Advertisement

வாகனங்கள் அணிவகுப்பு போக்குவரத்து ஸ்தம்பிப்பு

துரைப்பாக்கம்: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இயந்திரங்கள் பழுதடைந்ததால், ராஜிவ் காந்தி சாலையோரம், கழிவுநீர் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சென்னை, ராஜிவ் காந்தி சாலை பெருங்குடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லுார், சிறுசேரி உள்ளிட்ட பகுதிகளில், அரசியல் பிரமுகர்கள் அல்லது அவர்களது உறவினர்களுக்கு சொந்தமான, 100க்கும் மேற்பட்ட கழிவுநீர் வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதே போல், கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம், பனையூர், உத்தண்டி பகுதிகளிலும் ஏராளமான கழிவுநீர் வாகனங்கள் இயங்கி வருகின்றன.இந்த வாகனங்கள், குடியிருப்புகள் மற்றும் வணிக வளாக தொட்டியில் இருந்து கழிவுநீர் எடுத்து, பெருங்குடியில் உள்ள நிலையத்தில் சுத்திகரித்த பின், கால்வாயில் விடப்படுகிறது. நேற்று முன்தினம், பெருங்குடி சுத்திகரிப்பு நிலையத்தில் இயந்திரங்கள் பழுதானதால், சுத்திகரிப்பிற்கு கழிவுநீர் கொண்டு வந்த வாகனங்கள், பெருங்குடி கார்ப்பரேஷன் சாலையில் இருந்து ராஜிவ்காந்தி சாலை துரைப்பாக்கம் சிக்னல் வரை, சாலையோரம் நிறுத்தப்பட்டன. இதனால், நீண்ட நேரமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. மேலும், கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement