Advertisement

'டவுட்' தனபாலு

சசிகலா அக்கா மகன் தினகரன்: தமிழகத்தில் சிலர், கோமாளித்தனமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு பதில் சொல்லி, என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.


டவுட் தனபாலு: 'கட்சித் தலைமை அலுவலகம் இருக்கும் திசையில், தலைவைத்துக்கூட படுக்க முடியாத நிலையிலும், கட்சி எங்கள் வசம் தான் இருக்குன்னு சொல்றதும், இல்லாத, 'ஸ்லீப்பர் செல்'லை, 'இதோ, விரைவில் வெளியே வரப்போறாங்க'ன்னு சொல்றதையும் விடவா, நாங்க தமாஷா பேசிட்டோம்'னு, பதிலுக்கு அவங்க, 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!



துணை முதல்வர் பன்னீர் செல்வம்:
தமிழகத்தில், 'டெங்கு' காய்ச்சல், கட்டுக்குள் உள்ளது. இதை கட்டுப்படுத்த தேவையான டாக்டர்கள், நர்சுகள் பணியில் உள்ளனர்.



டவுட் தனபாலு: அங்கொன்றும் இங்கொன்றுமாக டெங்கு பாதிப்பு இருந்த ஆகஸ்டில், அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த ஆயத்தமானீங்க... அதன்பின், முதல்வர் பழனிசாமியுடன் ஐக்கியமானீங்க... இப்போ, நாள்தோறும் டெங்கு பலி நடந்துவரும் நிலையில், இப்படிச் சொல்றீங்க... டெங்கு கட்டுக்குள் இருக்கா... நீங்க, கட்டுக்குள் இருக்கீங்களா என்ற, 'டவுட்' வருதே...!



தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்:
எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா வேண்டாமென்றால், காழ்ப்புணர்வோடு சொல்வேன் எனக் கூறுவர். அதில் காட்டும் அக்கறையை, டெங்கு காய்ச்சல் குறித்து காட்ட வேண்டும்.



டவுட் தனபாலு: தமிழகத்தில் எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட மக்கள், தி.மு.க.,விடம் தான், முறையிடுறாங்க... அந்த அளவுக்கு, மக்கள் பணியை நாங்கள் ஆற்றி வர்றோம்னு பெருமிதமாச் சொல்லும் நீங்க, ஏரி, குளங்களை துார்வாரியது போல, டெங்கு தடுப்பு பணியை மேற்கொள்ளலாமே... விழாக்களை, எந்த அரசாவது தள்ளிப்போடுமா... லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்காத நிலையில், செம்மொழி மாநாடு அவசியமா என்ற, 'டவுட்'டும், கடந்த காலத்தில் எழுப்பப் பட்டதே... அதை மறந்துட்டீங்களா...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • sundaram - Kuwait,குவைத்

    லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்காத நிலையில், செம்மொழி மாநாடு நடந்தப்போ நாம ஸ்பெஷல் ஸ்டால் போட்டு கலைஞரை ஸ்டாலுக்கு வரவழைச்சு கூட நின்னு போட்டோ புடிச்சு மூணு நாளும் நாலு பக்கத்துக்கு போட்டோ போட்டாவா போட்டு தள்ளினது .....அதை எல்லாம் மறந்துட்டீங்களா...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement