Advertisement

சென்னையில் மேம்பாலங்கள் கட்டும் பணிக்கு... திட்ட அறிக்கை! பணத்தை வீணடிக்கும் நெடுஞ்சாலை துறை

சென்னையில், மேம்பாலங்கள் கட்டுமான பணிக்கான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு, பல லட்சம் ரூபாயை, நெடுஞ்சாலை துறையினர் வீணடிப்பதாக புகார் எழுந்துள்ளது.

மாநில நெடுஞ்சாலை துறையில், பெருநகரம் என்ற பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவில், சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள நெடுஞ்சாலைகளை புனரமைத்தல், விரிவாக்கம் செய்தல், மேம்பாலம், தரைப்பாலம், நடைமேம்பாலம், சுரங்கப்பாதை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரூ.14 ஆயிரம் கோடி:
இதற்காக, சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, 2025 வரை, 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட, தமிழக அரசு திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, அண்ணாநகர் மேற்கு, அண்ணா நுழைவளைவு, ரெட்டேரி, மாட்டுமந்தை, வியாசர்பாடி ஆகிய இடங்களில், எற்கனவே மேம்பாலங்கள் கட்டப்பட்டு, போக்குவரத்துக்கு திறக்கப்பட்டு உள்ளன.
மேலும், மாதவரம் நெடுஞ்சாலை, நுாறடிச்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள், விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. பல இடங்களில், புதிதாக மேம்பாலம் கட்டுவதற்கான முன்னேற்பாடுகள் துவங்கி, நடந்து வருகின்றன. இந்த மேம்பால கட்டுமான பணிக்கு, துறையில் உள்ள பொறியாளர்களால், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது வழக்கம். இதற்காக, குறைந்த அளவில் மட்டுமே நிதி செலவழிக்கப்படும். சமீபகாலமாக, இது போன்ற திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள், தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

சலசலப்பு:
இதற்காக, ஒவ்வொரு பணிகளுக்கும், பல லட்சம் ரூபாய் வரை செலவழிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகளுக்காக, ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரம்:
 மாதவரம், செங்குன்றம் சாலை - நுாறடிச்சாலை சந்திப்பு மேம்பாலம் - 35.15 லட்சம் ரூபாய்
 சென்னை - திருத்தணி - ரேணிகுண்டா சாலை மேம்பாலம் - 29.80 லட்சம் ரூபாய்
 தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை பயணிகள் கடக்க, எஸ்கலேட்டர் நடைபாதை - 55 லட்சம் ரூபாய்
 திருவான்மியூர் முதல் அக்கரை வரை, ஆறு வழிச்சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் - 91 லட்சம் ரூபாய்
 பல்லாவரம் - குன்றத்துார் சாலையில் மேம்பாலம் - 25.10 லட்சம் ரூபாய்
 வானகரம் - அம்பத்துார் சாலை சந்திப்பில், நான்கு வழி மேம்பாலம் - 31.78 லட்சம் ரூபாய்
 மடிப்பாக்கம் மறைமலை அடிகள் பாலம் - இரும்புலியூர் சாலையில் மேம்பாலம் - 31.78 லட்சம் ரூபாய்
 சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில், கொரட்டூரில் மேம்பாலம் - 31.78 லட்சம் ரூபாய்
 மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ராமாபுரம் அருகே பல்லடுக்கு மேம்பாலம் - 62 லட்சம் ரூபாய்
 வடபழனியில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை, அசோக்பில்லர் வரை நீட்டிக்கும் பணி - 58 லட்சம் ரூபாய்
 மாடம்பாக்கம் சாலையில் மேம்பாலம் - 39.65 லட்சம் ரூபாய்இவ்வாறு, பல மேம்பாலப் பணிகளுக்கான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கே, கோடிக்கணக்கான ரூபாயை, நெடுஞ்சாலைத்துறை செலவிட முடிவெடுத்து உள்ளது. தற்போது, திட்ட அறிக்கை தயாரிக்கும் நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகளும், அவசரகதியில் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • parthiban - coimbatore,இந்தியா

    யார் ஆட்சிக்கு வந்தாலும் ....எவ்வளவு சம்பளம் உயர்ந்தாலும் .....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement