Advertisement

குமரியில் மழை வலுக்கிறது அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் மழை வலுக்கிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் மாவட்டம் வறட்சி பாதைக்கு சென்று கொண்டிருந்தது. 48 அடி கொள்ளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 6 அடியாக சரிந்த நிலையில் அணைமூடப்பட்டது. மூவாயிரம் எக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிரின் நிலை கேள்விக்குறியானது.
இந்நிலையில்தான் வடகிழக்கு பருவமழை சற்று முன்னதாக பெய்ய தொடங்கியது. பெரிய அளவில் வேகமாக பெய்யாவிட்டாலும் சீரான இடைவெளியில் தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று அதிகாலை 5.00 மணி முதல் மாலை வரையிலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது.
இதனால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது. பேச்சிப்பாறை அணை 15 அடியை எட்டியுள்ளது. 77 அடி கொள்ளவு கொண்ட பெருஞ்சாணியில் 38.10 அடி தண்ணீர் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து மைனஸ் லெவலில் இருந்து பிளஸ் லெவல் நோக்கி செல்கிறது.
மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் இதமான காலநிலை நிலவுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement