Advertisement

இளம் தலைமுறைக்கு தொழில் ஊக்குவிப்பு முகாம்

சென்னை: புதிதாக தொழில் துவங்க நினைக்கும் இளைஞர்கள், இளம்பெண்களுக்கான, தொழில் ஊக்குவிப்பு முகாம், செப்., 18ம் தேதி சென்னையில் நடக்கிறது.
மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம், காஞ்சி மாவட்ட தொழில் மையம் ஆகியவை இணைந்து நடத்தும் தொழில் ஊக்குவிப்பு முகாம், சென்னை, கோவூர் - குன்றத்துார் சாலையில் உள்ள, ஸ்ரீ அம்பாள் அகாடமியில், செப்., 18ம் தேதி காலை, 8:00 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்க உள்ளது.இம்முகாமில், 25 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, தொழில் துவங்க ஆலோசனை வழங்கப்படும். உணவு, பேக்கரி பொருட்கள் தயாரித்தல், மத்திய, மாநில அரசின் கடனுதவி பெறுவது குறித்து, ஆறு வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும்.தொழில் துவங்க விருப்பமுள்ள இளைஞர், இளம்பெண்கள், இந்த இலவச முகாமில் பங்கேற்கலாம். விருப்பமுள்ளோர், செப்., 18ம் தேதி காலை, 9:30 மணிக்கு, நேரில் வந்து பதிவு செய்துக் கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலைய உதவி இயக்குனரை, 73581 22100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement