Advertisement

எம்.எஸ்., நினைவு நாணயம் மத்திய அரசு முடிவு

புதுடில்லி : கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: கர்நாடக இசைக் கலைஞரான, மறைந்த, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நாள் நுாற்றாண்டு நிறைவு பெறுவதையொட்டி, அவரது நினைவாக, அவர் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிடும்படி கோரிக்கை வந்தது. இதையேற்று, சுப்புலட்சுமியின் உருவம் பொறித்த, 10 மற்றும், 100 ரூபாய் நாணயங்களை வெளியிட அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

    ஆஹா அருமையான நல்ல முடிவு. அந்த நாணயங்கள் கௌரவ படுத்த பட்டுள்ளன.....முதலில் இவருக்கும், அப்துல் கலாம் அவர்களுக்கும் மற்றும் வாஜ்பாய் அவர்களுக்கும் பாரத ரத்னா கொடுத்ததன் மூலமா அந்த விருதுக்கு ஒரு விருதுக்கு ஒரு கௌரவம் கிட்டியது...இப்போது அந்த நாணயங்களுக்கு கிடைக்கிறது.

  • உஷாதேவன் -

    காற்றில் கலந்த கீதம்.நினைவு நாணயம்.மகிழ்ச்சி.

  • ilicha vaayan - chennai,இந்தியா

    நல்ல செய்தி வாழ்த்துக்கள் பக்தி உலகின் இசை வள்ளல் MS அம்மா . அவர்களை நினைத்தாலே பக்தி வெள்ளம் பெருகும். நாணயவடிவில் அவர் உருவத்தை பார்ப்பதற்கு ஆவல்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement