Advertisement

'நான் ஒரு கூலி தொழிலாளி...!' : 'நெய்க்கார ரத்னா' ஹனுமந்த் பளீச்

இந்தியாவின் உயரிய விருது பாரத் ரத்னா. விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜூனா விருது, ராணுவ வீரர்களுக்கு அசோக சக்ரா விருது என ஒவ்வொரு துறையிலும் சாதனை படைப்பவர்களை கவுரவப்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் பல்வேறு பெயர்களில் தேசிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. கதராடை கைத்தறி விவசாயிகளை கவுரவிக்கும் விதமாக 'நெய்க்கார ரத்னா' விருது வழங்கப்படுகிறது.


இவ்விருதுக்கு சொந்தக்காரர் கே.எம்.ஹனுமந்த் ராயப்பா. விவசாயிகளின் உரிமைகளுக்காக முன்னாள் பிரதமர் இந்திராவிடம் வாக்குவாதம் செய்தவர். ஒட்டு மொத்த விவசாயிகளுக்காகவும் குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். கைத்தறி நெசவுத் தொழில் மற்றும் பட்டு தொழில் நலிந்து வருவது குறித்து பிரதமர் மோடியிடம் மனம் விட்டு பேசினார். இவரது ஆர்வம், நேர்மை, துணிச்சல், உண்மையை கண்ட பிரதமர், மத்திய பட்டு வாரிய தலைவராக ஹனுமந்த் ராயப்பாவை நியமித்தார்.


பதவி ஏற்று ஓராண்டு ஓடி விட்டது. இந்த ஓராண்டில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா உள்ளிட்ட பட்டு நுால் உற்பத்தி மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளிடம் பேசி நிறை, குறைகளை குறிப்பெடுத்து உடனுக்குடன் சீர்படுத்தி வருகிறார். 'மத்திய பட்டு வாரியம் என ஒன்று இருப்பது தற்போது தான் வெளியுலகிற்கு தெரிய வருகிறது,' என விவசாயிகள் பலர் புளகாகிதம் அடைகின்றனர். 78 வயதிலும் சுறுசுறுப்பாக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பட்டுக்கூட்டில் இருந்து பட்டு நுால் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை வெறும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தயாரித்து விவசாயிகளுக்கு 90 சதவிகித மானியத்தில் வழங்கி வருகிறார். இதனால் நுால் பிரித்தெடுக்கும் செலவு விவசாயிகளுக்கு இல்லை.


மதுரை பட்டு விவசாயிகளை சந்திக்க வந்த, ஹனுமந்த் ராயப்பா மனம் திறந்த தருணங்களில் இருந்து...
பெங்களூரு அருகே தொட்ட பெல்லாபுரா கிராமத்தில் சாதாரண கூலி தொழிலாளியாக வாழ்க்கை தொடங்கியது. விவசாயத்தில் முழு கவனம் செலுத்தினேன். விவசாயிகளின் உரிமைக்காக போராடி வருகிறேன். பிரதமர் மோடியிடம் விவசாயிகள் குறித்து தொடர்ந்து பேசினேன். அவர் 'பட்டு நுால் தொழில் நுட்பம் குறித்து உனக்கு நன்றாக தெரிகிறது. உன்னை மத்திய பட்டு வாரிய தலைவராக நியமிக்கிறேன்,'' எனக்கூறினார்.


ஓராண்டாக நாடு முழுவதும் ஓடோடி சென்று உழைத்து வருகிறேன். என் மீது பிரதமரும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணியும் விசுவாசம் வைத்துள்ளனர். அதற்கு கைமாறாக நான் விவசாயிகளிடம் விசுவாசம் காட்டுகிறேன். பதவி முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. உலகளவில் பட்டு உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனாவை மிஞ்சும் அளவுக்கு பட்டு தொழில் மிளிர வேண்டும் என்பதே எனது ஆசை. தொட்டபெல்லாபுராவில் 70 விசைத்தறி இயந்திரங்கள் வைத்து பட்டு நுால் உற்பத்தியை அதிகரித்து வருகிறேன். பல ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. பட்டு தொழிலுக்கு பிரதமர் மோடி காட்டும் ஆர்வத்தை சரியானபடி பயன்படுத்தி கொள்வதே விவசாயிகளின் புத்திசாலித்தனம் என்பேன், என்றார். 'நெய்க்கார ரத்னா' ஹனுமந்த் ராயப்பாவின் உன்னத சேவை
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement