Advertisement

மோடியின் மவுசு குறைகிறதா?

டில்லி அரசியல் வட்டாரங்களில், இப்போது பரபரப்பாக அலசப்படும் செய்தி,- 'பிரதமர் மோடியின் புகழ் குறைந்துவருகிறதா' என்பது தான். சமீபத்தில் நடந்த, மத்திய அமைச்சரவை மாற்றத்துக்கு பின் தான், இந்த விவகாரம் அதிகமாகபேசப்படுகிறது. நிர்மலா சீதாராமனை, ராணுவ அமைச்சராக்கியது, கட்சிக்குள் சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால், கட்சிக்குள் விமர்சனங்கள் எழத் துவங்கி உள்ளன.மற்றொரு பக்கம், எதிர்க்கட்சிகள், 'மோடி, இனிமேல் அவ்வளவு தான்; இன்னும், 18 மாதங்கள் தான், அவர் பதவி. அதன்பின், மோடியைத் தேட வேண்டியது தான்' என, கடுமையாக விமர்சிக்கின்றனர். மோடி, பிரதமராகபதவியேற்ற போது ஒத்துழைத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், இப்போது ஒதுங்கி விட்டனர்.எந்தவொரு அரசாக இருந்தாலும், தேர்தல் வருவதற்கு, ஓராண்டிற்கு முன், மூத்த அதிகாரிகள், அமைச்சர்களை பொருட்படுத்த மாட்டார்கள்; தற்போதைய மத்தியஅமைச்சர்களுக்கும், இதைத் தான், அதிகாரிகள் செய்து வருகின்றனர். ஆனால், மோடி, இதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. 'நானெல்லாம் பிரதமர் ஆவேன் என, யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி வந்த எனக்கு, முதல் வேலையே, மக்களுக்கு சேவை செய்வது தான். அதனால், எனக்கு எதை பற்றியும் கவலையில்லை. மக்கள் விரும்பினால், மறுபடியும் பிரதமர் ஆவேன்' என, கூறி வருகிறாராம், மோடி.


ஆட்டி படைக்கும் வதந்தி!
கடந்த வாரம் முழுவதும், டில்லியில், செய்திகளுக்கு பஞ்ச மில்லை. பிரதமர் வீட்டில் நடந்த முக்கிய ஆலோசனை தான், இந்த செய்திகளுக்கு அடிப்படை. பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா, நிதி அமைச்சர், அருண் ஜெட்லி ஆகியோர், அவசரமாக சந்தித்து, ஆலோசனை நடத்தினர்.கேரளாவில் இருந்த அமித் ஷா, அதை ரத்து செய்து, இந்த ஆலோசனையில் பங்கேற்றார். வங்கதேசம்சென்றிருந்த ஜெட்லியும், டில்லி விமான நிலையத்தில் இருந்து, நேரடியாக, பிரதமர் இல்லத்திற்கு விரைந்தார்.'பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது' என,பலரும், மோடி அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ஏதோ பெரிதாக நடக்கப் போகிறது என, வதந்திகள் கசிந்தன. 'நிதி அமைச்சர், ஜெட்லி மாற்றப்படுகிறார்' என, தகவல் பரவியது. ஆனால், பிரதமர் வீட்டில் கூட்டம்முடிந்தும், ஏதும் நடக்கவில்லை. 'அடுத்த நாள் நடந்த, சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான கூட்டத்தில், என்னென்ன சலுகைகளை மக்களுக்கு அளிக்கலாம்' என, ஆலோசிக்கத் தான், இந்த கூட்டம்நடந்தது என, தெரிய வந்ததும், வதந்தி பரப்பியோர்அமைதியாகினர்.மறுநாள், மீண்டும் அதிரடி செய்தி பரவியது. 'இரவு, 9:00 மணிக்கு, பிரதமர், 'டிவி'யில் பேசப் போகிறார்; ஏதோ,அதிரடியாக அறிவிக்கப் போகிறார்' என, வதந்திகள் உலா வந்தன. ஆனால், அப்படி எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை.


குடும்பம் வேண்டாம்!
துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு அமைச்சராக இருந்த போது, அடிக்கடி வெளியூர் சென்று விடுவார்; இப்போதும், அதை பின்பற்றி வருகிறார். இவருக்கென, தனி விமானம் உள்ளது; அதில், அடிக்கடி வெளியூர் கிளம்பி விடுகிறார். ஆனால், தன் குடும்பத்தினரை, அந்த விமானத்தில் அழைத்துச் செல்வதில்லை.நாயுடுவின் மனைவி மட்டும், தனிவிமானத்தில், அவருடன் செல்கிறார். சமீபத்தில், இவர், ஐதராபாத் சென்ற போது, இவரது மகன், வேறு ஒரு விமானத்தில் பயணித்தார்.துணை ஜனாதிபதி சென்றால், சம்பந்தப்பட்ட மாநில முதல்வரும், கவர்னரும், விமான நிலையத்தில், அவரை வரவேற்க வேண்டும்; இப்படி இவர் அடிக்கடி
வெளியூர் செல்வதால், சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுக்கும், கவர்னர்களுக்கும் பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓர்ஏற்பாட்டை செய்துள்ளார், வெங்கையா.'மாநில தலைநகருக்கு நான் சென்றால், முதல்வரும்,கவர்னரும் வரவேற்கலாம்; ஆனால், மாநிலத்தில்உள்ள, மற்ற நகரங்களுக்கு சென்றால், அவர்கள் வரவேண்டியதில்லை' என, உத்தரவிட்டு உள்ளார், வெங்கையா. இதனால், அனைவரும் நிம்மதியாக உள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • meeran - manama,பஹ்ரைன்

    குறைகிறது

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    அப்படியென்றால் திரு வெங்கய்ய நாயுடு ஹைதராபாத் சென்றால் இரண்டு முதல்வர்களும் இரண்டு கவர்னர்களும் வரவேற்க வேண்டுமா?

  • spr - chennai,இந்தியா

    "திரு. வெங்கையாவின் 'மாநில தலைநகருக்கு நான் சென்றால், முதல்வரும், கவர்னரும் வரவேற்கலாம் ஆனால், மாநிலத்தில் உள்ள, மற்ற நகரங்களுக்கு சென்றால், அவர்கள் வரவேண்டியதில்லை" என்ற கொள்கை பாராட்டப்பட வேண்டியதே. மேற்கு வங்காள முதல்வர் திரு ஜோதி பாசு போல என்று நம் பிரதமர், மாநில முதல்வர்கள் ஏன் வட்ட மாவட்ட தலைவர்கள் மக்களோடு மக்களாக எளிமையாக பழக முடிகிறதோ, பூனைப்படை, யானைப்படை இல்லாமல் கடைகளில் சென்று பொருட்கள் வாங்குகிறார்களோ அன்றுதான் உண்மையான குடியாட்சி திரு மோடிக்கு வேகம் இருக்குமளவிற்கு விவேகமில்லை இன்னமும் அவர் எதிர்ப்பே இல்லாத குஜராத்தில் முதல்வராக இருந்து ஆண்ட நிலையினை மனதில் கொண்டு ஆளுகின்றார் அவரின் நோக்கங்கள் முந்தைய காங்கிரசின் திட்டங்களே அவற்றை சிறிது மெருகேற்றி நிறைவேற்றுவதில், அதிகாரிகளின் ஆதரவு அவசியம் இல்லையேல் ரொக்கமிலாப் பண பரிவர்தனை போல தோல்வி அடையும் இப்பொழுது வாங்கிய கிஸ்தி வரியில், சிலருக்கு அதனை திருப்பித் தருவதாகச் சொல்வதுவும் சரியான ஒன்றல்ல அந்த வரி நுகர்வோர் காட்டியது வியாபாரி தனது ஆதாயத்தில் இருந்து எடுத்து தருவதல்ல பின் எவ்வாறு நுகர்வோருக்கு அந்தப்பணத்தைத் திருப்பித்தராமல், வியாபாரிக்கு தரலாம் அண்மையில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு இணைய தளம் சோஷியல் மீடியாக்களில் இருந்து தனிநபர் விவரங்களை திரட்டும் பணி தரப்பட்டிருக்கிறது அது ஏன் எனது தெரியவில்லை இந்த விவகாரங்கள் எதுவுமே எதிர்க்கட்சியினர் சுயநல காரணத்தால் கண்டு கொள்ளவில்லை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement