Advertisement

ராஜபக்ஷே மகன் கைது

கொழும்பு: இலங்கையின், அம்பன்தோடா விமான நிலைய பராமரிப்பை, இந்திய நிறுவனத்துக்கு அளிப்பதை எதிர்த்து போராட்டம் நடத்திய, முன்னாள் அதிபர், ராஜ்பக் ஷேவின் மகனும், எம்.பி.,யுமான, நமல் ராஜபக் ஷே கைது செய்யப்பட்டார். இலங்கை முன்னாள் அதிபர், ராஜபக் ஷே ஆட்சியின் போது, சீனாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்டது, அம்பன்தோடா விமான நிலையம். இதன் பராமரிப்பு பணிகளை, இந்திய நிறுவனத்துக்கு அளிப்பதை கண்டித்து, எதிர்க்கட்சிகளின் சார்பில், சமீபத்தில், கொழும்பில் உள்ள, இந்திய துாதரகம் அருகே, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, இதுவரை, 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், விசாரணைக்கு வரும்படி, நமல் ராஜபக் ஷே உள்ளிட்டோருக்கு போலீசார், 'சம்மன்' அனுப்பி இருந்தனர். அதன்படி, நேற்று விசாரணைக்கு வந்த, நமல் உட்பட, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement