Advertisement

'18 வயதுக்கு உட்பட்ட மனைவியுடன் உறவும் பாலியல் பலாத்காரமே'

புதுடில்லி: 'மனைவியாக இருந்தாலும், 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடனான உறவு, பாலியல் பலாத்காரமே' என, உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்து உள்ளது.

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின், 375வது பிரிவின்படி, 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடனான உறவு, பாலியல் பலாத்கார குற்றமாக பார்க்கப்படுகிறது; அதே நேரத்தில், 15 - 18 வயதுள்ள, மனைவியுடனான உறவுக்கு மட்டும், விதிவிலக்கு அளிக்கப்படுகிறது; அது,
பாலியல் பலாத்காரமாகாது என, கூறப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரம் மற்றும் குழந்தை திருமணம் தொடர்பான, மற்ற சட்டங்களில், 18 வயதுக்கு உட்பட்டவருடன், அது மனைவியாக இருந்தாலும்,இணக்கத்துடன் உறவு வைத்தாலும், அது, பாலியல் பலாத்காரமாகவே பார்க்கப்படுகிறது.

விதிவிலக்கு
இது தொடர்பான வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், வேறொரு வழக்கில், நீதிபதிகள், மதன் பி.லோகுர், தீபக் குப்தா அமர்வு, தனித்தனியாக அளித்துள்ள ஒருமித்த தீர்ப்பு:

இது போன்ற விஷயங்களில், விதிவிலக்கு என்பது,ஒருதலைபட்சமானது, பாகுபாட்டை ஏற்படுத்துகிறது. அதனால், 18 வயதுக்கு உட்பட்ட பெண், மனைவியாக இருந்தாலும், அவருடன், கணவன் உறவு வைத்தால், அது பாலியல் பலாத்காரமே.பாகுபாடு கூடாது. குழந்தை
திருமணங்களை தடுப்பதற்கு, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மைனர் பெண், மைனர் திருமணமான பெண் என்ற பாகுபாடு பார்க்கக் கூடாது. இதே பிரச்னை தொடர்பான வழக்குகளுக்கும், இந்த வழக்குக்கும், எந்தத் தொடர்பும் கிடையாது. அதே நேரத்தில், இந்த தீர்ப்பு, அந்த வழக்கில் தீர்ப்பு அளிப்பதற்கு உதவலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறிஉள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஓல்ட் ஹைதெராபாதில் 18 வயதுக்கும் குறைந்த முஸ்லீம் பெண்களை அரேபிய ஷேக்குகள் (குறைந்த வயது 63) ரூ. 5 லட்சம் ஏஜென்ட் மூலமாக கொடுத்து திருமணம் என்ற பெயரில் நிக்காஹ் செய்வது வழக்கமானாதாயிற்றே (ஆவெரேஜ் 4 நிக்காஹ் தினம் அதாவது வருடத்திற்கு குறைந்தது 1500 நிக்காஹ்). இதுவும் இந்த சட்டத்தில் சேர்த்தியா கோர்ட், இல்லை அவன் முஸ்லீம், அராபியன் ஆகவே இதில் சேர்த்தி இல்லையா???? (இந்து) குழந்தைகள் திருமணம் ராஜஸ்தானில் சர்வ சாதாரணம்???? சட்டம் என்பது கழுதை போல இருந்தால் இப்படித்தான் நடக்கும். சட்டம் சாதாரணன், உயர்ந்தவன் என்று அதன் நடைமுறை கூறினால் இப்படித்தான் இருக்கும்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  முதலில் 18 வயதுக்கும் குறைந்த பெண்ணின் திருமணம் எப்படி இது சட்ட பூர்வமாக்கப்பட்டது (ரெஜிஸ்டர்) ? அவனைப்புடிங்க முதல்லே?

 • SIVAN -

  ஆனால் குடும்ப வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட தமிழ்நாட்டில் பள்ளி பெண்கள் காதலையும், முறை தவறிய பாலுறவுகளை காமெடியாகவும், குழந்தைகள் அடல்ட் விஷயங்களை பேசுவதையும் சினிமா மூலம் அரசின் U சான்றிதழுடன் விடலைகளுக்கு போதிக்கலாம். குழந்தை (சிறுவர், சிறுமிகள்) தொழிலாளர்கள் மீடியாக்களில் பயன்படுத்தப்படலாம். நீ ஹீரோ ஆனால் எல்லாவித கட்டுப்பாடுகளையும் மீறலாம் என போதிக்கலாம். ஆனால் இதைப் பார்த்து வளரும் குழந்தைகள் வருங்காலத்தில் நல்லவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த நாட்டு சட்டம் சொல்லிக் கொடுத்தவனை (மீடியாவோ/ ஆசாமியோ) விட்டுவிட்டு செய்த வனை தண்டிக்கும். வளர்க்கத் தெரியவில்லையென பெற்றோருக்கும், பள்ளிகளுக்கும் அறிவுரையும் வழங்கும். ஏனென்றால் அவர்கள் தானே பிள்ளைகள் கெட்டுப் போக வேண்டுமென்று விரும்புகிறார்கள். சமூகத்தின் புற சூழலையும் கட்டுப்படுத்துகிறார்கள்.

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  "நீ எவனோ ஒரு அரபியை இங்கு உதாரணம் சொல்கிறாய் ?" - நிறைய நடக்கிறது... பணத்துக்கு பெண்ணை வாங்கும் ஒரு பழக்கத்தை சாதாரணமாக சொல்லுவதை வைத்தே சொல்லலாம் - உனது அறிவீனத்தை... திருந்துங்கடா......//////காசிமணி நெறைய நடக்குதுன்னு நீ சொல்லிட்டா உண்மை அது ஆகாதுடா ? குற்றத்தை பற்றி நீ பாடம் எடுக்கிறாயா ? அதிக அளவு மைனர் திருமணங்கள் எங்கு நடக்கிறது என்று நீயும் நானும் பணம் கட்டி விசாரணை அமைக்க சொல்லுவோம் யார் யார் இடம் அதிகம் மைனர் திருமணங்கள் என தெரிந்து விடும்.

 • Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா

  18 வயதுக்கு குறைவான பெண்ணை திருமணம் செய்து உடல் உறவு கொள்வதற்கு கொடுக்கப்படும் தண்டனையும், அதே வயது பெண்ணை திருமணம் செய்யாமல் உறவு கொள்வதற்கு கொடுக்கப்படும் தண்டனையும் ஒன்றா? அப்படியானால், திருமணம் செய்யாமலே உறவு கொள்ளலாமே.

 • Sulikki - Pudukkottai,இந்தியா

  லிவிங் டுகெதர் தப்பில்லை என்று சமுதாய அக்கறை, பொறுப்புணர்வு இல்லாமல் ஏற்கனவே மோசமான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் திருமணத்திற்கு முன்பே கற்பிழப்பவர்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. மற்றவர்களால் கேட்க முடிவதில்லை. சமூக சீர்கேடு ஏற்படுகிறது. இந்த தீர்ப்பையும் சட்டத்தையும் வாபஸ் வாங்க வேண்டும்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  வடை போச்சு.

 • Indira -

  டி வி விவாதத்தில் இது ஷரியத்துக்கு எதிரானது என்றே வாதிட்டார்கள். பெண்கள் முடி வெட்டி, புருவம் திருத்தி கொள்வதோ அழகு நிலையங்களுக்கு செல்வதோ கூடாது என்று பட்வா வந்தது. அந்த பெண்களுக்கு18 வயது ஆவதற்குள் குழந்தையுடன் விவாக ரத்தும் ஆகிவிடுகிறது. அதிகபடிப்பு கிடையாது. என்ன தான் செய்வார்கள். இது மாதிரி எழுதினால் நாய் என்று நம்மை திட்டுவார்கள். முஸ்லீம் பெண்கள் பிடிவாதம் செய்து படிக்கவோ , கைவேலையோ செய்தால் தான் பொருளாதார பாதுகாப்பு கிடைத்து இது மாதிரி பேசுபவர்களை வழிக்கு கொண்டு வர முடியும்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சமூக சீர்கேடு கலாச்சசார சீர்கேடு நவநாகரீகம் ஆகியவை இவர்களை பிஞ்சிலேயே பழுக்கவைக்கிறது... முறைப்படி திருமணம் ஆகும் முன்பே மறைவாக உடல்திருமணம் முடிந்து விடுகிறது...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  பதினாறு வயது ஹீரோயினியிடன் கதாநாயகர்கள் டூயட் பாடுவதை பார்த்தால் எல்லோருக்கும் தப்பான எண்ணம் தோன்றத்தான் தோன்றும் எனவே மைனர் பெண்களை அப்படி நடிக்கவிடவும் தடை வேண்டும்

 • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

  'மனைவியாக இருந்தாலும், 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடனான உறவு, பாலியல் பலாத்காரமே' என, உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்து உள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு . இந்தியாவில் குழந்தை திருமணங்கள் எல்லா மதத்தினராலும் நடத்தப்படுகின்றன .குறிப்பாக உலகிலே குழந்தை திருமணங்கள் அதிகம் நடக்கும் நாடு வங்க தேசம் - முஸ்லிம்கள் நாடு - பின்பு இந்தியா .இந்த கொடுமையான பழக்கத்தை மத வேறுபாடுகளை தாண்டி அனைவருடன் கண்டிக்க வேண்டும் . ஆனால் வழக்கம் போல போலி மதசார்பின்மை புல்லுருவிகள் கூட்டம் இந்த அறிவிப்பு சிறுபான்மை முஸ்லிம்களின் மதகோட்பாடுகளுக்கும், மத உரிமைகளுக்கும் எதிராக உள்ளது. முஸ்லிம்களின் ஷரியத் சட்டப்படி ஒரு முஸ்லிம் பெண் பூப்பெய்தி விட்டால் அவர் திருமணத்துக்கு தகுதியானவர் என்று சொல்கிறது. ஆதலால் தலாக் போன்று இதிலும் சட்டம் தலையிட கூடாது என வாதிடுவார்கள் .ஏற்கனவே முஸ்லிம் பெண்கள் மேடையில் பாட்டு பாடக்கூடாது ,மேடை நடனங்களில் பங்கு கொள்ள கூடாது என மார்க்க தீர்ப்புகள் பல வழங்கப்பட்டு உள்ளன .போன ஜனவரி மாதத்தில் கர்நாடகாவில் மேடையில் பாடி பாராட்டுக்கள் பெற்ற முஸ்லீம் பெண்ணுக்கு எதிராக மார்க்க தீர்ப்பு வழங்கப்பட்டது நினைவு கூறலாம். மேலும் பெண்கள் செஸ் ஆடக்கூடாது என்ற மார்க்க தீர்ப்புகளும் இந்தியாவில் நடை முறையில் உள்ளன என்பது தான் வேதனையிலும் வேதனை . இது போன்ற அனைத்து பெண்களுக்கு எதிரான அடக்கு முறை சிந்தனைகளை எதிர்த்து, ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் களம் கண்டு வெற்றி வாகை சூடிய தமிழக இளைஞர் கூட்டம் மீண்டும் களம் இறங்கி சாதிக்க வேண்டும். போதிய கல்வி அறிவின்மையால் நடக்கும் குழந்தை திருமணங்களை எதிர்த்து விழிப்புணர்வு பிரச்சாரங்களும் தொடங்கப்பட வேண்டும்.அதன் மூலம் இந்த கொடுமையான பழக்கம் குறைய வாய்ப்புள்ளது,

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  18 வயதுக்குள் திருமணம் செய்தால் பெற்றோர்களை தண்டனைக்குள்ளாக்கவேண்டும்... அதை விட்டுவிட்டு முரண்பாடான தீர்ப்புக்களை வழங்கி சொதப்புவது நல்லதல்ல... ஏற்கனவே மணவாழ்வில் ஈடுபட்டு இருக்கும் 18 வயதுக்கு குறைவானவர்களே இவர்களால் ஒன்றும் செய்து விட முடியாது...

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  அது சரி நீதிமான்களே, இந்தியாவில் போலி சாமியார்களும், பணம் படைத்தவர்களின் கொழுப்பெடுத்த மகன்கள் செய்யும் பாலியல் பலாத்காரங்களை நீதிமன்றம் அங்கீகரிக்கிறதா?

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  சட்டம் ரொம்ப லேட்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement