Advertisement

சைக்கிள் பயன்படுத்த காஷ்மீர் டூ கன்னியாகுமரிக்கு பயணம் பிரசாரம்

விருதுநகர்: சைக்கிள் பயன்படுத்துவதை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு பயணம் செய்யும் மகாராஷ்ட்ராவை சேர்ந்த ஏழுபேர் நேற்று விருதுநகர் வந்தனர். 'சைக்கிள் பயன்படுத்துவதில் இந்தியாவின் இரண்டாவது நகராக விருதுநகர் உள்ளதாக,' அவர்கள் தெரிவித்தனர்.

கிர்தா பாரதி மற்றும் டைகர் குரூப் ஆப் அட்வென்சர் என்ற அமைப்பின் சார்பில் மகாராஷ்டிரா நாக்பூர் கல்வித்துறை ஓய்வு பொறியாளர் ரவீந்திர தாரே தலைமையில் அடுல் டபாசி, சந்தீப் வைத்யா, சந்தோஷ் சர்வேசி, பிரசாத் தேஷ்பாண்டே, சரத் சொன்டாக்கே, யாசுகு டிடாடே ஆகியோர், செப்., 9 ல் ஜம்முவிலுள்ள கட்ரா வைஷ்ணவி கோயிலில் இருந்து சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை துவக்கினர்.

ஆச்சரியம் :



துாய்மை பாரதம், திறந்த வெளி கழிப்பிடத்தை ஒழித்தல், பெண்குழந்தைகள் பாதுகாத்தல், நீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு, பசு பாதுகாப்பு போன்றவற்றை வலியுறுத்தி கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு பிரசாரம் செய்கின்றனர். இவர்களது முக்கிய குறிக்கோள் 'சைக்கிள் ஓட்டு... நோய் மற்றும் டாக்டரை மற' என்பது தான். நேற்று காலை மதுரையில் இருந்து புறப்பட்ட இவர்கள் விருதுநகர் வந்தனர். நான்கு வழிச்சாலையில் சென்றபோது சைக்கிள் பழுதடைந்ததால் விருதுநகர் சர்வீஸ் ரோடுவழியாக தெப்பம் வந்தனர். இவர்களை நாட்டுப்பசு பாதுகாப்பு இயக்க தலைவர் சங்கர் மற்றும் நகர் மக்கள் வரவேற்றனர். விருதுநகர் பஜாரில் சிறுவர் முதல் 80 வயதுள்ளவர்கள் வரை சைக்கிள் ஓட்டிச் செல்வதை பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

சைக்கிள் சிட்டி :




ரவீந்திர தாரே கூறுகையில், ''ஜம்மு காஷ்மீரில் துவங்கி 3,562 கி.மீ., பயணம் செய்த நாங்கள் சில நாட்களில் கன்னியாகுமரியில் பயணத்தை முடிக்க உள்ளோம்.நாட்டில் நாக்பூரை அடுத்து விருதுநகரில் அதிகம் பேர் சைக்கிள் ஓட்டுகின்றனர். வயதானவர்கள் கூட சைக்கிளில் செல்வது ஆச்சரியமாக உள்ளது. சைக்கிள் ஓட்டுவது என்பது இப்பகுதி மக்களின் வாழ்க்கையில் ஒன்றாகி விட்டது. இதனால் தான் நோயில்லாமல் வாழ்கின்றனர். விருதுநகரை பார்க்கும்போது சைக்கிள் சிட்டி போல் உள்ளது,'' என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    சைக்கிள் ஓட்டுவது உடலுக்கும், மனதுக்கும், சுற்றுப்புறத் தூய்மைக்கும் நாட்டுக்கும் நல்லது. துபாயில் சைக்கிளில் செல்பவர்களுக்கு தனி சாலையே அமைக்கப் பட்டுள்ளது...

  • rajasekar - abbasiya,குவைத்

    Cycle lanes and tracks போடவேண்டும்

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

    சைக்கிள் ஓட்டுவது ரொம்ப நல்ல விஷயம், நான் சமீப காலம் வரை சைக்கிள் மட்டுமே ஓட்டி வந்தேன், இப்போது கூட பெரும்பாலும், சைக்கிள் தான் குறைவான தூரத்திற்கு பயன் படுத்து கிறேன், ஆனால் இங்கே சைக்கிள் ஓட்டுபவர்கள் கேலியாக பார்க்க படுகிறார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement