Advertisement

ஆர்.டி.ஓ., சார் - பதிவாளர் ஆபீஸ்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார், 'ரெய்டு'

தமிழகத்தின் பல நகரங்களில் உள்ள, வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் சார் - பதிவாளர் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 15 லட்சம் ரூபாய் சிக்கி உள்ளது.தமிழகத்தில் உள்ள, வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் சார் பதிவாளர்கள் அலுவலகங்களில், புரோக்கர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

அதிரடி சோதனை
இவர்கள் வாயிலாக, அதிகாரிகள் லஞ்சமாக, பல கோடி ரூபாய் வசூலித்து வருகின்றனர். இது குறித்து, நமது நாளிதழிலில், பலமுறை செய்தி வெளியிட்டு உள்ளோம்.இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், இரு தினங்களாக, சார் -பதிவாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம், தஞ்சாவூர், சிவகங்கை பூங்கா அருகே உள்ள, சார் - பதிவாளர் அலுவலகத்தில், சோதனை நடத்தி, 30 ஆயிரத்து, 625 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

பதிவாளர், ராணி, கண்காணிப்பாளர், அருள்முருகன், அலுவலக உதவியாளர், அமலதாஸ் ஆகியோர் மீது, வழக்கு பதிவு
செய்துள்ளனர்.அதேபோல், நேற்று, சென்னை - சைதாப்பேட்டை, நெல்லை, தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, கன்னியாகுமரி, துாத்துக்குடி, காரைக்குடி, திண்டுக்கல், திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதி களில் உள்ள, வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் சார் - பதிவாளர் அலுவலங்களில், சோதனை நடத்தினர்.

சிக்கிய அதிகாரிகள்
அப்போது,30க்கும் மேற்பட்ட புரோக்கர்கள்மற்றும் அதிகாரிகள் சிக்கினர்.அவர்கள், லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும், லஞ்சப் பணத்தை, கழிப்பறை, குப்பை தொட்டி மற்றும் ஜன்னலுக்கு வெளியே துாக்கி வீசி உள்ளனர். தமிழகம் முழுவதும், நேற்று நடந்த சோதனையில், லஞ்ச பணம், 15 லட்சம் ரூபாய் சிக்கியுள்ளது. நள்ளிரவு வரை சோதனை தொடர்ந்தது.

பதிவு துறையிலும், 'பீதி'
தமிழகத்தில், ஆறு ஆண்டுகளுக்கு பின், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், சார் - பதிவாளர் அலுவலகங்களில், சோதனை நடத்த துவங்கி உள்ளதால், பதிவுத் துறை அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில், 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு, தரகர்களை கட்டுப்படுத்த, கண்காணிப்பு கேமரா வசதி உள்ளது. அதையும் மீறி, இடைத்தரகர்கள் ராஜ்ஜியம் தொடர்கிறது.

இவர்களின் பிடியில் அதிகாரிகள் இருந்ததால், லஞ்சம் இல்லாமல், எந்த வேலையும் நடக்காது என்ற நிலை உள்ளது.அதற்குகாரணம், லஞ்ச ஒழிப்புத் துறையினர், இந்த அலுவலகங்களை சோதனையிட அனுமதி கிடையாது. ஆறு ஆண்டுகளுக்கு பின், தற்போது தான், அனுமதி கிடைத்தது. இதையடுத்து, அதிக புகார்கள் வரும், 54 சார்- பதிவாளர் அலுவலகங்கள் குறித்த பட்டியலை,,லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தயாரித்தனர். அதில், திருவாரூர், தஞ்சாவூர் சார் - பதிவாளர் அலுவலகங்களில், நேற்று முன்தினம் சோதனை நடந்தது. அப்போது, அங்கீகாரமில்லா மனைகள் தொடர்பாக, 83 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதும் வெளி நபர்கள், 18 பேர், பதிவு பணியில் ஈடுபட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, சென்னை, சைதாப்பேட்டை இணை - 1 அலுவலகத்தில் நடந்த சோதனை யில், வெளியாட்கள், 12 பேர், பத்திரப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து, பதிவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: அங்கீகாரமில்லா மனைகளை பதிவு செய்ய, நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை யில், 83 பத்திரங்கள் பதிவானது தெரிய வந்துள்ளது.

இதே போன்று, 'சார் - பதிவாளர் அலுவலகங் களில், வெளிநபர்கள் யாரும் பணியில் இருக்க கூடாது; அப்படி இருந்தால், சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்கள் மீது,கடும் நடவடிக்கை எடுக்கப் படும்' என, பதிவுத்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும், 30 பேர் வெளி நபர்கள் பிடிபட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து (11)

 • Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா

  இத்தகைய அதிரடி சோதனைகளை லஞ்ச ஒழிப்பு துறை தொடர்ந்து நடத்துவதின் மூலம் அதிகாரிகளின் பய உணர்வை அதிகரித்து பணி மேம்பாட்டில் கவனத்தை திசை திருப்பி லஞ்சத்தை அறவே ஒழிக்கலாம் .

 • SathyanarayananSathyasekaren -

  people has to change, otherwise nothing will change, why giving money, most of the things are on line, we have commit not to bribe. if we have to visit 10 times we have to visit.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  தொகை மிகவும் குறைவாக உள்ளது. 'கடத்தப்பட்ட ' பின் இருந்த மிச்சம் மீதி போலிருக்கிறது. இப்படி பத்து இருபது பேர் மட்டும் தான் இருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை. கல்லும் கை நீட்டும் துறைகளாயிற்றே இவை

 • M Ragh - Kanchi,இந்தியா

  Very good PM policy, so oru officer um arrest agala

 • ntgk - Chennai,இந்தியா

  சேர வேண்டியது போய் சேரலையோ?

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  இது போன்ற வெறும் கண்துடைப்புக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் இனி பயன் தராது. எல்லாவனுக்கும் இருக்கு ஆப்பு.

 • parthiban T - Periyakulam,இந்தியா

  சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் உள்ள அனைவரையும் உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும். இவர்களை கட்டுப்படுத்தும் அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால் அரசாங்கம் நிச்சயம் இதை கண்டு கொள்ளாது. ஜல்லிக்கட்டு போல ஒரு புரட்சி போராட்டம் வெடிக்கும் வரை இது தொடரத்தான் செய்யும். பொது மக்களுக்கு ஆப்பு நிச்சயம்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  நியாயமான ஆட்சி நடக்கிறதாம். காட்டிக்கொள்ள பலிக்கடாக்களை வைத்து நாடகமாடுகிறார்கள். துறை அமைச்சர்களை பிடிக்காத வரை இவையெல்லாம் நாடகமே. தக்காளி மாதமிருமுறை கட்டுக்கட்டாக, கோடிக்கணக்கில் பணம் கப்பமாக ஒவ்வொரு துறை அமைச்சருக்கு தரப்படுகிறது. அதை பிடிக்க யாருக்கு தைரியம் இருக்கு?

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  நேர்மையான ஆட்சி நடப்பதாக ஒரு நாடகம். இதுவரை பிடிபட்டவர்கள் என்ன ஆனார்கள் என்று கேட்டறிந்தால் அதிர்ச்சியில் பாடி ஆகிவிடுவீர்கள். ஒருத்தன் விடாமல் மீண்டும் பணியில் தான் இருக்கிறார்கள். லஞ்சம் வாங்கினவன் கமிஷனை தராமல் வாங்கினால் தான் இந்த கெடுபிடி. மாதாமாதம் கப்பத்தை கணக்கு காட்டி கட்டிவிட்டால் நீ மந்திரி பி.ஏ ஆகி விடலாம். இது தான் இங்கிருக்கும் சட்டம். அலுவலகத்தில் உள்ளே இருப்பதால் சொல்கிறேன்.

 • venkatesh - coimbatore,இந்தியா

  ஆமாம் ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் என்று ரைட் பண்ணுங்க ஒவ்வொருத்தனும் தினம் வீட்டுக்கு கொண்டுபோவது லட்சங்களில். ஊழலை ஒழிக்க ஒரே வழி லஞ்சம் வாங்குபவனை தூக்கில் போடுங்கள் அப்போது தான் இந்த களவாணிகள் அடங்குவார்கள்.

 • rama - johor,மலேஷியா

  இவர்கள் ரெய்டு பாஜகாவுககு வேண்டாதவர் மட்டுமே, முதலில் இவர்கள் வீட்டை ரெட்டு செய்யவேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement