Advertisement

டோக்லாமில் மீண்டும் சீனா அடாவடி: சாலை பணி மேற்கொள்வதாக புகார்

புதுடில்லி: டோக்லாம் எல்லையில், சீனா சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டுள்ளதால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லை
சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் எல்லை பகுதியை பெய்ஜிங் மற்றும் பூடான் ஆகிய இருநாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. ஆனால், பூடானுக்கு இந்தியா ஆதரவு அளித்து வருகிறது.


கடந்த ஜூன் மாதம் இதே டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்க முயற்சித்த போது இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் எல்லையில் இரு நாட்டு வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சீனா படைகளை குவித்தது. இந்தியாவும் பதிலுக்கு ராணுவ வீரர்களை அனுப்பியதால் போர் பதற்றம் ஏற்பட்டது. ஏறக்குறைய 70 நாட்கள் நீடித்தது இந்த பிரச்சினை.


இந்தியா - சீனா இடையே தூதரக அளவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இருநாடுகளின் ராணுவம் பரஸ்பரம் பின்வாங்க சம்மதம் தெரிவித்தன. இந்நிலையில் டோக்லாம் எல்லையில் இருந்து சரியாக 10 கி.மீட்டர் தொலைவில் சீனா சாலையை விரிவாக்கப்பணியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதற்காக சீன தனது 500 வீரர்கள் பாதுகாப்புடன் இந்த பணி மேற்கொண்டு வருகிறது. சீனாவின் இந்த அத்துமீறலால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (15)

 • Saleem Khan - Nagercoil ,இந்தியா

  உண்மையிலேயே நீங்கள் Madurai, India -வில் இருந்து தான் கருத்து எழுதுகிறீர்களா? உங்கள் கருத்தால் நம் (நம் என்பது உங்களை தவிர) இந்திய வீரர்களை இழிவு படுத்த வேண்டாமே

 • Antony Raj - tirunelveli,இந்தியா

  படைகளை உடனடியாக குவித்து , தீவிர பயிற்சியில் ஈடுபடவேண்டும். எதோ ஒரு பெரிய நாடு ஆதரவு கொடுத்திருக்க வேண்டும் சீனாவிற்கு. நாம் திருப்பி தாக்கி அவர்களை நிர்மூலமாக்க வேண்டும். சப்பை மூக்கர்கள் சரியான பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் அந்த பெரிய நாட்டிற்கும் மூக்குடைபட வேண்டும்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  டோக்லாம் எல்லை பகுதியை பெய்ஜிங் மற்றும் பூடான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. டோக்லாம் எல்லையில் இருந்து சரியாக 10 கி.மீட்டர் தொலைவில் (தனது பிரதேசத்தில்) சீனா சாலை விரிவாக்கப்பணியில் ஈடுபட்டுள்ளது. - இது தான் சம்பவம். கௌரவபிரச்சினையா, பாதுகாப்பு பிரச்சினையா, இல்லை வரவேற்கக்கூடிய சம்பவமா என்பது வெளியுறவு கொள்கை சம்பந்தப்பட்டது. இதில் இந்தியான்னு எங்கேயாவது இருக்கா? We need thinkers, long term strategists, not short fused angry birds and shortsighted fools as policy makers / guides in foreign affairs ministry. இருபத்திஒன்றாம் நூற்றாண்டில் சிந்தனை அதை விஞ்சி இருக்கணும். பழைய அனுபவம் நல்லது தான். நம்மை பலப்படுத்தி கொண்டே நட்புக்கரம் நீட்டினால் நமக்கும் லாபம் தான்..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சீண்டி பார்ப்பதே கைப்புள்ளையின் வேலையாகி விட்டது...

 • அப்பாவி -

  போன தடவை வாபஸ் வாங்குனது ஒப்போ போன் இந்தியாவில் நேரடியாக விக்கறதுக்கு அனுமதி வாங்குறதுக்காக. அதான் கிடச்சாச்சே...இந்னும் கொஞ்ச நாள் போனா இந்தியாவுக்குள்ளேயே பஸ் வுடுவாங்கோ... நம்ம அமைச்சருங்கோ எல்லை பாதுகாப்பா இருக்குன்னு அறிக்கை வுடுவாங்கோ.

 • krishnan - Chennai,இந்தியா

  இந்தியா Modi யின் பிரிக்ஸ் பயணத்திற்காக எப்போதோ டோக்லாமை சீனாவிடம் விற்றுவிட்டது.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஆக்கிரமித்த காஷ்மீரை திரும்பவும் இந்தியாவுடன் சேர்க்க முயற்சி எடுத்தால் சீனா வழிக்கு வரும்... பாகிஸ்தானை உடைக்க அவர்கள் வழியிலேயே முயலவேண்டும்..

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  வாய்ச்சவடால் வீரர்களை வைத்துக்கொண்டு காவிகள் மார் தட்டி கூவினார்கள்.. சீனன் உலகை சுற்றி சாலை போடுறான். நாம படுக்கவும் விட மாட்டோம், தள்ளியும் படுக்க மாட்டோம். அதான் நம்ம கூறுகெட்ட வெளியுறவு கொள்கை. நாம கை கொடுத்து எல்லையில் பாதையை இருவருமாக பராமரித்தால் நமக்கும் நல்லது. அவன் தளவாடங்களை பார்டருக்கு சுலபமாக கொண்டு வந்து நம்ம தாக்கி விடுவான் என்று பேசும் தொடைநடுங்கிகளே, இந்தியாவும் ஏன் அது வர தரமான சாலைகளை போடவில்லை. (காங்கிரசை திட்டுவதை விட்ட கார்ப்பரேட் கடனை தள்ளுபடி பண்ணாமல்) எல்லைக்கு ரோடு போடுங்கடா நொன்னைங்களா. இத்தனை லட்சம் கோடிகளை ராணுவத்துக்கு என்று வெடிக்காத புஷ்வாணங்கள் வாங்கி கொள்ளையடிக்காமல், எல்லையில் அடிப்படை கட்டுமானத்தை கெட்டியாக்குங்கள். தக்காளி 3000 கோடி வெட்டியா சீனனுக்கு கொடுத்து சிவாஜி சிலை பண்றான். அதே பணத்தை அவன் கிட்டே கொடுத்தால் டோக்லாம் வழியாக போகும் பாதையில் இருந்து இந்தியாவில் வேண்டிய இடத்துக்கு பன்வழி சாலையை அவனே தரமாக போட்டு தந்திருப்பான் வெட்டியா வீர வசனம் பேசுறேன்னு பல்லை உடைத்து கொள்வதை நிறுத்தி விட்டு தைரியமாக தோள் கொடுங்கள். இந்தியாவில் இருந்து ரயிலில், ரோடு வழியாக ஐரோப்பா செல்லலாம். அது ஒரு பரபரப்பான வியாபார வழித்தடமாக (சில்க் ரோட்) மாறி விட்டால் போர் வருவதற்கு வாய்ப்பில்லை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement