Advertisement

ஆசை நடிகர்கள்...நடிகை தியா பளீச்

மலையாள கரையோரம் அசைந்தாடும் குருவி; அலைபாயும் கண்களால் கட்டிப் போடும் கருவி; மெல்லிய பார்வையால் மனசை கிள்ளி சின்னத்திரையிலும் வண்ணத்திரையிலும் முத்திரை பதிப்பவர், நடிகை தியா. தினமலர் வாசகர்களுக்காக அவர்...


* முதல் கேமரா அனுபவம்?
பத்தாம் வகுப்பு படித்தபோது கேமரா முன் பேசி நடித்தேன். 'டிவி' தொகுப்பாளினியாக உள்ளேன். முன்னணி ஹீரோக்கள் படங்களில் துணை நடிகையாக நடிக்கிறேன்.

*ஆசை நடிகர்?
அஜீத், விஜய், சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஆசை. வாய்ப்பு கிடைக்கும் வரை முயற்சிப்பேன்.

* மேக்அப் பிடிக்குமா?
அதிக மேக்அப் உடம்புக்கு ஆகாது. எல்லோருக்கும் இயற்கையாக அழகு உள்ளது. கிரீம் பூச்சுகளை விட்டு, இயற்கை அழகை ரசிக்கும் பழக்கம் வேண்டும்.

* ரசிகர்கள் தொந்தரவு?
ரசிகர்கள் நம் வீட்டு பிள்ளைகள். அவர்கள் தரும் உற்சாகம் தான் நாம் ஏற உதவும் ஏணி. ஐந்து விரலும் ஒன்று போல் இருக்காது. அதுபோல சில ரசிகர் தொந்தரவையும் ரசிக்க வேண்டும்.

* படப்பிடிப்பு இல்லாத நேரத்தில்...
பிடித்த இடங்களுக்கு சுற்றுலா செல்வேன். போட்டோ எடுப்பேன். அதை நானே ரசிப்பேன். மனதுக்கு இனிமையாக, இதமாக இருக்கும்.

* கவிதை ஆர்வம்?
கவிதை எழுதுவேன். இசை விரும்பி கேட்பேன். இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இசை ரொம்ப பிடிக்கும்.

* நடனத்தில் எப்படி?
முறைப்படி நடனம் கற்றுள்ளேன். பிரபுதேவாவின் நடனம் ரொம்ப பிடிக்கும். அவரை அடிக்கடி தொடர்பு கொண்டு 'வாழ்த்து தொல்லை' கொடுப்பேன்.

*வாழ்த்த விரும்பும் நடிகர்?
சிவகார்த்திேகயன். எந்தவிஷயமாக இருந்தாலும் கேஷூவலாக நடிப்பார்.
இவரை ttps://twitter.com//vjdiya ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement