Advertisement

அரக்கோணம் ரயில் நிலையத்தில் மறியல்: போலீசார் தடியடி

வேலூர்: வேலூர் மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்ப வேண்டிய அனைத்து ரயில்களும் தாமதமாகின. இதனால், ஆத்திரமடைந்த பயணிகள், ரயில் நிலைய மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தண்டவாளத்தில் இறங்கி மறியல் போராட்டம் நடத்தினர். இதனையறிந்த போலீசார், அங்கு வந்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மறியல் செய்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement