Advertisement

இந்தாண்டு ஜி.டி.பி., 7 சதவீதமாக குறையும்: உலக வங்கி மதிப்பீடு

வாஷிங்டன் : 'பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆகியவற்றின் தாக்கத்தால், இந்தாண்டு, ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7 சதவீதமாக குறையும்' என, உலக வங்கி மதிப்பிட்டு உள்ளது.

குறையும்:இது குறித்து, உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 2015ல், இந்தியாவின், ஜி.டி.பி., 8.6 சதவீதமாக இருந்தது; இது, இந்தாண்டு, 7 சதவீதமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, மத்திய அரசு மேற்கொண்ட, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆகியவற்றால் ஏற்பட்ட தாக்கமே காரணம். அதே சமயம், மத்திய அரசு மேற்கொள்ளும் எண்ணற்ற சீர்திருத்தங்களும்,அரசு திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடும், பெருகி வரும் தனியார் முதலீடுகளும், 2018ல், ஜி.டி.பி., வளர்ச்சியை, 7.3 சதவீதமாக உயர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மந்தநிலை:நிலையான வளர்ச்சி காரணமாக, நாட்டில் வறுமை குறைந்து, அமைப்பு சாரா துறையினர் நலனில், கூடுதல் கவனம் செலுத்தும் சூழல் உருவாகும். இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால், தெற்காசிய பொருளாதாரத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தை அடுத்து, இரண்டாவது இடத்திற்கு, தெற்காசியா தள்ளப்பட்டு உள்ளது.
இந்தியாவின் உண்மையான பொருளாதார வளர்ச்சி, 2015ல், 8 சதவீதமாக இருந்தது. இது, 2016ல், 7.1 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த வளர்ச்சி, நடப்பாண்டு,ஏப்., - ஜூன் வரையிலான காலாண்டில், 5.7 சதவீதமாக சரிவடைந்து உள்ளது.

சூடுபிடிக்கும்:நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுணக்கம் ஏற்பட்டுள்ள போதிலும், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்திய பின், பொதுத் துறை மற்றும் தனியார் துறையில், நுகர்வு அதிகரித்துள்ளது. இதற்கு, சாதகமான பருவ மழையும், வேளாண் உற்பத்தியும், அதை தொடர்ந்து, கிராமப்புறங்களில் தேவைப்பாடு அதிகரித்துள்ளதும் காரணம் எனலாம்.

ஜி.எஸ்.டி., அறிமுகத்திற்கு பின், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறை வளர்ச்சியில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.,யின் தாக்கம், 2018 துவக்கம் வரை இருக்கும். அதன்பின், வளர்ச்சி சூடுபிடிக்கும். முழு ஆண்டிற்கான, ஜி.டி.பி., 7 சதவீதத்தை தாண்டி, 2020ல், 7.4 சதவீதமாக அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (21)

 • அப்பாவி -

  நஷ்டத்தை சமாளிக்க, அரசு வருவாயைப் பெருக்க இனி ஒரு தரம் மூச்சு விட்டால், நாட்டின் ஆக்சிஜனை உபயோகப் படுத்துவோர் ஒரு பைசா வரியாகக் கட்ட வேண்டும். இதற்கு GST வரி கிடையாதுன்னு ஒரு அறிவிப்பு வரப் போகுது.

 • Krishnaswamy Karuppuswamy Gounder - Chennai,இந்தியா

  Desanesan kathai solratha niruthitta yaarum pathil elutha thevaiyillai. Corrupt Politicians solra maathiri mudinthaal prove pannungal nu solrathu comedy. Neenga oyaama kathai vidaratha prove pannrathu thaan mathavangalukku velaiya. Elections mudiyum ivanga pulambal nikkaathu

 • Mohideen Aboobucker - moheenabadsha,இந்தியா

  first ஸ்டாப் ஆக்ட்டிங் லைக் எ megalomaniac then take everybody in confidence, if you think you are the best economist and only discuss with a lawyer and your party president then this country will lead to a disaster. First learn to respect others inputs. your ears to other subject matter experts....Don't act like a autocratic megalomaniac. Your own party seniors is suggesting something listen to them. PM job is just no like giving long gyan in a political meeting...so far what ever you promised nothing fulfilled, at least control your அகம்பாவம்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  2016 -17 இல் அந்நிய நேரடி முதலீடு 60 பில்லியன் டாலர். சோனியா ஆட்சியில் கடைசியாக 2013 இல் பாரதத்தில் அன்னிய நேரடி முதலீடு வெறும் 28 பில்லியன் டாலர். அதாவது மூன்றாண்டுகளில் இரு மடங்கு அதிகரிப்பு. இந்தாண்டு இத்தனையும் விஞ்சும் வகையில் முன்னேறுகிறது. நல்லவேளையாக மவுனிபாபா பசி திருட்டுக்கூட்டத்தை நாம் ஒழித்ததால் அந்நியருக்கும் நம் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. இங்குள்ள இத்தாலி சீன அரபு கைக்கூலிகள்தான் நம்பிக்கையற்றுப் போயுள்ளனர். மீண்டும் பதவிக்கு வந்து சுரண்ட வாய்ப்பின்றிப் போய்விட்டதால்.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  இது மாதிரி கணிப்புகள் எல்லாமே தவறு என்றும் பொருளாதாரம் ஓகோன்னு இருக்கு என்றும் மோடி அமைத்த பொருளாதார குழுவில் இருப்பவர்கள் நேற்றே சொல்லிவிட்டனர் .. அதை தான் நம்பி ஆகணும் ..

 • VPSELVAM - trichy,இந்தியா

  வர வர இந்த ஜால்ராக்களின் இம்சை தாங்கமுடிலையல சாமி...

 • sundaram - Kuwait,குவைத்

  உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை தயாரித்தவர்கள் மூர்க்கன்கள் என்று அறிக்கை தயாரித்துக்கொண்டிருக்கும் பக்தர்கள்

 • Mano - Madurai,இந்தியா

  நாட்டில் தேச நேசன் பாேன்ற தேச நாசன்கள் இருக்கும் வரை மாேடி பாேன்றவர்களுக்கு காெண்டாட்டம்தான்.

 • AURPUTHAMANI - Accra,கானா

  இந்த ஆண்டு 7 சதவீதத்தை விட நிச்சியம் குறையும்,6 சொச்சத்தில் முடிந்தால் அதுவே சாதனைதான். இரண்டு மாபெரும் நிகழ்வுகளாகிய பண மதிப்பு,மற்றும் GST , ஒரு பில்லியன் வேறுபட்ட மக்கள் உள்ள பொருளாதாரத்தில் என்ன விதமான மாறுதல்களை ஏற்படுத்தும் என்று பத்து அமிர்தியாசென் வந்தாலும் சொல்லமுடியாது. அனுமானிக்கலாம் அவ்வளவுதான்.உதாரணம் ஒருமுறை சிங்கப்பூரில் ஒரு பத்திரிகை மிக சரியாக முதல் நாள் சொன்னதற்கு எழுதியவர் அரசு ரகசிய திருட்டில் கைது செய்யப்பட்டார் நிற்க. இங்கு இரண்டு மாறுதல்களும் தேவையான கசப்பான அதிர்ச்சி வைத்தியம் தான், இந்த ஆண்டு GDP குறைவது பற்றி கவலை இல்லை ஏனனில் இது எதிர்பார்த்தது, ஆனால் நாம் இப்போது கிராஸ் ரோட்டில் நிற்கிறோம். வரும் ஆண்டை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது, ஏனெனில் இந்த இரண்டு மாற்றங்களின் நடைமுறை சிக்கல்கள் சரியாக கையாளப்படவில்லை, நிச்சயமற்ற தன்மை தான் நீடிக்கின்றது, இந்தியாவில் சட்டத்த விட பிராக்ட்க்காலிட்டி முக்கியம், உதாரணம் கார்விலை குறைந்தது பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது. அதில் தினம் தோறும் மாற்றம். நிறைய நாடுகளில் உள்ளதுதான் ஆனால் நமக்கு இது ரொம்ப ஓவர். இட்லி தோசை போன்ற சாதாரண மனிதனின் தேவை பொருட்களின் விலை உயர்வு ,இப்படி நிறைய, நான் எதிர்பார்த்தமாதிரி அல்லாமல் GSTக்கு அப்புறம் எந்த துறை மக்களும் சந்தோசமாக இல்லை .அதனால் இந்த கிராஸ் ரோடிலிருந்து நல்ல வழியை அரசாங்கம் தேர்தெடுக்காவிட்டால் விளைவு அவர்களுக்கும் மக்களுக்கும் மிக மோசமானதாக இருக்கும்.

 • BJP NESAN - BJP Puram

  அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது எங்களைப் பொறுத்தவரையில் இந்தியா ஒளிர்கிறது

 • kurinjikilan - Madurai,இந்தியா

  பொருளாதார வளர்ச்சியை G D P மட்டுமே நிர்ணயிப்பதில்லை..முக்கியமானது பணவீக்கம்..காங்கிரஸ் காலத்தில் பொதுவாக பணவீக்கம் G D P யைவிட அதிகமாக இருக்கும்..ஆனால் இப்போது G D P பண வீக்கத்தை விட இரண்டு மடங்குகளுக்குமேல் உள்ளது..இதுவே வளர்ச்சி..

 • Saravana Kumar - TIRUPUR,இந்தியா

  திருப்பூரின் பின்னலாடை நிறுவனங்களுக்கு ட்ராப்பேக் சதவீதம் குறைப்பு. எப்படிப் பெருகும் உள்நாட்டு உற்பத்தி. பண மதிப்பிழப்பு மூலம் கறுப்புப் பணம் கிடைத்திருந்தால் தானே அதைக் கொண்டு ட்ராப்பேக் சதவீதம் அதிகமாக்கப் பட்டு உற்பத்தி அதிகரித்திருக்கும்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  உலக வங்கியின் எதிர்பார்ப்பு நமது ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பான 6.7 % விட அதிகமே மூன்றாண்டுகளாக பருவமழை சரியில்லாமலிருந்தும் கொஞ்சமும் உணவுப்பஞ்சமில்லை. ஆந்திரா மகாராஷ்டிரத்தில் விவசாய தற்கொலைகள் காங் ஆட்சிக்காலத்தை விட மிகவும் குறைந்துவிட்டன. இதே உலகவங்கியின் முன்னாள் கையாள் சோனியாவின் கடைசி ஆண்டு 2013 இல் 4 .7 % ஆக இருந்த ஜி டி பி கடந்த மூன்றாண்டுகளில் சராசரியாக ஏழுக்குமேல் உள்ளது. பணவீக்கம் 11 லிருந்து 3 க்கு குறைந்துவிட்டது. நிதிப்பற்றாக்குறை 40 % குறைந்து வெளிநாட்டுக்கடன் வாங்குவதில்லை. கட்சிபேதமின்றி நாடுமுழுவதும் ரெய்டுகளும் ஊழல் வழக்குக்களும். அதிகமாக நடக்கின்றன 5,800 போலி நிறுவனங்களிடம் மத்திய அரசு... விசாரணை மெகா பண பரிவர்த்தனை மோசடி அம்பலம்...கடுமையான ரியல் எஸ்டேட் சட்டமும் பினாமி ஒழிப்பும் கறுப்புப்பணம் வைத்திருப்போருக்கு வேட்டு வைத்துவிட்டது ரியல் எஸ்டேட் விலைசரிவால் நன்கு புரிகிறது பங்கு சந்தையில் நம்பிக்கை அதிகரித்துள்ளதால் சிறுமுதலீட்டாளர்கள் சென்ற மாதம்வரை இருபது லட்சம்கோடிக்கு மேல் முதலீடு இதுவே எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு நம்பிக்கை ஒளி

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இந்தியாவின் உண்மையான பொருளாதார வளர்ச்சி, 2015ல், 8 சதவீதமாக இருந்தது. இது, 2016ல், 7.1 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த வளர்ச்சி, நடப்பாண்டு, ஏப்., - ஜூன் வரையிலான காலாண்டில், 5.7 சதவீதமாக சரிவடைந்து உள்ளது. உண்மையைதானே சொல்லுகிறீர்கள்...

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  ஏறும், ஆனா ஏறாது.. சாமி ஒத்துக்கிட்டாலும், பூசாரி ஒத்துக்க மாட்டான் போல..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement