Advertisement

"காட்டன் எக்ஸ்பிரஸ்' ரயிலுக்கு... வரவேற்பு! பின்னலாடை துறையினர் மகிழ்ச்சி

திருப்பூர் : "காட்டன் எக்ஸ்பிரஸ்' சரக்கு ரயில், இன்று தனது முதல் பயணத்தை துவக்குகிறது. இனி, மேற்குவங்கத்துக்கு, சரக்கு அனுப்புவது எளிதாகும் என, தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூரில் இயங்கும் பின் னலாடை நிறுவனங்கள், நாடுமுழுவதும் உள்ள வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்து, ஆடை தயாரித்து அனுப்புகின்றன. லாரி, ரயில் என மார்க்கங்களில், வெளிமாநிலங்களுக்கு ஆடைகள் அனுப்பப்படுகின்றன. ரயில் சரக்கு போக்குவரத்து சேவையையை தொழில் துறையினர் விரும்புகின்றனர்.போதுமான அளவு ரயில்கள் இல்லாததால், லாரிகளை நம்பியுள்ளன, உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள். முதல் முறையாக, கொல்கத்தாவில் இருந்துதான், பின்னலாடை தொழில், திருப்பூ ருக்கு வந்தது. தற்போது, கொல்கத்தா மட்டுமின்றி நாட்டின் பிற ஆடை தயாரிப்பு நகரங்களையெல்லாம் பின்னுக்குத்தள்ளிவிட்டு, முன்னோடி யாக திகழ்கிறது, திருப்பூர்.ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்கம், கேரளா என, அனைத்து மாநிலங்களுக்கும், திருப்பூரில் தயா ராகும் ஆடைகள் அனுப்பப்படுகின்றன. திருப்பூர் பின்னலாடை நிறுவனங்க ளின் மிக முக்கிய வர்த்தக மையமாக, கொல்கத்தா உள்ளது. ஆடை ரகங்கள் மட்டுமின்றி, நூல், துணி ரகங்களும் அதிகளவு, கொல்கத்தாவுக்கு அனுப்பப்படுகிறது.லாரிகளில் சரக்கு அனுப்பும் போது, நான்கு முதல் ஐந்து நாட்கள் காத்திருக்கவேண்டியுள்ளது; மேலும், வழிப்பறி சம்பவங்களும் அரங்கேறு

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement