Advertisement

'பெட்ரோல், டீசலுக்கு, 'வாட்' வரியை அரசு குறைக்க வேண்டும்'

சென்னை: 'பெட்ரோல், டீசலுக்கான, 'வாட்' வரியை, தமிழக அரசு, உடனே குறைக்க வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், மத்திய அரசு, 'தினமும் விலை நிர்ணயம்' என்ற கொள்கைப்படி, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் மீது, தாங்க முடியாத, சுமையை துாக்கி வைத்துள்ளது. மத்திய அரசு விலையை உயர்த்தும் போதெல்லாம், மாநிலத்தில் உள்ள, அ.தி.மு.க., அரசும், அதற்கு துணையாக, வாய்மூடி மவுனியாக உள்ளது.

கடந்த காலத்தில், தி.மு.க., ஆட்சியில் செய்தது போல், தற்போது குஜராத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான, 'வாட்' வரி, 4 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. அதே போல், மஹா.,வில், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 2 ரூபாய்; டீசலுக்கு, ஒரு ரூபாய், 'வாட்' வரி குறைக்கப்பட்டு உள்ளது.எனவே, இரு மாநில அரசுகளும் எடுத்துள்ள நடவடிக் கைகளை பின்பற்றி, தமிழகத்தில், பெட்ரோல் மற்றும்
டீசல் விலையை குறைக்க, அவற்றின் மீதான, 'வாட்' வரியை, உடனே குறைக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

முரண்பட்ட ஆட்சி
''தமிழகத்தில், மது விலக்கு அமல்படுத்துவோம் எனக் கூறியவர்கள், மது விலை உயர்வு
அறிவிப்பை வெளியிட்டது, முரண்பட்ட ஆட்சிக்கு எடுத்துக்காட்டு,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது பேட்டி:
டாஸ்மாக், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாக, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, அமைச்சர்கள் மாற்றியதாக புகார் எழுந்துள்ளது.முறையான விசாரணை நடந்தால், அனைத்தும் வெளியே வரும். இந்த ஆட்சி நடக்கும் வரை, அதற்கான வாய்ப்பில்லை.ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே, 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங் களின் நிலை குறித்து, வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும் என, கோரிக்கை வைத்திருந்தோம்.

'டெங்கு' பிரச்னையில், வெள்ளை அறிக்கை வெளியிட்டால் தான், உண்மை வெளிவரும்.'
அண்ணாதுரை, இன்று இருந்திருந்தால், அவர், பா.ஜ.,வில்சேர்ந்திருப்பார்' என, பா.ஜ., பொதுச் செயலர், முரளிதர் ராவ் தெரிவித்திருக் கிறார். அண்ணாதுரையின் பெயரைப் பயன் படுத்தி, அரசியல் செய்யும் நிலை, பா.ஜ.,வுக்கு வந்து விட்டது.

ரூ.12 உயர்வு
மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள போது, அரசின் வரு வாயை உயர்த்த, மதுபானங்களின் விலையை, 12 ரூபாய் வரை உயர்த்த, அமைச்சரவையில் முடி வெடுக்கப்பட்டுள்ளது. 'படிப்படியாக, மதுக் கடைகளை மூடுவோம்; மதுவிலக்கை படிப் படியாக அமல்படுத்து வோம்' எனகூறியவர்கள், இப்படி அறிவித்துஉள்ளனர். இது, தமிழகத்தில், எப்படிப்பட்ட முரண்பட்ட ஆட்சி நடக்கிறது என்பதற்கு, எடுத்துக்காட்டு இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  அதான் மத்திய அமைச்சர் கேட்டிருக்கிறாரே? நீங்க என்ன அவரின் எக்கோவா ?

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  உங்க கட்சிக்காரங்க விக்கிற சாராயத்தை தான் அரசாங்கம் வாங்குது . அந்த மது ஆலைகளை எப்போ மூடப்போறேள் ?

 • sundar - chennai,இந்தியா

  பெட்ரோல் டீசல் வாட் வரி குறைக்கணும், மது விலை உயர்வு கூடாது, ஆனால் அரசு ஊழியர் சம்பள உயர்வு குறித்து கருத்து சொல்ல மாட்டோம். இது தான் தங்க தளபதி பாலிசி.

 • Idithangi - SIngapore,சிங்கப்பூர்

  //''தமிழகத்தில், மது விலக்கு அமல்படுத்துவோம் எனக் கூறியவர்கள், மது விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டது, முரண்பட்ட ஆட்சிக்கு எடுத்துக்காட்டு,''// செயல் தலை மது விலையை குறைத்து இருந்தால் முரண்படாத ஆட்சின்னு சொல்லி இருப்பாரோ..?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நடக்காததை பற்றி கிணற்று தவக்கலையாக கத்துவது இவரின் வழக்கமாகி விட்டது.,,,

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  நல்லா ஒரு முறை கை தட்டுங்க..... செயல் தலைவர் சொல்லிட்டார். மொதல்ல உங்க கட்சி ஆளுங்க ஊழல், மணல், ஜல்லி திருட்டு, நில அபகரிப்பு, அடாவடி, ரௌடி தனம் போன்ற விழயங்களில் இருந்து நிப்பாட்டுங்க. உங்க குடும்பத்தாளுங்க, உங்க கட்சி ஆளுங்க சேர்த்து வைத்துள்ள சொத்துக்கு மொதல்ல கணக்கு காட்டுங்க, வரி கட்டுங்க. பிறகு பார்க்கலாம்.

 • karthikeyan -

  டாஸ்மாக் சப்ளை செய்யும் கம்பெனிகளை மூட வேண்டும்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இவர் சொல்வது போல எண்ணெய் மீது எந்த வரியும் போடாமல் விட்டால் எல்லா விலைகளும் குறைத்துவிடும் என்று நம்புவது பேதைமை... GST க்குள் கொண்டுவந்தால் 20 % விலை குறையும் வாய்ப்பு உள்ளது... மத்திய அரசுக்கு தேவையான நிதி ஆதாரங்களை பெற எண்ணெய் விலை உதவுகிறது...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement