Advertisement

குழாய் வால்வுகள் திருட்டு குடிநீர் வினியோகம் பாதிப்பு

செங்குன்றம்: குடிநீர் குழாயின் பித்தளை வால்வுகளை திருடியதால், ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.சென்னை, செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் ஊராட்சி, ஜவஹர்லால் நகரில், 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அதற்கான நீரேற்று குழாயில் இருந்த பித்தளை வால்வை, மர்மநபர்கள் அறுத்து, திருடிச் சென்றனர்.இதனால், மறுநாள் காலை, அதிகளவில் குடிநீர் வெளியேறி வீணாகியது. குடிநீர் கிடைக்காமல் தவித்த பொதுமக்கள், ஊராட்சி நிர்வாக உதவியாளரிடம் புகார் செய்தனர். இதையடுத்து, மறுநாள் புதிய வால்வு வாங்கி பொருத்தப்பட்டது. அதையும், அன்றிரவே, மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இந்நிலையில், ஒரு வாரமாக குழாய் சீரமைக்கப்படாமல் கிடக்கிறது. இதனால், ஜவஹர்லால் நகருக்கான குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.குழாய் வால்வு திருட்டு குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement