Advertisement

கங்கையில் குப்பை போடுவோரை புகைப்படம் எடுத்து அனுப்பினால் பரிசு

ருத்ரபிரயாகை: கங்கை நதியை துாய்மையாக்கும் திட்டத்தின் கீழ், நதியில் குப்பை போடுபவர்களை புகைப்படம் எடுத்து அனுப்புவோருக்கு பரிசு வழங்க, உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாகை நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நடவடிக்கை:உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ருத்ரபிரயாகையில், புனித கங்கை நதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில், குப்பை போடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், ருத்ரபிரயாகை நகர நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

500 ரூபாய் பரிசு:இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, கலெக்டர் மங்கேஷ் கில்டியால் கூறியதாவது: நதியில் குப்பை போடுவோர் மீது வழக்கு பதிவு செய்து, சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நதி மற்றும் கரையோரங்களில் குப்பை போடுபவர்களை புகைப்படம் எடுத்து, அனுப்புவோருக்கு, 500 ரூபாய் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (15)

 • JAYARAMAN - CHENNAI,இந்தியா

  Just i want to know how much of water goes to the sea, from ganges, per month.

 • Sekar KR - Chennai,இந்தியா

  இதுபோன்று ஹெல்மெட் இல்லாமல் செல்பவர்கள் , செல்போன் பேசிக்கொண்டு செல்பவர்கள் வாகன எண்ணுடன் புகைப்படம் எடுத்து அனுப்பச்சொல்லுங்கள். அந்த அவர்களுக்கு அபராதம் விதியுங்கள்.

 • Arivukkarasu -

  Good idea pay 500nd fine 5000.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இதுக்கு எதனை கோடி? ஏற்கனவே கங்கை சுத்தமா இல்லேன்னு எல்லோரும் சொல்றாங்க..அதுல போட்ட ஸ்வச் பணமெல்லாம் எங்க போச்சு..அத சொல்லுங்க ..அப்போதான் ஸ்வச் cess வசூல் பண்ண முகாந்திரம் இருக்கும்..

 • srisubram - Chrompet,இந்தியா

  நதியோர ஆக்கிரமிப்பு, தொழிற்சாலை கழிவுகள், வீடுகளின் கழிவு நீர், ஆற்று மண் கொள்ளையடித்தல் போன்றவற்றை நிறுத்தினாலே அனைத்து நதிகளும் தூய்மை ஆகும். மற்றவை எல்லாம் வீண் .

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நல்லது ..எவ்வளவு முன்னேற்றம் அடைகிறது என்று பார்ப்போம்...

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  குப்பை போட்டால் தண்டனை, தொழில்சாலை கழிவுகள், கழிவுநீர் போடுபவர்களுக்கு என்ன தண்டனை? தொழில்சாலைங்களுக்கு மூடுவிழா நடக்குமா? எல்லாம் ஏழைகளின் வயிற்றில் தான் அடி.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இதெல்லாம் ஒரு திட்டமா, தொழில் நுட்ப ரீதியில் கங்கை நதியை சுத்தப்படுத்த அரசின் வசம் எந்த திட்டமும் இல்லை, ஆதலால் என்ன செய்வது என்றே தெரியாமல் புதிது புதிதாக ஏதாவது செய்கிறார்கள், ஆனால் கங்கை சுத்தமானதாக தெரியவில்லை, இதுக்காக செலவு செய்த தொகை எல்லாம் வேஸ்ட் ஆனது தான் மிச்சம், ஸ்வச் பாரத் திட்டம், குப்பையில்லா நாடு, சரி, அந்த குப்பைகளை என்ன செய்வது, அதற்கு அரசிடம் திட்டம் இல்லை, அடிப்படையில் அரசுக்கு ஒரு திட்டமான நோக்கம் இல்லாத காரணத்தினால் தான் மோடி அவர்களின் அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் தோல்வியை நோக்கி பயணம் செய்கிறது

 • JAYARAMAN - CHENNAI,இந்தியா

  If everybody start wandaring with camera, for this, will it not another problem.

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  குப்பையில் இருப்பவர்களை படம் எடுத்து அனுப்பினால் அதற்கு பிரைஸ் கொடுக்கலாமே.

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  நல்லது. இதை மட்டும் செய்தால் போதுமா , மாசு நீர் கழிவு நீர் கலக்கிறதே . அதையும் சரி செய்யுங்கள்

 • Mano - Madurai,இந்தியா

  நம்ம மக்களை திருத்துவது என்பது, நாய் வாலை நிமிர்த்துவதற்கு சமம். என்ன சட்டம் பாேட்டாலும் யாராலும் ஒன்னும் முடியாது.

 • N. Sridhar - Kanchipuram

  இது வஞ்ச புகழ்ச்சி அணியா?

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  குப்பை என்றால் என்ன என்று தெளிவாக சொல்லவேண்டும் . மேல உள்ள படத்தில் பூஜை பொருட்கள் போல உள்ளது .

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  மூன்று வருடம் முன்பு ஒருவர் "தூய்மை கங்கை திட்டம்" என்று பல ஆயிரம் கோடி ஒதுக்கினாரே அது (பணமும், திட்டமும்) என்னவாயிற்று? (எது செல்லாத நோட்டாகி விட்டதா? அப்ப சரி).

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement