Advertisement

சிறையில் கலவரம்: 13 பேர் பலி

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில், சிறையில் ஏற்பட்ட கலவரத்தில், 13 கைதிகள் பலியாகினர்.
வட அமெரிக்க நாடான, மெக்சிகோவின், நுாவா லியோன் மாகாணத்திலுள்ள சிறையில், நேற்று முன்தினம், கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது, கலவரமாக மாறியது. இதை அடக்க, போலீசார் முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை. இதற்கிடையில், கலவரம் பற்றி தகவல் அறிந்து, கைதிகளின் குடும்பத்தினர், சிறை முன் குவிந்தனர். அவர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நடந்த இந்த கலவரத்தை, போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தி கட்டுப்படுத்தினர். இந்த கலவரத்தில், 13 பேர் இறந்தனர்; பலர் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்; இதில், எட்டு பேரின் நிலைமை, மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement