Advertisement

பொருளாதார ஆலோசனை கவுன்சில் பணிகள் துவங்கியது

நாட்டின் பொருளாதார நிலை மந்தமாக இருப்பதை, பிரதமரின், பொருளாதார ஆலோசனை கவுன்சில் ஒப்புக் கொண்டுள்ளது; அதை மீட்டெடுப்பதற்கு, 10 அம்சங்களின் அடிப்படையில் பணியாற்ற, கவுன்சில் முடிவு செய்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.7 சதவீதமாக இருந்தது. மூன்று ஆண்டுகளில், மிகப்பெரிய சரிவை சந்தித்தது; இதற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகளும், பா.ஜ., மூத்த தலைவர்கள் சிலரும், கண்டனம் தெரிவித்தனர்.

குற்றச்சாட்டு
'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு; ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி முறையை, அவசரமாக அமல்படுத்தியது ஆகியவையே, பொருளாதார சரிவுக்கு காரணம்' என, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. மேலும், வேலைவாய்ப்பும் பெருகவில்லை என்றும் குற்றஞ்சாட்டின.

இந்நிலையில், பொருளாதார ஆலோசனைகள் அளிப்பதற்காக, பொருளாதார ஆலோசனை கவுன்சில் அமைக்கப்படுவதாக, பிரதமர் மோடி, சமீபத்தில் அறிவித்தார்.அதன்படி, 'நிடி ஆயோக்' உறுப்பினரும், பிரபல பொருளாதார நிபுணருமான, பிபேக் தேப்ராய் தலைமையில், இந்த கவுன்சில் அமைக்கப்பட்டது. நிடி ஆயோக்' தலைமை ஆலோசகர், ரதன் வாடல் உறுப்பினர் செயலராக வும், பிரபல பொருளாதார நிபுணர்கள், சுர்ஜித் பல்லா, ரதின் ராய், ஆஷிமா கோயல் ஆகியோர், பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

அறிக்கை
கவுன்சிலின் முதல் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின், பிபேக் தேப்ராய் கூறியதாவது:நாட்டின் பொருளாதார நிலை, மந்த மாக இருப்பது உண்மை தான். இதை, கவுன்சிலில் உள்ள அனைவரும் உணர்ந்துள்ளோம். அதற்கான காரணங்களையும், இறுதி செய்து உள்ளோம்; அதை, தற்போதைக்கு தெரிவிக்க முடியாது. பொருளா தாரத்தை, மந்த நிலையில் இருந்து மீட்டு எடுப்பதற் கான வழிமுறைகளை இறுதி செய்து, பிரதமருக்கு அறிக்கையை தாக்கல் செய்வோம்.

அடுத்த சில மாதங்களில் நடக்கும் கூட்டங்களில், இது குறித்து விரிவாக பேச உள்ளோம். மேலும், பட்ஜெட்டில் என்னென்ன இடம்பெற வேண்டும் என்பது குறித்தும், கவுன்சிலில் ஆலோசிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

10 அம்ச நடவடிக்கைகள்
பிரதமரின், பொருளாதாரஆலோசனை கவுன்சில் கூட்டத்தில், பொருளா தாரத்தை மேம்படுத்து வதற்கு, 10 அம்சங்களின் அடிப்படையில், பணி ஆற்றுவது என, முடிவு செய்யப்பட்டு உள்ளது. கவுன்சிலில் உள்ள, ஐந்து பேரும், தலா, இரு அம்சங்களின் அடிப் படையில் பணியாற்ற உள்ளனர்.பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், ரிசர்வ் வங்கி, நிடி ஆயோக் உள்ளிட்ட அமைப்பு களுடனும், பொருளாதார நிபுணர்களுடனும், ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்த, 10 அம்சங்களின் அடிப்படையில், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, கவுன்சில் தாக்கல் செய்ய உள்ளது. மேலும், அதன்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கை களை, தொடர்ந்து கண்காணிக்கவும், கவுன்சில் கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கவுன்சில் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட, 10 அம்சங்கள்:
பொருளாதார வளர்ச்சி; வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்; அமைப்பு சாரா துறைகளை ஒருங்கிணைத்தல்; பொருளாதார கொள்கை களை வரையறுத்தல்; நிதிக் கொள்கை; பொது செலவீனங்களை முறைப்படுத்துதல்; பொருளாதார நிர்வாகத்தை, அமைப்பு ரீதியில் மேற்கொள்ளுதல்;

வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை; உற்பத்தி மற்றும் மக்களின் நுகர்வை அதிகரித்தல்; சமூகத் துறை.இந்த அம்சங்களின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Advertisement
 

வாசகர் கருத்து (38)

 • murugu - paris,பிரான்ஸ்

  (''மத்தியில், பிரதமர் மோடி தலைமை யில் ஆட்சி அமைந்தபின், நாட்டின் பொருளா தாரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது,'' என, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா கூறினார்.)என்ன ?வழுக்கைக்கு என்ன கண்ணாடி போட்டால் பார்வை தெரியும் ?RSS கண்ணாடியை கழட்டிவிட்டு இத்தாலி கண்ணாடியை போடட்டும் இந்தியா என்பது அமித் ஷா மகன் மட்டும் இல்லை என்பது இப்போதாவது புரிந்துக்கொண்டாள் சரி

 • mvh v - Singapore,சிங்கப்பூர்

  அட பிக்காளி பயலுவலா so far never consult experts is it?

 • ganapati sb - coimbatore,இந்தியா

  நேர்மையான நடைமுறைகளுக்கான சீர்திருத்தங்களால் வந்த தற்காலிக பின்னடைவு மாற்றங்கள் நிகழ்வதின் வெளிப்பாடே அவை விரைவில் முனைப்போடு சரிசெய்யப்படும் சுயநலமின்றி அயராது உழைக்கும் மோடியை முழுவதும் நம்பலாம்

 • Selvam Pillai - Dammam,சவுதி அரேபியா

  மோடிஜி ஊர் சுற்றுவதற்கு செய்த செலவுக்கு கூட எந்த முதலீடும் கிடைக்கவில்லை. இந்த வாய்ப்பை பயன் படுத்தி ஊர் சுற்றி தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். மக்களுக்கு நாமம். தனக்கு பொருளாதாரத்தை பற்றி ஒன்றும் தெரியாது என்று அவரே ஒப்புக்கொண்டுள்ளார் . இதை ஓட்டுவாங்குவதற்கு முன்பே சொல்லி இருக்கவேண்டும். தன்னுடைய வாய் ஜாலத்தால் மக்களை ஏமாற்றிவிட்டார். இப்போதாவது இந்திய மக்களுக்கு இது புரிந்தால் சரி. இந்த பொருளாதார பிரச்சினையை சரிக்கட்ட மன்மோகன் & ப சியாலேயே முடியும். அந்த அளவுக்கு பொருளாதார திறமை உள்ளவர்கள் இவர்களிடம் கிடையாது. உப்பு தின்றவன் தண்ணி குடித்துதான் ஆகவேண்டும். மக்கள் செய்த தவறு தற்போது அனுபவிக்கிறார்கள்.

 • Snake Babu - Salem,இந்தியா

  16 லட்சம் போடுறேன்னு சொன்னுது பொய் ன்னு சொல்லியாட்சி, எதோ தூக்கிலிடுங்கள் என்று சொன்னதாக ஞ்யாபகம், சரி விடுங்கப்பா நான் பொய் பேசுறேன் புருடா விடுறேன். நண்பர்கள் கூறியது போல எதிர்க்கட்சிகள் கூறும்போது அப்பிடி இப்படினு ஏதேதோ சொல்லிட்டு இப்ப இவங்க வைத்த குழுவே சொல்லுது. இதுக்கும் இந்து பிஜேபி கூட்டம் காங் இழுக்குறத பார்த்தா தான் கடுப்பா வருது. அய்யா விலைவாசி ஏறிப்போச்சி, வேலை வாய்ப்பு புதிதாக ஏதும் இல்லை. வேலையை விட்டு தூக்குதல் நல்லாவே நடக்குது. இதுல கட்சி பாகுபடியின்றி எல்லோருமே பாதிக்கப்படுறோம் காயப்பட்டுக் கொண்டும் இந்த பிஜேபி கூட்டம் இன்னும் இதுங்களுக்கு சாமரம் வீசுதுங்க பாருங்க அதுதாங்க கொடுமையிலும் கொடுமை. வாங்க வழக்கம்போல ஒருமையில் பேசிட்டு சம்மந்தமே இல்லாம ஒரு கருத்தை சொல்லிட்டு திட்டிட்டு போங்க நன்றி வாழ்க வளமுடன்.

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  பிஜேபி மாதிரி பொய் பித்தலாட்டத்தில் ஈடுபடும் கட்சி இந்தியாவிலே இல்லை .

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ///இந்த கருத்தை எனது மாணவ மாணவிகளுக்காகவும்இ, என்னிடத்தில் பயின்று சென்றோருக்காகவும், இவளுக்கு பொருளாதாரம்து பற்றி ஒன்றுமே தெரியாது என்று என்னை ஏளனம் செய்த சக மறுத்தவர்களுக்காகவும் எழுதுகிறேன்///. இந்த சிந்திக்கவும், வருத்தப் பாடவும் செய்கிறது. பொருளாதார மந்த நிலை என்று சொல்கிறார்கள், பணத்தின் வாங்கும் மதிப்பு குறைகிறது என்கிறார்கள், அனைத்திலும் விலை ஏறி கொண்டே போகிறது என்கிறார்கள். சிறிய குறு தனியார் நிறுவனங்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள். நிலைமை எப்படி இருந்தாலும் அரசு ஊழியர்களின் சம்பளம் ஒவ்வொரு சம்பள கமிஷனின் சிபாரிசை அப்படியே ஏற்று கொண்டு முதலில் மத்திய அரசும் அதை தொடர்ந்து மாநில அரசும் ஊழியர்களின் சம்பளத்தை இரண்டரை மடங்கு (2.57) உயர்த்தி தர செய்கிறார்கள். அதற்கு எங்கிருந்து பணம் இருந்தது? தெரியவில்லை. அதை என் உடனடியாக அமல் செய்கிறார்கள் அதுவும் புரியவில்லை. பொருளாதார மந்த நிலை வளர்ச்சி விகிதம் கடந்த ஆட்சியை விட பாதிக்கு கீழே சென்றிருக்கிறது, இன்னும் கீழே இறங்கி எதிர்மறையாக கூட மாறும் என்று சொல்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று சரியாக சொல்வதில், காரணம் அந்த அதிகாரிகளுக்கு தெரியவில்லை. அமைச்சர்களோ ஒருவிதத்தில் தெர்மோகோல் அமைச்சரை போலத்தான் அறிவில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். அமைச்சர்களின் அறிவால் அவர்களின் தீர்க்க தரிசனமாக முன்கூட்டி அறையும் திறனால் அதிகாரிகள் அறிவுரை பெற்று செயல் படுவது என்பது நடக்காதா நிலை. அதிகாரிகள் சொல்வதை கேட்டு கொண்டு தலையாட்டுவதை தவிர வேறு முறைகளை அறிய அவர்களால் இயலவில்லை. அறிவிற் சிறந்தவர்களாக இருந்து நல்லவர்களாக பண்பாளர்களாக இருக்கவேண்டும். நீதி மன்றமும் தேவையில்லாமல் சகட்டு மேனிக்கு தற்காலிக தீர்ப்புகளை தந்து விட கூடாது. எதோ ஒரு டி கடையை ஆக்கிரமிப்பின் பேரில் அகற்றியதற்கு மதுரையில் தாசில்தார் தந்து சொந்த செலவில் புதிதாக கட்டிடடம் கட்டி தரவேண்டும் அந்த டீ கடை முதலாளிக்கு அதே ஆக்கிரமிப்பு நிலத்தில் என்று தீர்ப்பு வருகிறதாம்? என்ன செய்ய? பத்து அம்சங்கள் தந்திருக்கிறார்கள். அந்த பத்து அம்சங்களை பற்றிய அவர்களின் ஆய்வு சரிதானா? அது எதானுண்டன் சம்பந்தப்பட்டது என்று பார்த்தல் சிறப்பாகத்தான் வருகிறது. பொருளாதாரத்தை உயர்த்துவதாக நியமிக்கப் பட்ட கமிட்டி போல அவர்களின் செயல் பாட்டை செஇகிறார்களோ என்று தெரிகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மந்த நிலைக்கான காரணங்கள் அதை மேம்படுத்தவேண்டிய கூறுகள், சாதக பாதகங்கள் அலசி அதை உயர்த்த என்ன செய்யவேண்டும் என்று திட்டமிடவேண்டும். மாறாக அரசின் செலவுகளை குறைப்பது வீண் செலவினங்களை கண்டறிவது என்று வேறு எதோ திசை நோக்கி செல்கிறார்கள் என்று அறிய முடிகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவது ஏன்? உற்பத்தி என்பதை எதோ ஹார்ட்வர் பொருட்கள் உற்பத்தி விவசாய உற்பத்தி என்று மட்டும் பொருளாதாரம் கணக்கிடுவதில்லை. மனித உழைப்பையும் உற்பத்தி என்றுதான் கணக்கிடுகிறார்கள், அதில் அரசு துறை அலுவலர்கள் அதிகம். தொழிற்சாலை ஊழியர்களின் உழைப்பு என்பது மனித உற்பத்தி என்று கணக்கிடப் படாமல் அவர்களின் அவுட்புட் அதாவது உற்பத்தி செய்யப் பட்ட பொருளில் (எண்டு ப்ராடக்ட்) கணக்கிடப் பட்டு விடுகிறது. மனித உழைப்பு என்பது இந்தியாவை பொறுத்தவரை உள்நாட்டு உற்பத்தியாக கணக்கில் கொள்ளும்போது அது பெரும்பாலும் அரசு துறை சேவகர்களின் உற்பத்தி என்று நேரடியாக ஏற்கப் படும். அதன் திறனை பற்றி யாரும் கூறத்தேவையில்லை. அதன் ஒட்டுமொத்த இண்டெக்ஸ் என்றும் எதிர்மறையாகத்தான் இருக்கும், இருந்தால் தான் அது இந்தியா என்று நக்கல் அடிக்கிறார்கள். சேவை துறையில் பெரும் பங்கு வகிக்கும் ஓட்டல்கள், FMCG - Fast Moving Consumer Goods, பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் வணிகர்கள் வணிக நிறுவனங்கள் ஆன்லைன் மற்றும் நேரடி உள்ளூர் கடைகள் என்று அவர்களின் சேவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். அது அனைத்துமே சக்கை போடு போடுகின்றன. ஒவ்வொரு பண்டிகை, காதலர் தினம அது இது என்று வருடம் முழுதும் ப்ரோமோஷன், ஸேல் டிஸ்கோவுண்ட் என்று எதையாவது செய்து விற்று கொண்டும் அதிக அளவில் கடைகளை திறந்தும் கொண்டுதான் இருக்கிறார்கள். திருமண செலவுகளுக்கு பஞ்சமே இல்லாமல் செய்கிறார்கள். அதிலெல்லாம் எத்துணையோ அமைப்பு சாரா தொழிலார்கள் உழைக்கிறார்கள். தேவைகளுக்கு கூடி கொண்டே இருக்கின்றன. அனைத்தும் இந்தியர்களாலேயே செய்ய படுகின்றன. ஆகா அனைத்து உழைப்பும் உள்நாட்டு உற்பத்தி தான். அனைத்தும் உள்நாட்டினருக்கான உற்பத்தி தான். அனைத்துமே மிக வேகமாக வளர உற்பத்தி விகிதம் பெருக்கெடுக்கவேண்டும். அமைப்பு சாரா தொழிலார்களின் உழைப்பு, தாற்காலிக பணியில் இருப்போர் உழைப்பு இது எதுவுமே சரியாக கணக்கிடப் படுவதில்லை, அதன் தகவல்கள் இருப்பதில்லை. ஆனால் அவை அனைத்துமே உண்மையானவை தான். அரசு துறை தவிர மற்ற துறைகளின் உழைப்பு விகிதம் தொழிலார்களின் உழைப்பு விகிதம் பெருகி கொண்டே செல்ல, மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைகிறதே ஏன்? அதற்கான காரணமாக நான் அறிவது விவசாய பொருட்கள் விலை பொருட்களின் உற்பத்தி, இயந்திரத்தால் உற்பத்தியாகும் பொருட்கள், ஆடைகள் அணிகலன்கள் உற்பத்தி போன்ற நேரடி உற்பத்தி பொருட்களுடன் அரசு இயந்திரங்களின் செயல்பாடுகளை தான் காரணமாக கூறவேண்டும், இவைகளே யானை அளவு வளர்ச்சியை இறங்குகின்றன, மற்ற துறைகளின் குதிரை அளவு வளர்ச்சியை தூக்கி சாப்பிட்டு விடுகின்றன. இரண்டு வகையாக பிரச்சினைகளை நான் பார்க்கிறேன். சாராய கடைகளை சகட்டு மேனிக்கு திறந்து விட்டதால், சாதாரண டொமெஸ்டிக் வேலைகளை திறமையாக செய்தவர்கள், சாராயம் குடித்து உடலை கெடுத்து கொள்வதுடன் அவர்களின் திறமையான உழைப்பை அப்படியே அளித்து விட்டார்கள். பெரிய படிப்பு இல்லாமல் ஆனால் அதே நேரத்தில் அவர்கள் அறிந்து கொண்ட வேலைகளை மிக நேர்த்தியாக செய்ய வல்லவர்கள் சாரயத்தல் சீரழிந்து போனார்கள். அதில் ஒரு தொழிலாளி செய்யும் வேலையை புதிதாக இலைகனர்களை கொண்டு செய்யவேண்டுமானால் பத்துபேர் தேவை, நேர்த்தியும் அவர்கள் அளவிற்க்கு இருக்காது. இதற்கு உதாரணமாக பெயிண்டர், எலெக்ட்ரிசின், மேஸ்திரி, வீட்டிற்கு வர்ணம் அடிப்பவர்கள், சலவை தொழிலாளி, இஸ்திரி போடுவோர் என்று பலரை கூறலாம். அதில் பெரும்பாலானோர் டாஸ்மாக்கில் அணைத்ததையும் துளைக்கிறார்கள். இது கடந்த சில வருடங்களில் மிகவும் அதிகமாக தெரிவது கண்கூடு. ஒவ்வொரு பேருந்திலும் காலை நேர பேருந்திலேயே கூட பயணம் செய்யும் பொது ஒரு பெருந்திற்கு ஐந்து குடிகாரர்கள் படிக்கட்டு பகுதியில் நின்று கொண்டு கண்டக்டருடன் கூலாக வாதம் செய்வதை தினமும் மூக்கை மூடிக்கொண்டு கேட்கலாம் தமிழகம் போன்ற உற்பத்தியில் முதலிடம் வகித்த ஒரு காலத்தில் வளந்திருட்ந்த மாநிலத்தில். அடுத்ததாக நேரடியாக உற்பத்தி செய்யும் நிறைய நிறுவனங்கள் ஒளிந்து விட்டன. நீதிமன்ற வழிகாட்டல்களால் அதை மூடி விட்டார்கள். திருப்பூர் ஒரு நல்ல உதாரணம். சிறப்பான ஏற்றுமதி தொழில் மாநகரங்களை உருவாக்கினார்கள் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக. அதை பிளின்தொடர்ந்து நிறைய தொழில் துறை சாலைகளை மொத்த தமிழகத்திலும் உருவாக்கினார்கள். சென்னையை சுற்றி இருங்காட்டு கோட்டை, திருமழிசை, குரோம்பேட்டை மெப்ஸ், பெருந்துறை தொழிற்பேட்டை, தூத்துக்குடி சீடகோ நகர், அதுபோலவே திடகா என்று எத்துணையோ உருவாக்கினார்கள். அவர்களும் ஆரம்பத்தில் சிறப்பாக செய்தார்கள். அனைத்தையும் அளித்து போட்டது, சீனாவின் பொருட்கள் தான். இப்போது சிவகாசியை பதம் பார்த்து விடுவார்கள். சீன பட்டாசுகள் தலைவிரித்து கொண்டு நரகாசூரனாக வருகிறான். அரசு லஞ்சம் தரும் சீன இறக்குமதியாளர்களை மட்டுமே நம்புகிறது. அவர்களால் பல கண்மாய்கள் அவர்களுக்கு. இந்தியாவில் எங்குமே லஞ்சம் தர வேண்டியதில்லை. அவர்கள் கணக்கிலோ அவர்களின் குழந்தைகள் படிப்பிற்கோ அல்லது அவர்கள் வெளிநாட்டு கணக்கிலோ நேரடியாக வெளிநாட்டில் பணத்தை லஞ்சமாக தந்துவிட முடிகிறது. ஆகையால் அவர்கள் சீனாவிற்கு WTO AGREEMENT காரணம் காட்டி சிவப்பு கம்பளம் விரிப்பது கண்கூடு. பேணா பென்சில், புத்தகம், நோட்டு, காம்பஸ் பேட்டி, புத்தக பை, இங்க், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் என்று அனைத்துமே சீனர்களின் பொருட்கள் தான். இதை எல்லாம் உற்பத்தி செய்த நமது தொழிற்சாலைகள் இழுத்து மூடப் பட்டு விட்டன. வீட்டில் நீர் கசிகிறதா, சீனாவின் எதோ ஒரு ஜெல் பசைதான் பயனாகிறது. டாய்லெட்டிற்கு கூட சீனாவின் ரசாயனங்கள் தான். என்று அனைத்து உற்பத்தியான சீன்வயின் தயாரிப்புகளும் இங்கு வந்து விட்டால், உள்நாட்டு உற்பத்தி எங்கே இருக்கும். இதில் தான் மேக் இன் இந்தியா என்ற ஒரு மக்கு திட்டத்தை கொணர்ந்திருக்கிறார்கள். உயர்ந்தான் திட்டத்தை செயல்படும் நோக்கத்தால் சிதைத்து விட்டார்கள். மேக் இன் திட்டத்திற்கு வெளி நாட்டவர்கள் இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டும் என்று அர்த்தம் கொண்டுவிட்டார்கள். அகா இந்தியாவின் தொழிற்சாலைகள் நசுக்கப் பட்டுவிட்டன, ஐ டி கம்பனிகள் நேரடியாக வெளிநாடுகளில் நேரடியாக உற்பத்தி வர்த்தகம் செய்கின்றன. அதற்கு பல சாப்ட்வெர் இங்கு தயாரிக்கப் பட்டாலும் அதை வெளிநாட்டில் இருக்கும் அவர்களின் ஊழியர்கள் தயாரிப்பதாக கணக்கு காண்பிக்கப் பட்டு சிறிதளவிற்கு பணம் டாலரில் இங்கு கொணர படுவதாக கணக்கில் காட்டப் படுகிறது. ஆகா அத்துறையில் உள்நாட்டு உற்பத்தி கூட வெளிநாட்டு உற்பத்தியாகவே போனது. எதிலும் திருப்தி இல்லை. என்ன செய்ய. முதலாளிகளுக்கு தங்கள் தொழிற்சாலை தொடர்ந்து இயங்கவேண்டும் தங்களது தொழிலார்களுக்கு தொடர்ந்து தொய்வில்லாமல் வேலை தந்து கொண்டே இருக்கவேண்டும் என்பதில் தான் நோக்கம் இருக்கும் அதற்க்கு என்ன செய்த வேண்டுமோ அதை செய்வார்கள். வேறு வழியே இல்லாத பொது திருப்பொரு முதலாளிகள் தாய்லாந்திற்கும், இந்தோனேசிய வியட்நாமிற்கு ஆயத்த ஆடை தொழிற்கூடங்களை மாட்டியது போல செய்வார்கள். வெளி நாட்டு இறக்குமதியில் அதிக கட்டுப்பாடு வேண்டும். குறிப்பாக ஸ்மார்ட் போன்கள்.

 • karthikeyan -

  முதல் ஆலோசனையாக ஜட் லீ கல்தா

 • Visu Iyer - chennai,இந்தியா

  இந்த ஆட்சியை கலைத்து விடுங்கள். பிரதமரை பதவி விலக சொல்லுங்க.. இனி இன்னொரு முறை அரசியலில் போட்டி இட கூடாது என்றும் சொல்லுங்க.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  ஆட்சிக்கு வந்தவுடன் இந்த குழுவை கலைத்துவிட்டு, எதுக்கு இந்த மாதிரி குழுக்கள் மினிமம் கவர்ன்மெண்ட் தான் இருக்கணும் என்று வெட்டி வாய் பேசினார்கள் .. இப்போது பொருளாதார தள்ளாட்டத்துக்கு பிறகு இந்த குழு.. பிரச்னைகளை சரி செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டால், அவர்கள் முதலில் பிரசனை இருக்கிறது என்று ஏற்று கொள்ள வேண்டும்.. இந்த குழுவின் தலைவர் டெப்ரோய், பொருளாதார பிரச்சினையே இல்லை என்கிறார்.. பிறகு எதுக்குயா குழு ??

 • hasan - tamilnadu,இந்தியா

  பொருளாதார வல்லுநர்கள் சொல்லி விட்டார்கள், நாட்டின் வளர்ச்சி பாதாளத்தை நோக்கி செல்கிறது என்று, காவிகள் இன்னும் பி ஜே பி க்கு பல்லக்கு தூக்கிக்கொன்டு சப்பை கட்டு கட்டுகிறார்கள்

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  மந்தமான பிரதமர் இருக்கும் வரை எல்லாமே மந்தமாகத்தான் இருக்கும்.. எல்லாத்துக்கும் ஞானம் வேண்டும்..ஞான சூன்யங்களின் ஆட்சியில் எல்லாமே இப்படித்தான் இருக்கும்... இவை எல்லாவற்றிக்கும் காரணம் அந்த உபி வாக்காளர்கள்தான்...

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///நாட்டின் பொருளாதார நிலை மந்தமாக இருப்பதை, பிரதமரின், பொருளாதார ஆலோசனை கவுன்சில் ஒப்புக் கொண்டுள்ளது///அப்படியே பொருளாதாரம் மந்தமாக இருக்கிறதா? சொல்லவே இல்லை, ஆனால் இது ஆலோசனை குழுவுக்கு தெரிவது சரி, பிரதமருக்கு தெரியுமா? தெரிந்தாலும் ஒப்புக்கொள்வாரா?

 • NERMAIYIN SIGARAM - TAMIL NADU,இந்தியா

  விடுங்கள் சார் இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ் என்றால் முடிந்துவிட்டது இது தான் காலா காலமா சொல்வது ஆட தெரியாதவன் கூடம் பத்தாது என்ற கதை தான் ஒரு செயல் செயம்போது விசாரித்து செய்ய வேண்டும் எனோ தானோ என்று செய்து விட்டு பணமதிப்பிழப்பு பின்னார் நோட்டு பிரிண்ட் செய்த செலவை பிஜேபி இடம் இருந்து வாங்கணும். 2 G ஊழல் என்று இவர்கள் புலம்பினாலும் அதனால் ஏழை பாழை அனைவரிடமும் இன்று செல் உபயோகத்தில் உள்ளது முன்னர் அது பணக்காரர்கள் மட்டுமே USE பண்ணிகொண்டுருந்தார்கள். காங்கிரஸ் வெள்ளையனே வெளியேறு இவர்கள் வெள்ளையனே வா வா என வரவேற்பு உள்ளூரில் உற்பத்தி குறைந்துள்ளது அதனால் வேலை வாய்ப்பு இல்லை இந்த பவிசில் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பேன் என்று வீர வசனம்

 • balakrishnan - coimbatore,இந்தியா

  எதிர்க்கட்சிகள், சொந்த கட்சிக்காரர்கள் அனைவரும் சொல்லும்போது, கண்டபடி ஏசியவர்கள், தேச துரோக குற்றம் சாட்டியவர்கள், இன்றைக்கு பிரதமரின் ஆலோசனை குழுவே பொருளாதார மந்த நிலையை ஒப்புக்கொண்டுள்ளது, இது அந்த கட்சியினரை வாயடைத்து போகவைத்துள்ளது, ஒரு ஆட்சி என்பது, கூட்டு தலைமையாக இருக்க வேண்டும், ஆனால் இங்கே பிரதமர் தான் அனைத்திலும், அவருடைய அலுவலகம் தான் சூப்பர் பவராக இருக்கிறது, யாருடனும் விவாதிக்க பிரதமர் தயாரில்லை, காரணம் யாரையும் அவர் நம்புவதில்லை, தன் ஒருவனால் மட்டுமே முடியும், தன்னுடைய புகழ் ஒன்று மட்டுமே நிரந்தரம், தன்னை மிஞ்ச ஆளில்லை, அப்படி ஒரு அதீத தன்னம்பிக்கை, இன்று ஒரு பெரிய சறுக்கலை சந்திக்கும்போது, சத்தமில்லாமல் எல்லோருமே மோடியை குறி வைக்க தொடங்கிவிட்டார்கள், பிரதமரும் நிலைமையை உணர்ந்து ஆலோசனையில் இறங்கிவிட்டார், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் தனது புகழை தக்க வைத்துக்கொள்ள வேண்டும், இல்லாவிடில் முதுகில் குத்த அவரது ஆட்களே மறைமுகமாக காத்திருக்கிறார்கள்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அதை மீட்டெடுப்பதற்கு, 10 அம்சங்களின் அடிப்படையில் பணியாற்ற, கவுன்சில் முடிவு செய்துள்ளது.. அதற்க்கு பத்து ஆண்டுகள் ஆகுமா...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  மன்மோகன் காலத்தில் கொடுக்கப்பட்ட கடன்கள் திருப்ப செலுத்த வேண்டிய நேரம் 2105 இல் வந்தபோதே வங்கிகளின் வாராக்கடன்கள் ஆறு லட்சம் கோடி இருந்தது அதற்கு வட்டியும் அபராதமும் சேர்த்து இப்போது ஒன்பது லட்சமளவுக்கு உயர்ந்துவிட்டது சொத்துக்களை ஏலம் விடப்போனால் ( ரியல் எஸ்டேட் கருப்புப்பண ஒழிப்பினால் ) வாங்கவே ஆளில்லை வாராக்கடன் கடன் வசூலை ரிசர்வ் வங்கியே மேற்பார்வை பார்க்கட்டும் என அரசு அனுமதித்துவிட்டதால் பயந்துபோய் நேர்மையானவர்களுக்கும்கூட புதுக்கடன் கொடுக்க வங்கியதிகாரிகள் தயங்குகின்றனர் அதனால் தொழில் சுணக்கமும் ஏற்பட்டுள்ளது ஆனால் டெபாசிட்டுகள் பெருகிவிட்டதால் வங்கிகள் சொந்தப்பணத்தில் வட்டி கொடுக்கின்றன. நட்டம்தான் அதிகரிக்கிறது ஐ டி துறை உலக மார்க்கெட் நிலவரத்தில் சரியில்லை அதில் வேலைபார்ப்பவர்கள் வேலையிழப்புக்கு பயந்து வீடு மற்றும் பொருட்கள் வாங்குவதைக்குறைத்து சேமிப்பில் இறங்கிவிட்டனர் என்பதால் அவற்றுக்கு டிமாண்ட் இல்லை உற்பத்தியான பொருட்களை வாங்க ஆளில்லாவிடில் தொழில்கள் என்னாகும்? ஆகமொத்தம் காங்கிரஸ் லஞ்சம்வாங்கி வாராக்கடன் கொடுத்ததால் இன்னும் நிலைமை சீர்திருத்த பல்லாண்டுகள் ஆகலாம் வங்கிக்கடன் நிலைமை இப்படி இருப்பதால் நல்ல கார்பொரேட் கம்பெனிகள் பங்குமார்க்கெட்டை நம்பியுள்ளன அங்கு அன்னியமுதலீட்டுக்கு பதில் சிறு முதலீட்டாளர்களின் பணம் குவிவதால் சற்று நல்ல நிலைமை உள்ளது அரசியல் கட்டாயங்களுக்கு பயப்படாமல் தொழிற்சாலைகளுக்கு நிலமெடுக்கும் மசோதாவை விரைவில் நிறைவேற்றினால்தான் பெரும் தொழில்களும் அவற்றை நம்பியுள்ள சிறு தொழில்களும் வளரும்

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  A .C. காமராஜ் வகுத்துக்கொடுத்த நீர்வழி சாலை பணிகளை துவங்கலாமே... வேலை வாய்ப்புகளும் பெருகும், நாட்டின் கட்டமைப்பும் பலப்படும் .. வெள்ளம் வறட்சி இரண்டினாலும் ஆண்டுதோறும் செலவாகும் பணமும் மிச்சமாகும்..

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  மூன்றாண்டுகளுக்குமுன் ( சொத்து ஜாமீனில்லாத ) வாராக்கடன்களை வாரிக் கொடுத்ததால் வசூலிக்க வழிதெரியாமல் அதிகாரிகள் ஒழுங்காக வட்டி கட்டுபவர்களுக்கும் கடன் தர மறுக்கின்றனர் பின்னர் எப்படி பொருளாதாரம் முன்னேறும்? வேலைவாய்ப்பு எப்படி அதிகரிக்கும் பசியும் மன்மோகனும் இதற்கு விளக்கம் சொல்லித்தான் ஆகவேண்டும்

 • Raman - kottambatti,இந்தியா

  அது எப்படி? நிதி மந்திரி ஏதோ உளறினான்? இப்ப எப்படி ? பொய் சொல்லி காலம் ஓட்டுங்கள் 2019 வரை இந்த மாதிரி கதை தான் நடக்கும்

 • KALPATHY VASUDEVA IYER NARAYANAN - Chennai,இந்தியா

  பொருளாதார ஆலோசனை நடத்த எல்லா தரப்பிலிருந்தும் நிபுணர்கள் பொருளாதார ஆலோசனைகள் அளிப்பதற்காக, பொருளாதார ஆலோசனை கவுன்சில் அமைக்க, பிரதமர் மோடி, நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  5 % க்கு மேல் தொடர்ந்து கட்டிக்காத்தாலே கூட நிலையான வளர்ச்சி என்று சொல்லலாம்... புத்தாக்கத்தன்மை உள்ள தொழில்கள் தொடங்க ஊக்குவிக்க வேண்டும்... முன்னேற வாய்ப்புள்ள அதே சமயம் நிதிநிலையில் சிக்கல்களை எதிர்நோக்கும் தொழில்களை அடையாளம் கண்டு உதவ வேண்டும்.. பொறுப்பற்று வரும் வரி வருமானத்தில் 10% க்கு மேல் இலவசத்துக்கு செலவு செய்யும் மாநிலங்களுக்கு நிதி உதவிகளை குறைக்கவேண்டும்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement