Advertisement

நாகர்கோவில் - எழும்பூர் ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தல்

'நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க வேண்டும்' என, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்கம், வலியுறுத்தி உள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து, வியாழன் தோறும், மாலை, 6:55க்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 8:10 மணிக்கு நாகர்கோவில் ஜங்ஷன் சென்றடையும் வகையில், வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில், நாகர்கோவிலில் இருந்து, வெள்ளி தோறும், மாலை, 5:05க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 5:45க்கு, சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயிலில், எப்போதும் பயணியர் கூட்டம் அதிகம் இருக்கும். படுக்கை வசதிக்கு முன்பதிவு செய்து, தினமும், 200க்கு மேற்பட்டோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.அதனால், இந்த ரயிலை தினசரி இயக்க வேண்டும் என, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்கத்தினர், ரயில்வே நிர்வாகத்திற்கு தொடந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தெற்கு ரயில்வேயின், ரயில் கால அட்டவணை, அக்டோபர், 1ல் வெளியிடப்பட உள்ளது.அதில், நாகர்கோவில் - சென்னை வாராந்திர எக்ஸ்பிரசை, தினசரி ரயிலாக மாற்றும் அறிவிப்பு வெளியாகும் என, பயணியர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement