Advertisement

வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்துக்கும் 'ஆதார்' கட்டாயம்?

புதுடில்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்துக்கும், 'ஆதார்' கட்டாயமாக்கப்பட உள்ளது.

ஆதார்:வங்கி, 'காஸ்' மானியம், பான் கார்டு, சிம் கார்டு மற்றும் பல்வேறு நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு, ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 'சமூக நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு, டிச., 31க்குள் ஆதாரை பதிவு செய்ய வேண்டும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பரிந்துரை:இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்களுக்கு, ஆதாரை கட்டாயமாக்கும்படி, அமைச்சகங்களுக்கு இடையேயான கமிட்டி, மத்திய வெளியுறவுத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.


இதுகுறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை திருமணம் செய்யும் இந்திய பெண்களில் சிலர், கணவரால் கைவிடப்படுதல், வரதட்சணை கொடுமை ஆகியவற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இத்தகைய குற்றங்களில் ஈடுபடும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை கண்டுபிடிப்பதே கடினமாக உள்ளது.

இந்திய பெண்கள் மீதான குற்றங்களைத் தடுப்பதற்கு, வெளிநாடு வாழ் இந்தியர்கள், திருமணத்தை பதிவு செய்ய, ஆதாரை கட்டாயமாக்கும்படி, பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆதார் மூலமாக, குற்றச்செயல்களில் ஈடுபடும், வெளிநாடு வாழ் இந்தியர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (22)

 • Idithangi - SIngapore,சிங்கப்பூர்

  //இந்திய பெண்கள் மீதான குற்றங்களைத் தடுப்பதற்கு, வெளிநாடு வாழ் இந்தியர்கள், திருமணத்தை பதிவு செய்ய, ஆதாரை கட்டாயமாக்கும்படி, பரிந்துரைக்கப்பட்டுள்ளது// செய்தியை முழுவதும் படிக்காமல் கருது போடும் கருத்து கந்தசாமியை என்ன வென்பது..? இது இந்திய பெண்களை திருமணம் செய்யும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு. அவர்கள் திருமணம் முடிந்து ரெஜிஸ்டர் செய்யும்போது ஆதார் அவசியம். ஆதாரில் உள்ள கைரேகை மற்றும் கருவிழி படலம் போன்ற பயோ மெட்ரிக் தகவல்களை வைத்து வெளிநாட்டு அரசுகளுடன் பரிமாறி சட்டப்படி குற்றவாளிகளை பிடிக்கலாம். குறிப்பாக ஏமாற்றிவிட்டு செல்பவர்களை. நமது பாஸ்போர்ட்டில் தற்போது இந்த தகவல்கள் இல்லை. அப்ப்ளிகேஷன் பார்மில் கைரேகை வாங்குவது எலெட்ரோனிக் முறைப்படி சேமிப்பது இல்லை. பெரும்பாலான நாடுகளில் வேலைக்கு வருபவர்களின் பயோ மெட்ரிக் விவரங்களை சேகரித்து வைத்து உள்ளனர். இதன் நோக்கத்தை புரிந்துகொள்ளாமல் சகட்டு மேனிக்கு கமன்ட் போடுவது.

 • m.viswanathan - chennai,இந்தியா

  "ஆதார் மூலமாக, குற்றச்செயல்களில் ஈடுபடும், வெளிநாடு வாழ் இந்தியர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடியும்." உள்நாட்டிலேயே குற்றங்கள் செய்துவிட்டு, சிறையில் இருக்கும் பொழுது சகல வசதிகளையும் பெற வைக்கும் நாடு இது. ஒவ்வொரு அரசியல்வாதியும், அரசு அதிகாரிகளும் செய்யாத செயல்களா உருப்பட்ட மாதிரிதான், மக்களுக்கு எப்படியெல்லாம் பூ சுற்றுகிறார்கள்

 • Sami - Tirupur,இந்தியா

  மதத்தை வைத்து மக்களை மூடர்களாக்கும் கும்பலுக்கு மக்கள் (தமிழ் நாடு தவிர) ஆதரவு தந்ததின் விளைவை அனுபவிக்கிறார்கள். அதோடு சேர்த்து நாமும் அவதியுறுகிறோம். விரைவில் அங்கே மக்கள் போற்றும் ஒரு நல்ல ஆட்சியாளர் இன்றைய இளைஞர்களில் இருந்து வருவார் என்ற நம்பிக்கையில், காத்திருக்கிறோம். வாருங்கள் இளைஞர்களே, மதம் அல்ல வாழ்க்கை. நல்லாட்சியே மானுடம் சிறக்க நலம் தரும் வழி.

 • Sami - Tirupur,இந்தியா

  விமான பயணத்திற்கு கட்டாயமாகிறது ஆதார் (Jun, 8, 2017) என்ற செய்தி போட்ட அன்றே கருத்துப்பதில் "இனி திருமண செய்யக்கூட ஆதார் அவசியம் சட்டம் வரும்" என்று பதித்திருதேன். அது இன்று நிஜமாகிவிட்டது. இந்த வீணா போன பிஜேபி அரசால் நாட்டை விட்டு எங்காவது ஓடித்தொலையலாம் என்று தோணுகிறது. இவர்களை ஆட்சியை விட்டு அகற்றினால் தான் நாடு நன்றாக இருக்கும். முட்டாள் மக்கள் தேர்ந்தெடுத்த அரசால், ஓரளவேணும் சிந்திக்கும் தமிழ் நாட்டு மக்களையும் சேர்த்து கொடுமை படுத்தப்படுகிறார்கள். ஒழுங்கா அமையாய் வாழ முடியாமல் எல்லாத்துக்கும் போராட வேண்டுமென்றும் எனும் ஒரு அசாதாரண நிலை இந்த மதவாத சர்வாதிகார அரசால் இந்தியாவில் இப்பொழுது நிகழ்கிறது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  திருமணம் நலத்திட்டம் என்று மத்திய அரசு நினைக்கிறதா... ?

 • Sami - Tirupur,இந்தியா

  இந்த மாதிரி சட்டங்களை பார்க்கும் போது இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறதோ என்ற எண்ண தோன்றுகிறது. தமிழகத்தை தவிர மற்ற மக்கள் ஒரு தவறான கட்சிக்கு வாய்ப்பு கொடுத்து இந்தியாவை சீரழிக்க வைத்துவிட்டார்கள். எப்பொழுது பிஜேபி ஒழியுமோ அன்றுதான் சுதந்திர இந்திய மறுபடியும் மலரும். மற்ற மாநில மக்கள் செய்த தவறால், தமிழக மக்களும் சேர்ந்து அவதிப்படுகிறார்கள். மக்கள் நலன் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் செய்யாமல், வெட்டி வேலைகளில் இந்த மதவாத மற்றும் சர்வாதிகார ஆட்சியாளர்கள் திரிகிறார்கள். அதற்கான பாடம் விரைவில் அனுபவிப்பார்கள்.

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  எனது உறவுப் பெண்ணின் கணவர் அவளை ஏமாற்றி விட்டு வெளி நாட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறான். விவாகரத்து செய்யவதற்கு நீதி மன்ற ஆணையை பெறவும் மறுக்கிறான். இருக்கும் இடம் கண்டுபிடிக்க முடியவில்லை.அவர்களுக்கு ஆதார் இருந்தாயில் சிறிது பயம் வரும் .ஆனால் இதை செயலில் காட்டுவது எளிதல்ல

 • Narayanan Sklaxmi - chennai,இந்தியா

  ஆதார்கார்டு பாதுகாப்பானது இது இந்தியாவிலுள்ள சேர்வேரில் தான் பதிவு செய்ப்பபடும் வெளி நாட்டிலுருந்து யாராலும் அதில் நுழையமுடியாது என்றெல்லாம் பேசுவார் . வெளிநாடுகளில் வேலை செய்ய்யும் முகவரி சரியானதா என்பதை எப்படி உறுதிசெய்யமுடியும், இன்று ஒரு நாட்டிலும் அடுத்த வருடம் இன்னொரு நாட்டிலும் வேலை செய்யும் போது ஆதார் கார்டை மாற்றித் தருவர்களா , ஒருவர் வெளிநாட்டிருந்த மற்றொரு நாட்டிலிற்கு நேரடியாக சென்று வேலைக்கு போனால் என்ன செய்வர்கள். எல்லாவற்றிற்கும் மக்கள் தன் டேட்டா அப்டேட் செய்யச்சொல்வார்கள் அது சரியா என்பதை யார் பார்க்க போவார்கள் . OTP இந்தியா மொபைலில் தான்வரும் அப்போ இந்தியன் மொபைல் வைத்து அதற்கும் தண்டம் அழவேண்டும். ஒரு ஆதார் கார்டுக்கு ஒரு மொபைல் நம்பர் தான் இணைக்கமுடியும் ஆண்டவன் தான் இந்தமாதிரி ஆட்களுக்கு நல்ல புத்திதரணும்

 • PalaniswamyGnanam -

  மல்லையாவுக்கு ஆதார் கார்டு இருக்கு இல்லை P.Gnananam. pgnanam23@gmail.com Seattle WA USA

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  அப்படினா வெளிநாடு போகும் நபர்களின் பாஸ்போர்ட் தகவல்களை வைத்து அவரை பிடிக்கமுடியாதா? பாஸ்போர்ட் ஒரு டம்மி பீசா?

 • Kumar - Singapore,சிங்கப்பூர்

  ஓ செய்யலாமே ஆனால் அதுக்கு முன்னால வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதார் கார்டுக்கு பதிவு செய்ய அந்தந்த நாட்டு தூதரகங்கள்ல வசதி பண்ணி குடுங்க. இன்னொரு பிரச்சனை ஆதார் அடிப்படை நோக்கம் " Resident's Identity (even foreigners living in India can get.)" and not "Citizen's Identity". அப்படி இருக்கையில் வெளிநாடு வாழ் இந்தியர்களை "Non resident Indians" என்று அழைக்கிறோம். இப்ப தெளிவா சொல்லுங்க ஆதார் "resident ID " யா ? இல்ல "citizen ID" யா?

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  நலத்திட்டங்களில் சலுகைகளை பெற ஆதார் தேவை என்று சொன்னது போக, வருமான வரி கட்டுவதற்கும், வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைப்பதற்கும் என ஆதரின் தேவையை விரிவாக்கம் செய்வது பூர்த்தியாகும் தருணம் வந்துவிடும் போல் தோன்றுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஆதாரை பெற வெளிநாடுகளிலும் ஆதார் வழங்கும் மையங்கள் உருவாக்கப்படுமா அல்லது திருமணம் செய்துகொள்ள எண்ணம் படைத்த வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆதார் அடையாள அட்டை பெற இந்தியா வந்தாக வேண்டுமா? உச்சநீதி மன்றம் ஆதார் விவகாரத்தில் விரைவாக முடிவு சொல்லும்முன் காலை கடன்களை வீட்டுக்கு வெளியே (குறிப்பாக திரைப்பட அரங்குகள் மற்றும் விமான நிலையுங்களில்) கழிக்க ஆதார் அவசியம் என அரசாணை வருமுன் உச்சநீதி மன்றம் இந்திய குடிமகன்களின் நலம் காக்க விரைவில் ஆதார் எங்கெங்கெல்லாம் தேவை, எங்கு தேவை இல்லை என அறுதி இட்டு கூறும் நேரம் வருமா, வராதா?

 • Krishnamoorthy Venkataraman - Madurai,இந்தியா

  வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை கொடுப்பதில்லையே. பாண் கார்டு மட்டும் தானே பெறமுடிகிறது. அவர்களும் ஆதார் அட்டை பெற இப்போது ஏற்பாடு ஏதேனும் உண்டா?

 • Chidam - Chennai,இந்தியா

  வெளி நாட்டுலயும் நம்ம ஏன் போலீஸ் ஸ்டேஷன் ஓப்பன் பண்ண கூடாது ?

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  எக்கனாமிஸ் ஆஃன்ஸ் செய்த லலித் மோடி, மல்லையா போன்ற இந்தியர்கள் லண்டனில் சுகமான வாழ்க்கை வாழ்கிறார்கள். இவர்களுக்கு ஆதார் கார்டு இருக்கிறதா என்ன?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement