Advertisement

எல்லா சிக்கலுக்கும் காரணம் தினகரன்; திவாகரன் கடும் புகார்: சசிகலா கண்ணீர்

ஐந்து நாட்கள், 'பரோலில்' வந்த சசிகலா, அவரது தம்பி, திவாகரனுக்கும், அக்கா மகன், தினகரனுக்கும் இடையே வெடித்த மோதலை தீர்த்து வைக்கும் பஞ்சாயத்தில் தான், அதிக நேரத்தை செலவிட்டு உள்ளார். ஆனாலும், அவரது முயற்சி தோல்வி அடைந்து விட்டதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து, ஆளுங்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: கணவரை பார்க்க, ஐந்து நாட்கள் பரோலில், சசிகலா, அக்., 6ல், சென்னை வந்தார். தி.நகரில் உள்ள, இளவரசியின் மகள் வீட்டில் தங்கிய சசிகலா, தன்னுடைய வருகை, கட்சியிலும், ஆட்சியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என, எதிர்பார்த்தார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அதனால், அவரும், அவரது ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளனர்.

பட்டியல்
அதே நேரத்தில், திவாகரன் தரப்பினரும், தினகரன் தரப்பினரும் தான், சசிகலாவை சுற்றி வந்துள்ளனர். அவர்கள், தங்களையும், ஆதர வாளர்களையும், கட்சியிலிருந்து நீக்கியதற்கு யார் காரணம் என, சசிகலாவிடம், பெரிய பட்டியலே கொடுத்துள்ளனர். அந்த விவாதத் தில், தினகரனும், திவாகரனும் ஒருவரை ஒருவர், மாறி மாறி குற்றஞ்சாட்டி உள்ளனர்.

திவாகரன் ஆதரவு குடும்ப உறுப்பினர்கள், சசிகலாவிடம், இந்த குழப்பத்திற்கு எல்லாம்,
தினகரன்தான் காரணம் என,கொட்டி தீர்த்தனர். 'பழனிசாமியை ஆட்சியில் அமர்த்தியது நீங்கள் தான். அவரது ஆட்சி, நன்றாக செயல்பட்டு கொண்டிருந்த நேரத்தில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு, தேர்தல் வந்தது.

'போட்டியிட வேண்டாம்' என, நீங்கள் கூறியும், தினகரன் போட்டியிட்டார். அதன் விளைவு, இரட்டை இலை பறிபோனது. தேர்தல் செலவு,
அமைச்சர்கள் தலையில் கட்டப்பட்டது.'அதைத் தொடர்ந்து, வருமான வரி சோதனைக்கு பின், முதல்வர் பழனிசாமியும், அமைச்சர்களும் நிறம் மாறத் துவங்கினர். தினகரன், கட்சி பணிகளை மட்டும் கவனித்திருந்தால், நமக்கு இந்த கதி ஏற்பட்டு இருக்காது' என, புலம்பி உள்ளனர். 'தினகரன் காட்டிய அவசரத்தால், நம்மை ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை, பா.ஜ., மேலிடம் ஏற்படுத்தி விட்டது. நாம் உருவாக்கிய பழனிசாமி அரசை, நாம் எதிர்க்கும் போது, மக்கள் சிரிக்கின்றனர்.

'ஜெ., ஆட்சியின் போது, நாம் எப்படி செயல்பட் டோமோ, அப்படியே செயல்பட்டு இருந்தால், ஆட்சியும், கட்சியும், நம் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும்' என்றும் கூறியுள்ளனர்.

விளக்கம்
இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம், தினகரனும், அவரது ஆதரவு குடும்ப உறுப்பினர்களும், நீண்ட விளக்கம் அளித்து உள்ளனர். 'கட்சியை, பழனிசாமி அண்டு கோ கபளீகரம் செய்து விட்டது. தினகரனின் சொந்த முயற்சியில், கட்சியை நம் பக்கம் இழுக்க, மதுரை, திருச்சியில் மாநாடு நடத்தப்பட்டது. பழனிசாமி அணிக்கு போட்டியாக, தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.'முதல்வர் பழனிசாமி துரோகம் செய்து விட்டார்'

என்ற பிரசாரத்தால், நம் குடும்பம் மீது கூறி வந்த துரோக குற்றச்சாட்டு, மக்கள் மத்தியில் மறக்க வைக்கப்பட்டது. 'தினகரன் மீது நம்பிக்கை இல்லை என்றால், அவர் ஒதுங்கிக் கொள்வார்' என, கூறியுள்ளனர். இதையடுத்து, திருச்சி, தஞ்சாவூர் என, தினகரன் திடீரென கிளம்பி போய் விட்டார். இதனால், அதிருப்தி அடைந்த சசிகலா, இளவரசியின் குடும்ப உறுப்பினர் மூலம், தினகரனை, சென்னை வரும்படி அழைத்துள்ளார்.

இதையடுத்து, தினகரனும், சசிகலாவை சந்தித்துள்ளார். அப்போது, 'திவாகரன் சொல்படி கேட்டு, நீ நடக்க வேண்டும்' என, தினகரனிடம், சசிகலா கூறியுள்ளார்.அதற்கு, தினகரன், 'அவரது பேச்சை கேட்பதை விட, 'வேறு' வேலை பார்க்கலாம்' என, கோபத்தில் பேசி உள்ளார்.

தினகரன் - திவாகரன் மோதலை தீர்த்து வைக்க முயன்ற சசிகலா, அது முடியாமல் போனதால், விரக்தியில் லேசாக கண்ணீர் சிந்தி உள்ளார். அதே போல், மருத்துவமனைக்கு, சசிகலா சென்று வர, தன் மகன் ஜெயானந்த் தலைமையில், பாது காவலர் களை, திவாகரன் அனுப்பி வைத்துள்ளார். இது,
இளவரசியின் மகன், விவேக்கிற்கு பிடிக்க வில்லை. இவர்கள் இருவரும் தனித்தனி கோஷ்டி களாக செயல்படுவதை பார்த்தும், சசிகலா கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.

இன்று மீண்டும் சிறைவாசம்
'பரோலில்' சென்னை வந்த சசிகலா, இன்று மீண்டும் சிறைக்கு திரும்புகிறார்.சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற சசிகலா, பிப்., மாதம், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில், அவரது கணவர், நடராஜனுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரை பார்ப்பதற்காக, சசிகலா, ஐந்து நாட்கள், பரோலில் வந்தார்.

சென்னை, தி.நகரில் உள்ள, உறவினர் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கினார். அங்கிருந்து, தினமும் மருத்துவமனை சென்று, கணவரை பார்த்து வந்தார். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தன்னை சந்திக்க வருவர் என, சசிகலா எதிர்பார்த்தார்; ஆனால், யாரும் வரவில்லை.அவரது பரோல் விடுமுறை, இன்று நிறைவு பெறுகிறது. இன்று மாலை, 6:00 மணிக்குள் அவர், சிறைக்குள் செல்ல வேண்டும்.

எனவே, சென்னையில் இருந்து பெங்களூருக்கு, காரில் செல்ல திட்டமிட்டுள்ளார். 'அவரை வழியனுப்ப, திரளாக வாருங்கள்' என, தினகரன் ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்துள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement
 

வாசகர் கருத்து (42)

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  எவ்வளவுதான் கழுவி ஊத்தினாலும் இவனுங்க இப்பொழுதுக்கு திருந்த போறது இல்ல? ஆனா எடப்பாடி அரசு அவுங்க பினாமி சொத்துக்களை இனம் கண்டு நடவடிக்கை எடுத்தாலே எல்லாம் அமைதியா, சுமுகமா அடங்கிடும்? எரியறத இழுத்தா கொத்திக்கறது தானா அடங்கும் அப்படின்னு சும்மாவா சொன்னாங்க?

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  கூட்டு கொள்ளையில்சில தவறுகள் நடக்கலாம்? இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம்? முண்டங்கள் உழைச்சி சம்பாதிச்சி இருந்தா தெரியும்?

 • Jeeva - virudhunagar,இந்தியா

  மாபியா கும்பலையே இந்திய அரசியலிலிருந்து ஒழிக்க வேண்டும்

 • shekaran - thiruchi,இந்தியா

  தினகரன் திவாகரன் உடன் நீயும் திகார் செல்ல போற சசி

 • niki - Chennai,இந்தியா

  pathavi aasaikkaga nenga pandra dramava makkal nampa mattanga sasikala avarkaley

 • Prem - chennai,இந்தியா

  மோசமான இந்த மன்னார்குடி குடும்பத்தை தமிழக அரசியலை விட்டே விரட்டியடிக்க வேண்டும்

 • senthilkumar - tamilnadu,இந்தியா

  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரி

 • Sarathi_Ganesh - Delhi,இந்தியா

  மாபியா கும்பலையே இந்திய அரசியலிலிருந்து ஒழிக்க வேண்டும்.

 • Sundaram - Thanjavur,இந்தியா

  athunga elam oru kudumbame kidaiyathu ..pathavikaga avangalukulave sandaiya potupanga...elam panathukum pugal matrum pathavikum than

 • balasubramanian - coimbatore,இந்தியா

  சசிகலா அவர்கள் உண்மையிலேயே ஜெயா அம்மாவை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருந்த வீடியோவை வெளியிட்டால் சசிகலா புகழ் எங்கோ போய் விடும் .அந்த வீடியோவில் அம்மா எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நம்மிடம் உள்ளது .ஆனால் இவ்வளவு ஏச்சு ,பேச்சுக்களை கேட்டுக்கொண்டு ஒன்றுமே சொல்லாமல் இருப்பது .....a blunder .

 • Nancy - London,யுனைடெட் கிங்டம்

  சமாதி சத்தியம் உண்டா?

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  கொள்ளை கும்பல் கூட்டத்தில் நடந்ததை , சிறிது கற்பனையும் கலந்து (லேசாக கண்ணீர் சிந்தினார் என்று நேரில் பார்த்தது போல் எழுதியுள்ளார் ). இந்த கும்பலை அப்படியே பிடித்து உள்ளே வைத்தால் , மீதி கொள்ளை விவரமும் வெளியில் வரும் . அடுத்த தேர்தல் வரை இவர்களை அமுக்கி சிறையில் களி தின்ன வைத்தால் சரியாகி விடும்

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  செய்த வினைக்கு நிச்சயம் பலன் உண்டு. அதை அனுபவித்து தான் ஆக வேண்டும்

 • Balaji - Bangalore,இந்தியா

  பதவி ஆசை சண்டையில் சசிகலா குடும்பமே நாசம் ஆகி நடுத்தெருவில் நிற்கும். வாழ்க தமிழ் நாடு.

 • JOE TARANTULA - Chennai,இந்தியா

  போய்வா அம்மா போய்வா சி. அம்மா, நாட்டுக்காக தியாகங்கள் செய்த தானை தலைவியே சிறை சென்று வா வழியனுப்ப கூடும் கூட்டம் சோறுதான் சாப்பிடுகிறது?

 • R.BALAMURUGESAN - Muscat,ஓமன்

  ...அடிங்கடா, நல்லா கடுமையா சண்டை போடுங்கடா... கோஷ்டி கோஷ்டியா பிரிஞ்சு இந்த அம்மணியவே எதிர்த்து நில்லுங்க... தமிழகம் காப்பாற்றப்படும்...

 • periyasamy - coimbatore,இந்தியா

  சசிகலா குடும்பத்தை பற்றி தினமும் அவதூறாக போடுகிறீகள்.

 • S.L.Narasimman - Madurai,இந்தியா

  இதற்கு தான் குடும்ப ஆட்சியை அனுமதிக்கலாகாது என்று மக்கள் விரும்புவாது. இவர்களுக்குள் தங்களில் யார் பணபலமிக்கவர் யாருக்கு அதிகாரம் ஜஸ்தி என்ற மோதலில் எல்லா வித ஒழுக்க கேடுகளும் ஆட்சியில் உருவாகும்

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  தினகரன் காட்டிய அவசரத்தால், நம்மை ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை, பா.ஜ., மேலிடம் ஏற்படுத்தி விட்டது. - இல்லாட்டி பாஜகவும், சசிகலாவும் ஒண்ணும் மண்ணா கூடி குலாவி கொண்டிருந்திருப்பார்கள். இன்னும் கொஞ்ச காலம் தான் அது தான் நடக்க போகிறது. தினகரனும் மோசடியும் கைகுலுக்கி தமிழக தேர்தலில் தொகுதி பங்கீட்டை முடிவு செய்வார்கள். தியாகி தினகரன் என்று காவிகள் பஜனை பாடுவார்கள்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நமக்கு பிள்ளையை குட்டியா... ? இந்த கேடுகட்ட " கரன் " களுக்குகாகவா அநியாயமாக சொத்துகளை சேர்த்து சிறை சென்றோம் என்று சசிகலா நினைத்து கொண்டு இருப்பார்...

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒடுக்க வேண்டும். புதுக் கட்சியைத் தொடங்கி அரசியல் நடத்துவது அவர்களின் விருப்பம். பயங்கரவாதிகளிலும் அதி மோசமானவர்கள்.

 • Bala Subramanian - Los Angeles CA,யூ.எஸ்.ஏ

  கொலை செய்த “பிரம்மஹத்தி தோஷம்” அவ்வளவு எளிதில் தீராது, தீர்வும் கிடையாது. செய்த வினைக்கு நிச்சயம் பலன் உண்டு மகாபாரதத்தில் வம்சமே கோரை புல் (இரும்பு உலக்கை) கொண்டு அடித்துக்கொண்டு சாகும், மன்னார்குடி மாபியாவின் நிலையும் அதே

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  தங்களையும், ஆதர வாளர்களையும், கட்சியிலிருந்து நீக்கியதற்கு யார் காரணம் என,.........முழு காரணமும் தினகரன் தான்.. திடீர் என்று தினகரனுக்கு ஆட்சி, கட்சி இரண்டையும் பிடிக்க வேண்டுமென ஆசை வந்து விட்டது.. ஆர்.கே நகர் தொகுதியில் தேர்தலில் நின்றார்... வெற்றி பெற்றால் சி.எம் ஆகலாம் என்று கனவு கண்டார்.. ஆனால் அதிமுகவில் இப்போ கொங்கு மண்டலம் எம்.எல் ஏ க்கள் தான் அதிகம்.. அதனால் அவர்களின் ஆதிக்கம் தான் இப்போ அதிமுகவில் இருக்கும்.. இதை கூட தெரியாத தினகரன் சி.எம் மிற்கு ஆசை பட்டான்.. தினகரன் எல்லா எம்.எல் ஏ க்கள் , அமைச்சர்கள் எல்லோரும் முன்பு போல் சசிகலா காலில் விழுந்த மாதிரி அவர் காலில் விழுவார் என எதிர்பார்த்தார்.அது நடக்குமா../> சின்ன பிள்ளை தினகரன் எதையும் புரிந்து கொள்ள கூடிய திறமை இல்லை.தினகரனிடன் கண்டெய்னர் லோடு பணம் உள்ளது.. அதை வைத்து மட்டும் ஆட்சியை பிடிக்க முடியும் என நினைக்கிறான்.. அது சாத்தியம் இல்லை என இவனுக்கு தெரியாது. இந்த பொடி பையன் தினகரன் சி.எம் எடப்பாடி இவர் களில் விழுவான் என நினைத்தான்..?.இது நடக்குமா..?. கட்சி தலைமை சி.எம் உடன் ஒத்து போக வேணும்..அதை விட்டு .இப்படி குதித்தால் கூண்டோடு காலியாகி விட்டார்கள்.. இப்போ கூட குடிமுழுகி போகவில்லை.சசிகலா தினகரனை நீக்கி வேறொருவரை நியமித்தால் சசிகலாவுக்கு கொஞ்சம் பெயரிருக்கும்...

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  ஜேயை இல்லாமல் செய்த குடும்பமல்லவா ? ஓநாய்கள் போல் கடித்து குதற தொடங்கி விட்டார்கள் . புருஷனிலும் அக்கறை காட்டுவது இதுதானா?.

 • rajan - kerala,இந்தியா

  குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பது ஏது? என செய்த கர்மங்களை ரத்த கண்ணீரால் தானே கழுவ முடியும் கட்டி காத்த பணத்தால் இதை செய்ய முடியாது என்பதை காலம் சின்னத்தாயி க்கு புரிய வைக்க துவங்கி உள்ளது. இது தான் வாழ்க்கை கொடுக்கும் அனுபவம் சார்ந்த பாடம். அத்தனை பலம் சார்ந்த துரியோதனனை துவம்சம் செய்த இந்த பாரத புண்ணிய பூமியில் யாரும் கர்மா பலனில் இருந்து தப்ப முடியாது என்பதே காலத்தால் எழுத படாத சட்டம். இது அத்தனை ஊழல்வாதிகளையும் பதம் பார்க்காமல் விடாது. ஊழல் அரசியல்வாதிகளே பொது சொத்துக்கள் அத்தனையும் சிவன் சொத்து அதில் போயி விளையாடாதீர்கள் அங்கு தீர்ப்பு குலநாசம் என்பது நிர்ணயிக்க பட்ட ஒன்று என்பதை நினைவு கூர்கிறோம்.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  பணம் இருந்தும் மனா உளைச்சலில் உள்ள பிசாசுகள் ... நிம்மதியற்ற வாழ்வே உமக்கு நிரந்தரம்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  கோட்டைக்குள் குத்து வெட்டு இருப்பதாக சொல்வது மக்களை ஏமாற்றும் நடிப்பு இந்த கும்பலின் ஒரே நோக்கம் அதிகார வெறி இதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை சின்னம்மா மீண்டும் சிறை செல்லுமுன் பல வேலைகளை கொடுத்து விட்டு செல்வார் இந்த அல்லக்கை கள் மீண்டும் தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்யும்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இன்று சின்னம்மாவை வழியனுப்ப வருபவர்களுக்கு குவாட்டர் பிரியாணி 500 ரூபாய் பணம் உண்டு ப்ரோகிராஜ் போக மீதி ஆளுக்கு 400rupai கிடைக்கும் அனைவரும் வருக . ஆதரவு தருக

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  அதென்ன சசிகலா வந்ததும் ஆட்சி மாற்றம் வரும் என்று இருந்தாங்க, ஒருவேளை அவங்கதான் கவர்னரோ? ஆனால் ஒரு மல்டி மில்லியன் உண்மை ' ஜெயலலிதா இருந்தபோது எப்படி கட்சியை நடாத்தினோமோ, அதேபோல தொடர்ந்து நடாத்தி இருந்தால் ஆட்சியையும், கட்சியும் நம் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும்' என்பதுதான், பன்னீரை பொம்மை CM ஆகா வைத்து செமையாக கொள்ளையடிப்பதை தொடர்ந்திருக்கலாம், ஜஸ்ட் மிஸ், காலம் கடந்த ஞானம்.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  மோதலுக்கு காரணம்,கொள்ளையடித்த சொத்துக்களுக்கு பங்கு போட்டதில். கடைசியில் சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆகி வரும்போது ஒரு சொத்தும் அவங்க பெயரில் இருக்காது, வீடியோ கடைகூட நடாத்த பணம் இருக்காது, இந்த சில நடிகைகள் கடைசி காலத்தில் ஒண்ணுக்கும் வழியில்லாமல் ஏழையாகி, பரதேசியாகி மேல போனாங்களே, அதே நிலைமை தான் சசிக்கும் வரும், வினை விதைத்தவன் ....

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  "விரக்தியில் லேசாக கண்ணீர் சிந்தி உள்ளார்" - ஒரு அரை லிட்டர் இருக்குமா? இவர்களைப்போன்ற புனிதர்களை காண்பது அரிதிலும் அரிது... முக திருமணம் செய்து வாய்த்த ராசியோ என்னவோ இந்தத்தருதலைக்கூட்டம் தமிழ் நாட்டில் ஏராளமான சொத்துக்களை ஆட்டையை போட்டு விட்டது...

 • ushadevan -

  ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் ஆட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைத்த சசிகலா தன் குடும்பத்தை கூட தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர இயலவில்லை.விதி வலியது.தமிழகம் தப்பித்தது.

 • raman - Madurai,இந்தியா

  சதிகலா திரும்ப ஜெயிலுக்கு போச்சா. அதுபற்றி செய்தி இல்லையா

 • senthil kumar kasinathan - mannargudi,இந்தியா

  தமிழக மக்கள் உரிமைக்காக போராடி சிறை செல்லும் சசிகலாவை வழியனுப்ப திரளாய் வாருங்கள் மானம்கெட்டவர்கள் தான் இந்த வழிஅனுப்புதல் நிகழ்ச்சிக்கு போவார்கள்.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  சசி குடும்பத்தின் ஆட்களை தமிழ்நாடு மறக்க விரும்புகிறது. வேறு ஏதாவது முக்கிய செய்தி இல்லையா?

 • Baskar - Paris,பிரான்ஸ்

  இவர்களின் குடும்ப சண்டையினாலே தானே அம்மாவை போட்டி போட்டு கொன்றார்கள்.எப்படியாவது யாராவது அவர்கள் குடும்பத்தில் ஒருவர் முதல்வர் ஆக வேண்டும் என்ற வெறி.இப்போது அவர்களுக்கு உள்ளேயே அடித்து கொண்டு உண்மையை கக்குவார்கள். விரைவில் அவர்கள் வாயாலே உண்மையை கக்குவார்கள்.அம்மாவின் ஆவி சும்மாவிடாது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement