உனக்கு இது பத்தாது, இப்போதான் உனக்கு கணவனின் அருமை தெரியுதா, ஒரு பெண் பண மமதையில் என்ன வேண்டுமானாலும் ஆடுவாள். கணவன் கூட கேவலமாகத் தான் தெரிவார். ஆனால் சொத்தும், பணமும் விட்டு போகும் போது புருஷனே கண்கண்ட தெய்வமாய் தெரிவான், உனது சொத்துக்களை யாரை நம்பி கொடுத்தாயோ? அவர்களே உனக்கு கொக்கு காட்டும், ஏமாற்றும் நேரம் வந்துவிட்டது, கடவுள் நின்று அறுப்பான் என்பது இதுவே. இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தான், பணம், பதவி நண்பன் எல்லாம் கைவிட்டு போனால் பொண்டாட்டியே கண்கண்ட தெய்வம். பல கதா பாத்திரங்களில் நாம் பார்த்திருக்கிறோம். இருந்தாலும் ஜெயில் வாழ்வின் பின்னும் நீ திருந்த மாட்டாய். அனுபவத்தில் பலகைதிகளை பார்த்திருக்கிறேன் எல்லோரும் சொல்வது ஜெயில்வாழ்வின் பின் விடுதலையாகி போகும் போது,, Good bye என்று நண்பர்களுக்கு உறவினர்களுக்கு சொல்வதுபோல் 'See you". or see you again , என்று சொல்லமாட்டார்கள், அதன் அர்த்தம் திருந்திவிட்டான் என்பது.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  ஏதோ சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு, எதிரி அரசினால் செக்கிழுக்க வைக்கப்பட்ட சுதந்திரபோராட்ட வீராங்கனை போன்று தன்னையும் ஆறு மாத காலம் களி சாப்பிட கனியையும் குறிப்பிட்டு இருப்பது இவர் இன்னமும் திருந்தவில்லை என்றே தெரிகிறது. இந்த நாலு வருடத்தை 40 வருடமாக மாற்ற சட்டத்தில் ஏதாவது வழியிருக்கிறதா என்று பார்க்கவேண்டுமே...மிக அவசரம்..

 • Sundar - Puducherry,இந்தியா

  'சிறை வாழ்க்கை கொடுமையானது தான். அதுவும் ஒரு பெண்ணுக்கு, சிறை வாழ்க்கை மிகப் பெரிய தண்டனை தான்." - நீ அங்க ஷாப்பிங் தானே போனே? அப்புறம் எப்புடி அது சிறைவாசம் ? சொல்லுங்க தியாக தொல்லைவி?

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  இவரும் இளவரசியும் சிறையில் தனியா வாடுவதால் , இவர் குடும்பத்தாரை மொத்தமாக சிறையில் வைத்து களி கீரை சாப்பாடு போட்டு இவருடைய குடும்பத்தை ஒற்றுமையாக சிறையில் பல ஆண்டுகள் வைத்து கொள்ள வேண்டுகிறோம் .தினகரன் திவாகரன் வெங்கடேஷ் கிருஷ்ணா பிரியா , நடராஜன் , மற்றும் பலர் சிறையில் வந்து இருக்க ஆர்வமாக உள்ளனர் .

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  சிங்க குட்டி காரில் பெங்களூருக்கு போய்க்கொண்டிருக்கிறது

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  நடராஜன் வழி நடத்தும் நிலையில் இல்லையே ? தினகரன் கதை முடிந்து விட்டது. அவருக்கு திஹாரா ? இல்லை புழலா? என்று தெரியவில்லை . வேண்டுமானால் சிபாரிசு பண்ணி ஒரே சிறையில் துணைக்கு அனுப்புகிறோம்.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  வசமா மாட்டுனா யாரா இருந்தாலும் களி திங்க வேண்டியதுதான். இதுல தைரியமிக்க பயந்தாங்குளி எல்லாம் கிடையாது.

 • Balaji - Bangalore,இந்தியா

  சிறையில் வாசம் 4 ஆண்டு. பதவி ஆசை . இல்லாத ஒரு பதவிக்கு சண்டை. கட்சியை விட்டு விலக மனம் இல்லை. தமிழ் நாட்டை சூறை ஆட ஆசை. என்னடா இது.

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  She says that the party belongs to the family. Others are inconsequential.

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  வில்லாதி வில்லனே.......வில்லியின் அக்கா மகனே .வெற்றி உனக்கே... தனி கட்சி..... தனிகொடி....தனி சின்னம்... தளர வேண்டாம். தயக்கம் வேண்டாம்... வெற்றிவேலன் உன்பக்கம் தங்கதமிழகம் உன்பக்கம்... நஞ்சை கக்கும் நாஞ்சில் நம் பக்கம் .. சுள்ளானுடன் சேருவோம் ..... ஆட்சிய பிடிப்போம் .ஆட்டைய போடுவோம்

 • Hariharan Iyer - Nagpur,இந்தியா

  நாசமாப் போச்சு. இவர் குடும்பம் மொத்தத்தையும் திஹாருக்கு அனுப்பவேண்டும்.

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  ஜெயா துணைக்கு இருந்து இருந்தால் நன்றாக இருக்கும் . மற்ற அரசியல் வாதிகளுக்கும் ஒரு பாடமாக இருந்து இருக்கும் .

 • ngopalsami - Auckland ,நியூ சிலாந்து

  அம்மா சதிகலாவே, கட்சியும், தமிழக அரசியலும் உங்க பாட்டன் சம்பாதித்து வைத்த சொத்தா என்ன? நீ செய்த சூனியக்காரி வேலைக்கு அநியாயமா அந்த ஜெயா உனக்கு அடிமையாகி ஒரு கதி அடைந்து விட்டார். நீ ஜெயிலில் இருந்து திரும்பி வரவே வேண்டாம். தமிழக மக்கள் உங்க கூட்டத்தையே ஓட, ஓட விரட்ட காத்திருக்கிறார்கள்.

 • sankar - trichy,இந்தியா

  திகார் சிறையில் ஒரு ஹைடெக் சிறை அதுவும் அரசியல் கைதிகளுக்கு உச்ச பட்ச வசதி . இதில் கனிமொழி தைரியமாக எதிர் கொண்டார் என்று கேப்பில் கிடா வெட்ட வேண்டாமே

 • kuruvi - chennai,இந்தியா

  Fool is one who does foolish things and feels proud of it, just to repent at the .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement