Advertisement

கன்னியாகுமரி கடல் பகுதியில் நேற்று "சஜாக்'பாதுகாப்பு ஒத்திகை

நாகர்கோவில், கன்னியாகுமரி கடல் பகுதியில் நேற்று தீவிரவாதிகள் கண்காணிப்புக்காக 'சஜாக்' ஒத்திகை நடைபெற்றது.
கடல் வழி தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்கும் வகையில் கடலோர காவல்படையின் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் அடிக்கடி "ஆபரேஷன்' என்ற பெயரில் பல்முக கண்காணிப்பு நடைபெறுகிறது. நேற்று "சஜாக்' என்ற பெயரில் இந்த பாதுகாப்பு ஒத்திகை கூடங்குளம் முதல் நீரோடி வரையிலும் நடைபெற்றது.
ரோந்து படகுகளில் கடலோர காவல் படை போலீசார் ஆழ்கடலில் சென்று படகுகளை சோதனையிட்டனர். படகுகளின் உரிமம், மீனவர்களின் அடையாள அட்டை போன்றவை பரிசோதிக்கப்பட்டது. பைனாகுலர் மூலம் தொலைதூரமும் கண்காணிக்கப் பட்டது. சந்தேகப்படும் படகுகள் வந்ததா என மீனவர்களிடம் கேட்கப்பட்டது.
காலை 7.00 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை 5.00 மணி வரையிலும் நீடித்தது. இந்த நேரத்தில் கடற்கரை கிராமங்களில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு வாகன தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement