Advertisement

கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவு: மீனவர்கள் போராட்டம்

திருவொற்றியூர் : அனல்மின் நிலையங்களின் சாம்பலை, கொசஸ்தலை ஆற்றில் கொட்டுவதை தடுக்கக்கோரி, மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடசென்னை எண்ணுார், வல்லுார் அனல் மின் நிலையங்கள் எரிக்கும் நிலக்கரி சாம்பல், கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படுகிறது. மேலும், பல்வேறு தொழிற்சாலை கழிவுகளும் ஆற்றில் விடப்படுவதாலும் மீன், இறால், நண்டு உள்ளிட்டவை உயிரினங்கள் அழிந்தன.
இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்த ஆற்று நீரை பயன்படுத்துவோருக்கு, பல்வேறு நோய் பாதிப்பு ஏற்படுகிறது.தற்போது, ஆற்றில் கொட்டப்படும் சாம்பல் மேடுகளால், ஆற்று நீர் வெள்ளம், கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 'கொசஸ்தலை ஆறு, கடலில் கலக்கும் முகத்துவாரம் பகுதியை ஆழப்படுத்த வேண்டும்; தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துள்ள நீர் நிலைகளை மீட்க வேண்டும்' எனக்கோரி, மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எண்ணுார் மாநகராட்சி அலுவலகம் முன் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில், நுாற்றுக்கணக்கான மீனவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement