Advertisement

'நீட்' போராட்டம்: ரூ.5,000 அபராதம்

'நீட்' நுழைவு தேர்வுக்கு எதிராக, மாணவர்களை வலுக்கட்டாயமாக போராடச் செய்து, கலவரத்தை துாண்டும் விதமாக செயல்பட்ட, மாணவ - மாணவியருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்க, போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: 'நீட்' தேர்வுக்கு எதிராக, மாணவர்களை வலுக்கட்டாயமாக போராடச் செய்து, கலவரத்தை துாண்டிய, மாணவ - மாணவியருக்கு, சம்மன் அனுப்பி உள்ளோம். நேரில் ஆஜராக தவறினால், தலா, 5,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

ஆறு மாதத்திற்கான நன்னடத்தை பத்திரமும் தாக்கல் செய்ய வேண்டும்; அதில், இரண்டு பேர் ஜாமின் கையெழுத்து போட வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (25)

 • mukundan - chennai,இந்தியா

  கேரளா மாணவர்களிடையே உள்ள கெட்ட பழக்கம் இப்பொழுது தமிழக மாணவர்களுக்கும் வந்து விட்டது. எதற்கு எடுத்தாலும் தர்ணா போராட்டம் ஒரு தீர்வு ஆகாது.

  • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

   வரலாறு முக்கியம் அமைச்சரே... சாரி லீவு முக்கியம் அமைச்சரே...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இந்த அபராத தொகையை வசூல் செய்து அதை அரசியல்வாதிகளுக்கு கொடுத்தால் ஏதோ வந்தது வரை லாபம் என்று வைத்து கொள்ளுவார்கள்.. நீட் இல்லாமல் இருந்தால் கோடிக்கணக்கில் ஆட்டய போட்டு இருப்பார்கள்..

 • Ganesh Tarun - Delhi,இந்தியா

  தமிழகத்தில் இந்த 2017 ம் வருஷம் ஆரம்பத்தில் இருந்தே சமூக விரோத கும்பல்கள் எதற்கெடுத்தாலும் போராட்டத்தை தூண்டிவிட்டு கலவரம் செய்ய முயற்சிக்கிறார்கள். ஜல்லிக்கட்டு முதல் நீட் போராட்டம் வரை தமிழக மக்களிடம் தவறான தவகல்களை பரப்பி அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு கலவரம் உருவாக்க முயற்சிக்கிறார்கள். இதில் தமிழக பேஸ்புக் மற்றும் வாட்ஸாப்ப் மீம்ஸ்களின் பங்கு முக்கிய இடம் பெறுகிறது. அமைதியாக முடிக்க வேண்டிய ஜல்லிக்கட்டு பிரச்சனையை உணர்வுகளை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட வைத்தார்கள். அதுவும் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களோடு. மற்ற மாநிலங்கள் அமைதியாக நீட் பரீட்சை எழுதுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இதையும் கலவரமாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இந்த வருஷம் மாணவர்கள் என்று சொல்லிக் கொண்டு கலவரத்தை தூண்டும் நோக்கில் போராட்டம் செய்யும் தருதலைகளுக்கு 2011 முதல் 2016 வரை எந்த போராட்டம் செய்ய தைரியம் வரவில்லை. தமிழக அரசாங்கம் தமிழகத்தில் போராட்டங்களை தூண்டுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 • ilicha vaayan - chennai,இந்தியா

  மாணவர்களை போராட தூண்டியவர்களை முதலில் கவனியுங்கள் . இவர்கள் போராட்டத்தின் மூலம் போக்குவரத்து பாதிப்பு ஆம்புலன்ஸ் போக முடியாமல் சிரமம் . என்று பல இடையூறுகள் .அடுத்தவங்களுக்கு துன்பம் தராமல் இவர்களால் போராடவே முடியாது

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  பெற்றோர் செய்த தவறு பிள்ளைகள் தலையில். தங்களை ஆள சரியான ஆட்களை தேர்ந்தெடுக்க தெரியாததால் வந்த வினை.

 • Thiii - Chennai,இந்தியா

  போராடுவதர்கென்றே கூலிக்கு ஒரு கூட்டம் அலைகிறது.. அந்த கும்பலையும் புடிச்சு உள்ளபோடுங்க.. நாட்டின் சாபக்கேடுகள்..

  • மணி மாறன் - chennai,இந்தியா

   அடிமையாக இருப்பதிலேயே ஒரு கூட்டம் மகிழ்ச்சி அடைகிறது.

 • Thiii - Chennai,இந்தியா

  Good decision.. this need to apply politicians too..

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  நியாயமாகப் பார்த்தால் ஐம்பது லட்சம் அபராதம் போடணும் போராட்டத்த தூண்டிவிட தனியார் கல்லூரிகள் அதனைவிட அதிகம்தான் செலவழிக்கின்றன

  • Appu - Madurai,இந்தியா

   டே ஓடிரு..கடுப்பேத்தாத....

 • சிருதொண்டன்பரஞ்சோதி -

  கோர்ட் முகமூடி அணிந்த BJP இடீ அமீன்கள். இந்தியர்களிடம் அடக்குமுறையா???.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  "கேதான் தேசாய்" இந்த பெயரை மறந்திருக்க மாட்டீர்கள் ஆம், அவர்தான் வாஜ்பேய் காலத்தில் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கும் மருத்துவ கவுன்சில் தலைவர் பதவியை அலங்கரித்தவர் இவர்தான். சிபிஐ / வருமான வரித்துறையினர் இவர் வீட்டில் சோதனை நடத்திய பாேது பறிமுதல் செய்யப்பட்டது எவ்வளவு தெரியுமா ? மயக்கம் போட்டு விடாதீர்கள்.. 1300 கிலோ தங்கம், அது மட்டுமல்ல 850 கோடி ரூபாய் ரொக்கம் திருப்பதி ஏழுமலையானுக்கும் இவருக்கும் இந்த விடயத்தில் போட்டி .. சரி அதற்கென்ன இப்போது என்கிறீரா ? அந்தப்பாவி தான் தற்பாேது மோடியின் அரசாங்கத்திலும் " நீட் " தொடர்பான முக்கிய முடிவெடுக்கும் இடத்தி்ல் இருப்பவன் ... எப்படி நமக்கு நியாயம் கிடைக்கும் ????? மோடிக்கு ஊழல் பிடிக்காது. சிந்திப்பீர் குஜராத் பல்கலைக்கழகத்தின் (செனட் ) ஆட்சி மன்ற உறுப்பினராகவும் கேத்தன் தேர்ந்தெடுக்கப்படுகிறார். விஷயம் இத்தோடும் நிற்கவில்லை - குஜராத் செனட்டின் சார்பாக – திருவாளர் கேத்தன் மீண்டும் அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்… குஜராத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் சார்பாகவும், கேத்தன் தேசாய் – அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் இந்த நிகழ்வை – செனட் கூடி பத்தே நிமிடத்தில் முடித்து தன் முடிவை அகில இந்திய கவுன்சிலுக்கும் தெரிவித்து விடுகிறது. இத்தோடும் நிற்கவில்லை விஷயம் - இழந்துபோன தன்னுடைய செல்வாக்கை மீண்டும் பெற முயற்சி எடுத்த கிரேட் கேத்தன், உலக மருத்துவ கூட்டமைப்பின் WMA -World Medical Association தலைவராக போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார். இந்த உலக மருத்துவ கூட்டமைப்பில் – அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா போன்ற 109 உலக நாடுகள் அங்கம் வகிக்கின்றன. பிரேசில் நாட்டில் நடைபெற்ற கூட்டத்தில், இவரது பெயர் ஜப்பான் பிரதிநிதியால் முன்மொழியப்பட்டு - அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய பிரதிநிதிகளால் வழிமொழியப்பட்டு – போட்டியே இல்லாமல் WMA தலைவராக கேத்தன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.. இந்திய மருத்துவ கவுன்சிலால் – மருத்துவராகப் பணியாற்றும் லைசென்சே பறிக்கப்பட்டு, பதவி நீக்கம் செய்யப்பட்ட, 17 கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, திருவாளர் கேத்தன் தேசாய் – உலக மருத்துவ கூட்டமைப்பின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்… எப்பேற்பட்ட விந்தையிது … கேத்தனின் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் விஷயம், அவரது எதிர்ப்பாளர்கள் சிலரால் தெரிவிக்கப்பட்ட விஷயத்தை WMA நிலுவையில் வைத்திருந்தது. சென்ற மாதம், இந்திய மருத்துவ கவுன்சில் சார்பாக, கேத்தன் மீதுள்ள வழக்குகள் எல்லாம் விலக்கிக்கொள்ளப்பட்டு விட்டன என்றும், தற்போது அவர் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்றும் WMAக்கு ( பொய்யான தகவல் ) தெரிவிக்கப்பட, கேத்தன் பதவியேற்க அழைக்கப்படுகிறார்…. இவ்வாறு தவறான தகவலை எவ்வாறு தெரிவிக்கலாமென்று இதனை சுட்டிக்காட்டி, தட்டிக்கேட்ட – இந்திய மெடிகல் கவுன்சிலின் – லஞ்ச ஊழல் விவகாரங்களை விசாரிக்கும் பொறுப்பில் இருந்த, தலைமை கண்காணிப்பு அதிகாரியை, அந்தப் பதவியிலிருந்து இடமாற்றம் செய்து – தற்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் (பாஜக… ) உத்தரவிட்டிருக்கிறார். காங்கிரஸ் ஆண்டாலென்ன – பாஜக ஆண்டாலென்ன … கேத்தனுக்கு எங்கும் godfathers இருக்கிறார்கள்…. அவ்வளவும் உண்மை👌👌👌👆👂

  • dinesh - pune,இந்தியா

   சும்மா சொல்லக்கூடாது. ரொம்ப நல்லாவே கதை ஏத்துறீங்க(உடுறீங்க). வாழ்த்துக்கள்.

  • ஜெயந்தன் - Chennai,இந்தியா

   மிக சரி..முற்றிலும் உண்மை.....

 • Krishnamoorthy Venkataraman - Madurai,இந்தியா

  எனக்கு அரசின் ஒரு கொள்கையோ, உதிராவோ பிடிக்கவில்லையென்றால் ஏன் வெறுப்பை எப்படி காட்டுவது. ஒரு மாநில அரசு அனுப்பும், நிறைவேற்றப்பட்ட மசோதாக்களையே படித்து,பதில் பெற முடியாத நிலையில் அரசியல் நடக்கும்போது மக்கள் என செய்யவேண்டும் என தெளிவாக சொல்லுங்கள். ஏன் மக்கள் பிரதிநிதியை ஆறுமாதங்களாக சந்திக்கவே முடியவில்லை. என்னை தடை செய்ய,கைது செய்ய ஆயிரம் வஷிகள் இருக்கும்போது என்கருத்தை சொல்லி அரசின் கவனத்தை ஈர்க்க நான் என்னசெய்யவேண்டும்.

  • VETRI VENDHAN - Vellore,இந்தியா

   அதற்கு காந்தி பின்பற்றிய அஹிம்சை வழியை பின்பற்றினால் வெற்றி கிடைக்கும்.

  • மணி மாறன் - chennai,இந்தியா

   இப்போ இங்கே என்ன கோட்ஸே வழியையா பின்பற்றுகிறார்கள்...இல்லை ஹரியானாவில் அநியாயத்திற்கு ஆதரவாக போராடினார்களே அது போல் நடக்கிறதா??

  • மணி மாறன் - chennai,இந்தியா

   ஐயா நீதிமான்களே..... நீங்கள் உத்தரவு போட்டு தண்ணீர் தர முடியாது என்ற சித்தாராமையாவிற்கு இப்படி தண்டனை கொடுத்திருந்தால் உங்களை பாராட்டலாம். அதிகாரத்தில் இருப்பவர்களை கண்டு நீங்கள் அஞ்சுகிறீர்கள். அப்பாவிகளை மட்டுமே உங்களால் தண்டிக்க முடிகிறது. வாழ்க நீதி துறை...

  • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

   அமைதியாக போராடினால் போலீஸ் மிரட்டுகிறார்கள்....அரசியல்வாதிகள் மிரட்டுகிறார்கள்...அமைச்சர்கள் மிரட்டுகிறார்கள்...அதிகாரிகள் மிரட்டுகிறார்கள்...இப்போது நீதித்துறையும் மிரட்டுகிறது...மக்களை அடிமைப்படுத்த எல்லோரும் ஒன்று சேர்ந்து விட்டார்களோ

 • vns - Delhi,இந்தியா

  ஐந்து லக்ஷம் அபராதம் விதிக்க வேண்டும். பெற்றோரின் பணத்தை போராட்டத்தில் செலவிடும் இவர்கள் தங்களை மகன்,மகள் என்று கூறிக்கொள்ளவே தகுதி அற்றவர்கள்

  • muthu - tirunelveli,இந்தியா

   FIRST TEACH FOR NEET & THEN CONDUCT EXAM . RICH CAN STUDY BY PASYING . WHAT ABOUT POOR

  • VETRI VENDHAN - Vellore,இந்தியா

   மாணவர்கள் படிக்கும் காலத்தில் படிப்புடன் நூலகம், இன்டர்நெட் வழி பயிற்சி ஆகியவற்றின் மூலம் தேடல் ஆகியவை நீட் மட்டுமல்ல எந்தவொரு தேர்வுக்கும் வெற்றிபெற வழிவகுக்கும். அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் நீட் தேர்வில் சாத்திருக்கிறார்கள், மற்றவர்களும் முயற்சி செய்தால் சாதிக்கலாம். இப்போது நீட்டுக்காக போராடுபவர்கள் ஏழை மாணவர்களுக்கு வழிகாட்டினால் தமிழ்நாட்டின் மொத்த மருத்துவ இடங்களை தாண்டிவெளிமாநிலங்களில் கூட இடம் பிடிக்கலாம். HELPING HANDS ARE BETTER THAN PRAYING LIPS.

  • Vittalanand - ,

   These students were induced to agitate by politicians who failed to extract cuttings in getting admissions in medical seats on account of NEET . Were entire 100 % students were dalits ? If they were really interested to get seats for rural dalits they would have asked for a separate dalit quota for entire dalit community of the nation but they wanted 100 %/ reduced to 85 % for tamilnadu. The motive is not CBSE VS state board but purely getting bribes for allotment of medical seats on the cover of dalits. Anita willingly attended NEET duly knowingly that she could get seat only on successful result and she could was abetted to commit suicide by the interested to raise a political issue and she fell victim. If these so called dalit mentors were interested to get preference in ion, they would have asked for grace marks over what they scored n NEET, that would have been common for whole India. Note that there are NEET scorers in other states as also some from Tamilnadu.

 • lakshmanan k - bangalore,இந்தியா

  இந்த மாதிரி கேவலமா மெரட்டுறதுக்கு தூக்குல தொங்கலாம் நீங்க.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement