Advertisement

திரை உலகம் மாறி விட்டது: சுரேஷ் சந்திர மேனன்

நீண்ட இடைவெளிக்கு பிறகு தானா சேர்ந்த கூட்டம், சோலோ, 4ஜி, பரத் நடிக்கும் படம் என்று

பிசி நடிகராகி விட்டார் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சுரேஷ் சந்திர மேனன்.
இவருடன் ஒரு சந்திப்பு

* சோலோ படம் பற்றி ?
ஒரு சின்ன ரோல் பண்ணிருக்கேன் ,ஆனால் ரொம்ப பிடித்த ரோல். துல்கர் மற்றும் அந்த டீம் உடன் நடிச்சிருக்கேன். புதுசான கதை என்று சொல்லலாம்

* இப்ப திடீர்னு பல படங்கள் உங்கள் வசம் எப்படி ?
அஜித் ஆரம்பித்து வைத்த சால்ட் அன் பெப்பர் லுக் இப்ப எனக்கு பயன்படுது. நிறைய ரோல் எனக்கு இப்ப வருது. புதுமுக இயக்குனர்கள் நல்ல நல்ல கதையுடன் வராங்க ,நானும் என் புது பயணத்தை துவக்கி இருக்கேன்.

* இவ்ளோ நாள் எங்க இருந்தீங்க ?
நான் சென்னையில் தான் இருக்கேன், நிறைய விளம்பர படங்கள் எடுத்தேன், டாகுமென்டரி பிலிம் எடுத்தேன் , சென்னையில் ஓட்டல் பிஸ்னஸ் மூணு வருஷம் பண்ணினேன், அப்புறம் கேரளாவில் போய் படகு வீடு கட்டினேன்.

* இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து நடிக்க வந்திருக்கீங்க; இப்ப என்ன மாற்றங்கள் இருக்கு ?
நிறைய மாறி இருக்கு, பிலிம் மேக்கிங் ரொம்பவே மாறி இருக்கு. முன்னாடி நாங்க படம் எடுக்கும்போது பிலிம் என்பதால் ரொம்ப கவனமா இருந்தோம், இப்ப டிஜிட்டல் சினிமா என்பதால் சுதந்திரமா வேலை பார்க்குறாங்க.
* தானா சேர்ந்த கூட்டம் படம் பற்றி ?
நான் ரொம்ப எமோஷனல் நடிகர் கிடையாது. முப்பது கதை கேட்டு சில மட்டும் ஒத்துக்குறேன். ரொம்ப வித்தியாசமான கதை இது, சின்ன ரோலா இருந்தாலும் நல்ல ரோல், படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்

* இப்ப எந்த மாதிரி படங்கள் மக்களுக்கு தேவை என நினைக்கிறீங்க ?
சினிமா என்பது பொழுது போக்கு அம்சம், எந்த மாதிரி இங்க ஓடும்னு யாருக்கும் தெரியாது. படங்கள் பொதுவா மக்கள் மனதை போய் அழுத்துவதாக இருக்கணும், அந்த மாதிரி படங்கள் தான் ஓடிருக்கு.

* நீங்க எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க விரும்புறீங்க ?
ஸ்கிரிப்ட் தான் ஹீரோ என்று சொல்வேன். இயக்குனர்கள் ஹீரோவை முடிவு செய்வதில்லை; ஹீரோக்கள் தான் இயக்குனர்களை முடிவு செய்கிறார்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement