Advertisement

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம்,புதுச்சேரியில் மழை வாய்ப்பு

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று (அக்.,12) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்தது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகவில்லை. நான்கைந்து நாட்களில் படிப்படியாக விலகும். வடகிழக்கு பருவமழைக்கு இன்னும் அறிகுறியே தோன்றவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

  • baski - Chennai,இந்தியா

    நிலத்தடி நீர் மட்டம் உயரனும்...

  • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

    எத்தனை தலைமுறைக்கு இந்த மாதிரி வானிலை அறிக்கை கொடுக்க போறீங்க. மாவட்ட வாரியா உங்களால வானிலை அறிக்கை கொடுக்க முடியாதா. எப்ப பார்த்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரின்னுட்டு. புதுமை புகுத்தாத எதுவும் மக்கள் ஆதரவை இழக்கும். இந்த துறையால் மக்களுக்கு என்ன பயன்.

  • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

    ஆமாமாம், வருசா வருசம், மழை வரும் போகும். எப்பவும் போல, எங்கள் குடிநீர் பிரச்சனைகள்?. காலி பிளாஸ்டிக் குடங்களுடன், தண்ணீர் லாரிகள் வரவுக்காக, இரவு பகல் பாராமல் காத்திருப்பதுதான். (ஓர் சென்னை வாசியின் மைண்ட் வாய்ஸ்).

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    உள்ளத்திலே பெரிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியை அரசுக்குறிப்பில்  விவசாய ஏரியென குறிப்பிடப்பட்டுள்ளதால் அதனை ஆழப்படுத்தவோ தூர்வாரவோ சட்டப்படி இயலவில்லை . உடனடியாக குடிநீர் ஏரியாக மறுவகைப்படுத்தி ஆழப்படுத்தவேண்டும். அடையாறு ஆற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை ராணுவ உதவியுடனாவது அகற்றாவிட்டால் மீண்டும் வெள்ள பாதிப்புகளுக்கு வாய்ப்பதிகம்.

  • Appu - Madurai,இந்தியா

    ம(லை)ழை...அண்ணாமலே ..மட்டன் வறுவல் அண்ணாமலை...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement