Advertisement

லாலுவின் மூத்த மகன் மீதும் வழக்கு

பாட்னா: தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், சொத்து விபரங்களை மறைத்ததாக, லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன், தேஜ் பிரதாப் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

லஞ்ச வழக்கு:



பீஹாரில், முதல்வர், நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வே துறை ஓட்டல்களை குத்தகைக்கு வழங்கியதில், லஞ்சம் பெற்றதாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.

வழக்கில் இளைய மகன்:



இந்த வழக்கில், லாலுவின் மனைவி ரப்ரி தேவி, மகளும், எம்.பி.,யுமான, மிசா பார்தி மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கில், லாலுவின் இளைய மகனும், பீஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

மூத்த மகன் மீதும்...



இந்நிலையில், லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனும், பீஹார் முன்னாள் அமைச்சருமான, தேஜ் பிரதாப் யாதவ், 2015 சட்டசபை தேர்தலின்போது, வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், சொத்து விபரங்களை மறைத்ததற்காக, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, வழக்கு தொடரப்பட்டுள்ளது. பா.ஜ.வைச் சேர்ந்த, எம்.எல்.சி.,யான, சுராஜ் நந்தன் பிரசாத், பாட்னா முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    லாலு வீட்டையே சிறைச்சாலையாக மாற்றிவிட்டால்.. தனி தனியாக கைது செய்ய தேவை இல்லை...

  • உஷாதேவன் -

    நல்ல தொரு குடும்பம் பல் கொள்ளை கழகம் ( லாலுவின் மூத்த மகன் மீது) பகுதிக்கு கருத்துப் பதிவு 14-9-2017.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    எல்லையில்லாமல் கொள்ளை அடித்தால் இதுதான் நடக்கும்...

  • Rpalnivelu - Bangalorw,இந்தியா

    நம்ம கட்டுமர கம்பெனிக் கட்சியின் முதலாளி, வாரிசுகளிடம் வந்து விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வது எப்படி என்று அறிந்து செல்லவும்.

  • ilicha vaayan - chennai,இந்தியா

    அருமை லாலுவின் குடுமப மகிமையை உலகத்திற்கு காண்பியுங்கள் இவங்க அடிச்ச காச வெச்சே பீகார்ல கல்வி 100 % குடுக்கலாம் போல இருக்கே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement