Load Image
Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


நகத்தில் ஒரு கண்

உடல் உறுப்புகளில் கண் என்ற சொல் கண்ணைத் தவிர நகத்துக்கும் வழங்கப்படுகிறது. நகத்தை 'நகக்கண்' என கூறுவர். ஏனெனில் பார்க்கும் திறனற்றோர், கடும் இருட்டில் பார்க்க முடியாமல், வழி தெரியாமல் திண்டாடுவோர் பாதையைக் கண்டறிய விரலில் உள்ள நகத்தை தான்
பயன்படுத்துவர். அதனால் தான் வழி காட்டும் நகம், நகக்கண் எனப்பட்டது. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விரலில் நகம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல் எடையினால் கைவிரல் நகத்தைவிட கால்விரல் நகம் மெதுவாக வளர்கிறது.

தகவல் சுரங்கம்


குழப்பமான குடகு

உலக வரைபடத்தில், சீனாவால் தடை செய்யப்பட்ட நகரம், திபெத்தின் தலைநகர் லாசா. ஆனால் லாசாவை சென்று பார்க்கும் வாய்ப்பு தற்போது இல்லை. கர்நாடகாவில் குடகு மாவட்ட தலைநகர் மெர்க்கராவின் அருகில் உள்ள குஷால், 'தென் மாநிலங்களின் லாசா' எனப்படுகிறது. லாசாவைப் போல் அதிக எண்ணிக்கையில் திபெத்தியர்கள் வாழ்கின்றனர். திபெத்திய கலாசாரம் நிறைய தென்படுகிறது. திபெத்தியர்களின் பொற்கோயில் இங்கு உள்ளது. கர்நாடகாவா, திபெத்தா என குழப்பம் ஏற்படும் அளவிற்கு இங்கு காட்சிகள் உள்ளன. மஞ்சள், காவி நிற ஆடை அணிந்த திபெத்திய லாமாக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement