Advertisement

'கறுப்பு பண சிறப்பு விசாரணை குழு: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வரும்'

புதுடில்லி: 'கறுப்புப் பணம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள, எஸ்.ஐ.டி., எனப்படும், சிறப்பு விசாரணை குழு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வரும்' என, மத்திய தலைமை தகவல் ஆணையம் தீர்ப்பளித்து உள்ளது.
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள, கறுப்புப் பணத்தை மீட்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் நீதிபதி,
எம்.பி.ஷா தலைமையிலான, சிறப்பு விசாரணை குழுவை, 2014ல் நியமித்தது. வருமான வரித்துறை, சி.பி.ஐ, உட்பட, பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து,தகவல்களை பரிமாறிக் கொள்ள, இந்த குழு அமைக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, முன்னாள் வங்கி ஊழியர், சிறப்பு விசாரணை குழுவுக்கு அளித்த, கறுப்புப் பண முதலீட்டாளர்கள் பட்டியல் உள்ளிட்ட தகவல்களை கேட்டு, சமூக சேவகர், வெங்கடேஷ் நாயக், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மனுகொடுத்திருந்தார்.சரியான தகவல்கள் கிடைக்காததால், மத்திய தலைமை தகவல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதை விசாரித்த தகவல் கமிஷனர், பிமல் ஜுல்கா அளித்த உத்தரவு:

அரசின் நிதியோடு, பொதுமக்களுக்கு சேவைஅளிப்பதால், கறுப்புப் பணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள, சிறப்பு விசாரணை குழுவும், பொது நிறுவனங்கள் கீழ் வருகின்றன.
அதனால், இந்த குழு குறித்த தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (8)

  • thanthi - Chennai,இந்தியா

    நாடன் வளர்ச்சிக்கு மத்திய அரசு எந்த திட்டத்தையும் யோசிப்பது போல் தெரியவில்லை.

  • அப்பாவி -

    ஆட்சிக்கு வந்த 100 நாளில் அயல் நாடுகளில் பதுக்கப்பட்ட பணத்தைக் கொண்டு வருவோம்னு சொம்படித்தாளே.... என்ன ஆச்சு ஓய்?

  • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

    " 'கறுப்புப் பணம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள, எஸ்.ஐ.டி., எனப்படும், சிறப்பு விசாரணை குழு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வரும்' என, மத்திய தலைமை தகவல் ஆணையம் தீர்ப்பளித்து உள்ளது". - வரட்டும் வரட்டும், இப்படியாவது கறுப்பு பணம் உற்பத்தி குறையட்டும்.

  • மணி மாறன் - chennai,இந்தியா

    என்னங்கடா புதுசு புதுசா கதை அளக்கிறீங்க...கேட்டா கொடுப்பானுங்களா ??

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    ஆனால் குடுக்கப்படும் விளக்கமும் கறுப்பாக இல்லாமல் இருந்தால் சரி...

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    இது தகவலறியும் சட்டத்தின் கீழ் வரும்.. ஆனால் கேட்ட தகவல் உங்களுக்கு வருமான்னு கியாரண்டி இல்லை. அதைத் தான் இன்றைய அரசாங்கமும் செய்து கொண்டு வருகிறது. Transparency வெளிப்படைத்தன்மை என்பது அறவே இல்லையே.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    அப்படியென்றால் நீதிமன்றத்தில் முன்னாள் நிதி அமைச்சர் (அதன் பின்னர் ஜனாதிபதியாகக் கூட இருந்தார்) கொடுத்த சீலிட்ட கவர்களை பிரித்து தகவல் வழங்கலாமே... எல்லா அரசு சார்ந்த அமைப்புக்களும் இல்லாத ஒரு சட்டப்பிரிவை மேற்கொள் காட்டி தகவல் கொடுப்பது இல்லை... நடைமுறை இடியாப்பச்சிக்கல்களில் இருந்து வெளிவர கறுப்புப்பணம் உற்பத்தியை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது...

    • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

      இந்த அரசுக்கும் இது பிடிக்கவில்லை அல்லவா.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement