Advertisement

இன்றைய(செப்.,14) விலை: பெட்ரோல் ரூ.72.97; டீசல் ரூ.61.87

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.97 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.87 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(செப்.,14) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 2 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.72.97 காசுகளாகவும், டீசல் விலை 3 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.61.87 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(செப்.,14) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (10)

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  ஜூலை மாதத்தில் இருந்து தற்போது வரை இரண்டு மாதத்தில் 6 ரூபாய் வரை பெட்ரோல் விலை,ரூ. 3.67 டீசல் விலை அதிகரித்துள்ளது, இந்த விலை உயர்வு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நிகழ்ந்து கொண்டிருக்கிறது, GST குள் கொண்டுவந்தால் 28 சதவிகித வரி தான் வரும் ஆனால் இப்போது 135 சதவிகிதம் வரி, கைத்தறி நூலிற்கும், காய்லாங்கடை கழிவிற்கும் , காய்கறிக்கும், அரிசி பருப்பிற்கும் GST ஆனால் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் GST இல்லை ஏன் என்றால் இவை கர்ப்பரேட்களின் தொழிலை பாதிக்கும் என்பதால் ,100 கோடி பேரிடம் 5 பைசா திருடினால் தப்பா என்று அந்நியன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் அதை இப்போதைய கார்ப்பரேட் மற்றும் அந்நிய நாடுகளின் கைக்கூலி அரசு செய்து கொண்டிருக்கிறது.

 • அமுதவாணன் - chennai,இந்தியா

  ஏழை மக்களின் ரத்தத்தை உறிஞ்சி பணக்காரனுக்கு புளொட் ரயில் வசதி. இது தான் மோசடி மோடியின். இது ஒரு மிக பெரிய பணக்காரர்கான அரசு.

 • Sweety - Tuticorin,இந்தியா

  திரு. மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் (மூன்று ஆண்டுகளுக்கு முன்) பெட்ரோல் , டீசல் விலை மூன்றில் ஒன்றாக உலக மார்க்கெட்டில் குறைந்தும், இந்தியாவில் மட்டும் அதற்க்கு சரிசமமாகவோ அல்லது சரி விகிதத்திலோ விலை குறையவில்லை. மாறாக கொஞ்சம் குறைந்து மீண்டும் விலை எகிறிக்கொண்டே போகிறது. ஐயா, ஏழைகள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள்இந்தியாவில் பிறந்தது பாவமா? அவர்கள் மீது கொஞ்சம் கூட இரக்கம் கிடையாதா? விலைவாசி வியர்வை கட்டுப்படுத்த என்ன செய்தீர்கள்? இந்த பெட்ரோல் , டீசல் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவிற்கு கிடைத்த மிகப் பெரும் லாபம் எந்த காரியத்திற்காக செலவிடப்பட்டது? எதனை இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்க பயன்படுத்தப்பட்டது? எதனை புதிய இண்டஸ்ட்ரி உருவாக்கப்பட்டது? பதில் சொல்லுங்கள் ஐயா.

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  154 டாலருக்கு 74 ரூபாயில் பெட்ரோல் எங்கே 54 டாலருக்கு 74 ரூபாய் பெட்ரோல் எங்கே , சிலிண்டர் 400 ரூபாயிலிருந்து 650 ரூபாய்க்கு புயல் பாச்சலில் காற்று நிரப்புவது எங்கே , 50 வருடத்தில் காங்கிரஸ் செய்யாததை 5 வருடத்தில் மோடி செய்த காரணமாக்களில் இதுவும் ஒன்று

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  இன்றும் பாஜக சொம்புகள் மற்றும் அப்ரசண்டிகள் வரமாட்டார்கள்...

 • ramesh - chennai,இந்தியா

  தினம் தினம் மக்கள் அறியாமல் அவர்களின் ரத்தத்தை சுரண்டிவருகிறது மோடி அரசு. ஆனால் அரசியல்வாதிகள் இதை கண்டுகொள்ளாமல் சாதாரண விஷயத்துக்காக போராடி வருகிறார்கள் .இப்படிய போனால் இன்னும் 6 மாதத்தில் பெட்ரோல் விலை 100 கடந்து விடும்.இது அவ்வுரங்கசீப் இந்துக்கள் மீது விதித்த வரியை விட அதிகமாக இருக்கும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  உயரவில்லை என்றால் தான் மனசுக்கு கஷ்டமாக இருக்கும்...

 • balakrishnan - coimbatore,இந்தியா

  மோடி அரசு மக்களை பல்வேறு விதங்களில் வாட்டி வதைக்கிறது, அதில் இந்த பெட்ரோல் விலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்,

 • Musthafa - Cuddalore,இந்தியா

  சூப்பர் இப்படியே போனால் பெட்ரோல் விலை 100 யை தாண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, மத்திய மாநில அரசு விலை குறைவாக உள்ளபோது அவர்களுடைய வரியை கூட்டிகொண்டே போனது இப்ப அதை குறைப்பதில் என்ன தாமதம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement